இந்த ஸ்ப்ரேவை ஒரு முறை அடித்தால் போதும். உங்க வீட்டு சமையலறையில், பல்லி இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் ஓடி ஓடி தொல்லை கொடுக்கவே கொடுக்காது. இனிமேல் பயம் இல்லாமல் சமைக்கலாம்.

palli
- Advertisement -

சில பேர் வீடுகளில், சமையலறையில் அடுப்பில், பாத்திரத்தை வைத்து, திறந்தபடி எதையும் சமைக்கவே முடியாது. ஒரு சாம்பார் வைத்தால் கூட, சாப்பாடு வேகும் போது கூட, அதில் பல்லி விழுந்து விடுமோ என்ற பயம் இருக்கும். அந்த அளவுக்கு டியூப் லைட் பக்கத்தில், சுவற்றுக்கு பக்கத்தில், பல்லி ஓடி ஓடி தொல்லை கொடுக்கும். சில பேர் வீடுகளில் ஃப்ரிட்ஜுக்கு கீழே, பீரோவுக்கு கீழே, கட்டிலுக்கு கீழே சுவற்றில் மாட்டி வைத்திருக்கும் புகைப்படங்களுக்கு பின்னால் இப்படி பல்லி ஒளிந்து கொள்ளும். இந்த பிரச்சனையில் இருந்து விடுபட ஒரு எளிமையான வீட்டுக் குறிப்பு இதோ உங்களுக்காக.

பல்லி தொல்லை நீங்க எளிமையான வீட்டு குறிப்பு:
ஒரு அகலமான பவுல் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் 1 டம்ளர் தண்ணீரை ஊற்றிக் கொள்ளவும். இதோடு ஒரு மூடி டெட்டாலும் ஊற்றவும். வெங்காய சாறு 2 டேபிள் ஸ்பூன் அளவு ஊற்ற வேண்டும். மீடியம் சைஸில் இருக்கும் வெங்காயத்தை பாதி எடுத்துக் கொள்ளுங்கள். தோல் உரித்து அதை பொடியாக நறுக்கியோ, ஒரு உரலில் போட்டு இடித்தோ, பிழிந்தால் சாறு மட்டும் உங்களுக்கு கிடைக்கும் அல்லவா. அதை அந்த டெட்டால் தண்ணீரில் ஊற்றி கலந்து கொள்ளவும்.

- Advertisement -

இப்போது நமக்கு தேவையான ஸ்பிரே தயார். இதை ஒரு ஸ்பிரே பாட்டிலில் ஊற்றி உங்கள் வீட்டு சுவற்றில் அடிக்க வேண்டியதுதான். குறிப்பாக சமையலறையில் ஸ்டவ்க்கு பின்னால் இருக்கும் சுவற்றில், டியூப் லைட்டுக்கு கீழேயும் இந்த ஸ்பிரேவை அடித்து விடுங்கள். இந்த வாசத்திற்கு பல்லி அந்த இடத்தில் வந்து மீண்டும் மீண்டும் தொந்தரவு கொடுக்காது.

இதே ஸ்ப்ரேவை பீரோவுக்கு கீழே கட்டிலுக்கு கீழே இப்படி எல்லா இடத்திலும் அடித்து விடவும். இந்த வாசம் போய்விட்டால் மீண்டும் பல்லி வரும். ஆகவே, மூன்று நாட்களுக்கு ஒரு முறை இந்த ஸ்பிரேவை அந்த பள்ளி வரும் இடங்களில் எல்லாம், தொடர்ந்து அடித்துக் கொண்டே இருந்தால் பல்லி தொல்லை நிரந்தரமாக நீங்கும்.

- Advertisement -

நாம் தயார் செய்து வைத்திருக்கும் இதே லிக்விடை கொஞ்சம் போல ஒரு கிண்ணத்தில் தனியாக எடுத்துக் கொள்ளுங்கள். அதில் தனி மிளகாய் தூள் 1 ஸ்பூன், காரம் நிறைந்த மிளகாய்த்தூளை போட்டு கலந்துக்கோங்க. இப்போது இந்த தண்ணீரில் காட்டன் பஞ்சு அல்லது டிஷ்யூ பேப்பர் அல்லது காட்டன் துணி எதையாவது முக்கி எடுத்துக் கொள்ளுங்கள். டெட்டால் வாசமும், வெங்காய சாறு வாசமும், மிளகாய் தூள் நெடியும், நிறைந்த இந்த தண்ணீரில் முக்கி எடுத்த துணிகளை சின்ன சின்ன தட்டில் வைத்துக் கொள்ளவும்.

பிளாஸ்டிக் தட்டு, பிளாஸ்டிக் கிண்ணம் இப்படி எதில் வேண்டுமென்றாலும் வைக்கலாம், அதை அப்படியே கொண்டு போய் பீரோவுக்கு அடியில் பிரிட்ஜுக்கு அடியில் வைத்தால் கூட சின்ன சின்ன கொசு பிரச்சனை பல்லி பிரச்சனை, கண்ணுக்கு தெரியாத சின்ன சின்ன பறக்கும் வண்டுகளின் பிரச்சனை இருந்தாலும் அதெல்லாம் நீங்கிவிடும். இரவு தூங்க செல்வதற்கு முன்பாக இந்த காரம் நிறைந்த தண்ணீரில் நனைத்த டிஷ்யூ பேப்பரை சமையலறையில் ஸ்டவ்க்கு பக்கத்தில் வைத்தால் கூட கரப்பான் பூச்சி தொல்லை இருக்காது.

இதையும் படிக்கலாமே: பூஜை பாத்திரங்களை கை வலிக்க தேய்க்காம சிறிது நேரம் இதில் ஊற விட்டு எடுத்தா போதும் பளிச்சின்னு மின்னும். பூஜை பாத்திரங்களை சுத்தம் செய்ய இதை விட எளிமையான வழி இருக்க வாய்ப்பே இல்லை.

சிங்கிள் தண்ணீர் போகும் ஓட்டை இருக்கும் அல்லவா. ராத்திரி தூங்க செல்லும் போது அந்த சிங்க் ஓட்டைக்கு நடுவே இந்த டிஷ்யூ பேப்பரை வைத்து விட்டு போங்க. அந்த ஓட்டையில் இருந்து துர்நாற்றம் வீசாமல் இருக்கும். பூச்சி பொட்டுகள் நம் சமையல் அறைக்குள் நுழையாமலும் இருக்கும். எளிமையான இந்த வீட்டு குறிப்பு பிடிச்சிருந்தா முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -