பித்தளை பூஜை பாத்திரங்களை தேய்க்க கை வலிக்க இனி கஷ்டப்படவே வேண்டாம். ஈஸியான இந்த ஐடியா மட்டும் தெரிந்தால், 5 நிமிடத்தில் உங்க விளக்கு சும்மா தங்கம் போல மின்னும் பாருங்க.

- Advertisement -

பொதுவாகவே பூஜை பாத்திரங்களை தேய்ப்பது என்பது கொஞ்சம் சிரமமான விஷயம்தான். விளக்கில் ஊற்றி இருக்கும் எண்ணெய், விளக்கு ஏற்றக்கூடிய இடத்தில் இருக்கும் கருப்பு நிறம், இவைகளை எல்லாம் அவ்வளவு எளிதாக தேய்ந்துவிட முடியாது. அதிலும் இந்த பித்தளையை, பளப்பளக்கும் படி தேய்க்க ரொம்பவும் சிரமமும் இருக்கத்தான் செய்யும். இதற்கு ஒரு ஈஸியான ஐடியா இருக்கு. அந்த ஐடியாவை தெரிஞ்சு வச்சுக்கோங்க. ஒரு முறை உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க. பிடித்திருந்தால் இதே குறிப்பை பின்பற்றி உங்க வீட்டு பூஜை பாத்திரங்களை வாராவாரம் சுலபமாக தேய்க்கலாம்.

பூஜை பாத்திரங்களை கை வலிக்காமல் தேய்க்க சுலபமான ஐடியா:
இதற்கு நமக்கு தேவையான பொருள் என்ன தெரியுமா. கம்ப்யூட்டர் சாம்பிராணி வத்தியை ஏற்றிய பிறகு மிச்சம் இருக்கும் அல்லவா சாம்பல். அந்த சாம்பல் தான் தேவை. அப்படி இல்லை என்றால் உங்கள் வீட்டில் ஊதுவத்தி ஏற்றினாலும், அதை தட்டின் மேல் வையுங்கள். ஊதுவத்தியின் சாம்பல் எல்லாம் அந்த தட்டிலேயே கொட்டி விடும். அந்த சாம்பலை எல்லாம் தூக்கி குப்பையில் கொட்டாதிங்க. எடுத்து ஒரு டப்பாவில் ஸ்டோர் செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -

எடுத்து வைத்திருக்கும் கம்ப்யூட்டர் சாம்பிராணி சாம்பலை, ஒரு கிண்ணத்தில் தேவையான அளவு போட்டுக் கொள்ளுங்கள். இந்த சாம்பலில் சிறிதளவு எலுமிச்சம் பழச்சாறு, சிறிதளவு விம் லிக்விட் ஊற்றி கலந்து கொள்ள வேண்டும். இந்த பேஸ்ட்டை தொட்டு லேசாக உங்களுடைய பித்தளை விளக்கை தேய்த்துப் பாருங்கள். அப்படியே உடனடியாக அந்த பித்தளை விளக்கு பளபளப்பாக மாறிவிடும்.

ரொம்ப ரொம்ப ஈஸியான ஐடியா தாங்க. அதே போல, விளக்கை தேய்ப்பதற்கு முன்பு அதில் இருக்கும் எண்ணெய், குங்குமத்தை எல்லாம் ஒரு பேப்பரை வைத்து சுத்தமாக துடைத்து எடுத்துவிட்டு, பிறகு தேய்த்தால் சுத்தம் செய்ய ஈசியாக இருக்கும். இப்படியாக தேய்த்த அந்த விளக்கை உடனடியாக தண்ணீரில் கழுவி விட வேண்டும். கழுவிய அந்த விளக்கை மீண்டும் ஒருமுறை நல்ல தண்ணீரில் கழுவுங்க.

- Advertisement -

உப்பு தண்ணீரில் கழுவும் போது விளக்கு சீக்கிரம் கருத்து போக வாய்ப்பு உள்ளது. நல்ல தண்ணீரில் கழுவினாலும் அந்த விளக்கை உடனடியாக ஒரு காட்டன் துணியை வைத்து துடைத்து விட வேண்டும்.

இதையும் படிக்கலாமே: இந்த ஸ்ப்ரேவை ஒரு முறை அடித்தால் போதும். உங்க வீட்டு சமையலறையில், பல்லி இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் ஓடி ஓடி தொல்லை கொடுக்கவே கொடுக்காது. இனிமேல் பயம் இல்லாமல் சமைக்கலாம்.

பிறகு மங்களகரமான உங்கள் வீட்டு விளக்குக்கு மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து விளக்கு ஏற்றி பாருங்கள் மனது அவ்வளவு திருப்தியாக இருக்கும். இந்த வீட்டு குறிப்பு பிடித்தவங்க ட்ரை பண்ணி பார்க்கலாம்.

- Advertisement -