பழைய செம்பு மற்றும் பித்தளை பாத்திரங்களை 5 நிமிடத்தில் கை வலிக்காமல் சுத்தம் செய்வது எப்படி?

sembu-pithalai-vessels
- Advertisement -

நம் வீட்டில் இருக்கும் பழைய செம்பு மற்றும் பித்தளை பாத்திரங்களை பெருமளவு உபயோகிப்பது கிடையாது. இப்படியான பொருட்கள் நாளடைவில் அதன் நிறத்தை இழந்து கருப்பாக மாறிவிடும். அது பித்தளையா? செம்பா? இல்லை எந்த உலோகம் என்றே தெரியாத அளவிற்கு மிக மோசமாக மாறி இருக்கும். இப்படி நாட்பட்ட கருமையை கூட எளிதாக கை நோகாமல் விரட்டியடிக்க நாம் என்ன செய்யலாம்? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

seervarisai-pithalai

தாய் வீட்டு சீதனமாக பித்தளை அண்டா, செம்பு குடம் போன்றவற்றை கொடுத்து அனுப்புவது உண்டு. காலம் காலமாக கடைப்பிடித்து வரும் இந்த பழக்கம் இன்றும் கூட தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன. முந்தைய காலங்களில் அதன் பயன்பாடு அதிகம் இருந்தது. அதனால் அதனை சீதனமாக கொடுத்து அனுப்பினார்கள். இன்று சாஸ்திரம் காரணமாக பயன்பாடு இல்லாவிட்டாலும் கூட சீதனமாக அதனைக் கொடுத்து அனுப்புகிறார்கள்.

- Advertisement -

ஆனால் உண்மையில் பித்தளை, செம்பு போன்ற உலோகங்களில் தண்ணீரை நிரப்பி நாம் அதனைப் பருகி வந்தால் நம் உடலுக்கு இயற்கையாகவே அதன் சத்துக்கள் கிடைத்து நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும். ஒரு சிலர் இன்று அதன் உண்மையை உணர்ந்து செம்பு வாட்டர் கேன், குடம் போன்றவற்றை பயன்படுத்த துவங்கி விட்டனர். ஆனால் சீதனமாக அதை கொடுத்தும் பரண் மேல் குப்பை போல் போட்டு வைத்து இருப்பவர்களும் உண்டு. பிளாஸ்டிக்கை தவிர்த்து இது போன்ற பொருட்கள் உங்களிடம் இருந்தால் அதனை தயவு செய்து எடுத்து சுத்தம் செய்து மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வருவது உங்களுக்கு நல்லது.

pooja-vessels2

குடம், அண்டா, குண்டா மட்டுமல்லாமல் பூஜை பொருட்கள், சிறு சிறு பொருட்கள் கூட ரொம்ப ரொம்ப சுலபமாக சுத்தம் செய்து விடலாம். சாதரணமாக இந்த உலோக பொருட்கள் புளியை கொண்டு தேய்த்தாலே சுத்தமாகி விடும். ஆனால் அதற்கு நிறைய மெனக்கெட வேண்டியிருக்கும். நம் கைகள் வலிக்கும் அளவிற்கு அழுத்தம் கொடுத்து தேய்க்க வேண்டியிருக்கும். ஆனால் இந்த முறையில் நீங்கள் சுத்தம் செய்தால் கை வலிக்காமல் ரொம்ப சுலபமாக ஐந்தே நிமிடத்தில் பளபளவென புதியதாக வாங்கிய பொருள் போல மின்ன ஆரம்பித்துவிடும்.

- Advertisement -

முதலில் புளியை கொஞ்சமாக கொட்டைகள் இல்லாமல் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் துணி துவைக்கப் பயன்படுத்தப்படும் டிடெர்ஜென்ட் பவுடர் ஒரு டீஸ்பூன் அளவிற்கு சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் அதன் மீது எலுமிச்சைச் சாறு பிழிந்து கொள்ளுங்கள். டிடர்ஜென்ட் நுரை பொங்க ஆரம்பிக்கும். பின்னர் ஒரு டீஸ்பூன் பேக்கிங் சோடா எனப்படும் சமையல் சோடாவை சேர்த்து கொள்ளுங்கள். அதன் மீது வினிகரை ஒரு மூடி அளவிற்கு ஊற்றுங்கள். சமையல் சோடா உப்பு விஸ்சென்ற சத்தத்துடன் நுரை பொங்க ஆரம்பிக்கும். பின்னர் ஒரு ஸ்பூன் பயன்படுத்தி எல்லாவற்றையும் கரைத்துக் கொள்ளுங்கள்.

copper-kudam

தேங்காய் நார் அல்லது எலுமிச்சை பழத்தின் உடைய மூடி இவற்றை கொண்டு இந்த கலவையை தொட்டு தொட்டு பித்தளை அண்டா, செம்பு குடத்தை லேசாகத் தேய்த்தால் போதும். நீங்கள் தேய்ப்பதற்கு முன் பாத்திரத்தை தண்ணீர் படாமல் ட்ரையாக வைத்துக் கொள்ளுங்கள். தண்ணீருடன் தேய்த்தால் அவ்வளவு சுலபமாக கருமையை போக்கி விட முடியாது. ட்ரையாக இருக்கும் பாத்திரத்தில் இந்த கலவையை தொட்டு தொட்டு லேசாக அழுத்தம் கொடுத்து எல்லா இடங்களிலும் தேய்த்து கழுவினால் போதும் புத்தம் புதிய பாத்திரம் போல பளிச்சென மின்னும்.

- Advertisement -