பித்ரு தோஷம் நீங்க நாளை மகாளய அமாவாசை தினத்தில் இந்த ஒரு காரியத்தை மறக்காமல் செய்து விடுங்கள்.

amavasai vazhipadu amman
- Advertisement -

அமாவாசை என்றாலே பித்ருக்களுக்கு நாம் தர்ப்பணம் கொடுக்க வேண்டிய முக்கியமான நாள். அதிலும் இந்த மகாளய அமாவாசை மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த 15 நாட்களும் பித்ருக்கள் பூமிக்கு வந்து நம்முடன் இருப்பார்கள் என்று ஒரு ஐதீகம் உண்டு. ஆகையால் கடந்த 14 நாட்களாக இவர்களுக்கான வழிபாட்டை செய்ய தவறி இருந்தாலும் நாளை தவறாமல் செய்ய வேண்டும். அமாவாசை வழிப்பாட்டு முறையை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மகாளய பட்ச அமாவாசை வழிபாடு முறை

நாளைய தினம் சூரிய கிரகணம் இரவு 8.34 முதல் நள்ளிரவு 2.25 வரை உள்ளது. ஆகையால் பகலில் எப்போதும் போல நம்முடை வழிபாட்டை செய்யலாம். அமாவாசை திதியானது முழு நாளும் இருப்பதால் காலை சூரிய உதயத்திற்கு பிறகு அமாவாசை வழிபாட்டை துவங்கி விடலாம். பெரும்பாலும் இந்த அமாவாசையை அன்று ஆலயங்களில் சென்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். வருட திதி கொடுக்காதவர்கள் இது போல ஆலயங்களில் சென்று கட்டாயமாக திதி கொடுக்க வேண்டும்.

- Advertisement -

அதே போல் நம் வீட்டில் உள்ள ஒருவர் இறந்து ஒரு வருடம் ஆகாமல் இருந்தாலும் கூட, இந்த அமாவாசை அன்று அவர்களுக்கு படையல் இட்டு வழிபாடு செய்ய வேண்டும். இந்த அமாவாசை வழிபாட்டை ஆண்கள், பெண்கள் இருவரும் செய்யலாம். எள்ளும் தண்ணீரும் இரைப்பதை ஆண்கள் மட்டும் தான் செய்ய வேண்டும். பெண்கள் செய்யக் கூடாது. அதே போல் சுமங்கலி பெண்கள் அமாவாசை அன்றைய தினம் பட்டினி விரதம் இருக்க கூடாது.

கோவிலில் சென்று தர்ப்பணம் கொடுக்க முடியாதவர்கள் வீட்டில் சூரிய உதயத்தின் போது கையில் சுத்தமான தண்ணீரும் எள்ளும் எடுத்துக் கொண்டு சூரிய பகவானை பார்த்தவாறு நின்று எள்ளும் தண்ணீரும் கீழே ஒரு பாத்திரம் வைத்து அதில் விழுமாறு ஊற்ற வேண்டும். அப்போது காசி கயா என்ற இரு ஸ்தலங்களை மனதில் நினைத்துக் கொண்டு காசி காசி என்று சொல்லிக் கொண்டே ஊற்றுங்கள். பிறகு அந்த தண்ணீரை கால் படாத இடத்தில் கொண்டு ஊற்றி விடுங்கள்.

- Advertisement -

அன்றைய தினம் மதியம் 1:30 மணிக்குள்ளாக முன்னோர்களுக்கான படையலை நாம் வீட்டிலே போட வேண்டும். அந்த படையலானது முன்னோர் படத்தை தனியாக வைத்து அந்த படத்தின் முன்பு ஒரு தீபத்தை ஏற்றி வைத்த பிறகு அவர்களுக்கு பிடித்தமானவற்றை செய்து படைக்க வேண்டும். இந்த படையலையை பூஜை அறையில் சுவாமி படங்களுக்கு முன்பு போடக் கூடாது. அதே போல் இறந்தவர் படத்தையும் பூஜை அறையில் வைத்து அன்றைய தினம் வணங்கக் கூடாது. இந்த சாதத்தை தவறாமல் காக்கைக்கு வைக்க வேண்டும்.

எள்ளும் தண்ணீரும் தர்ப்பணம் கொடுப்பவர்கள் அன்று விரதம் இருந்து படையல் இட்ட பிறகு படையில் சாதத்தை சாப்பிட்டு விரதத்தை முடிப்பது நல்லது. இவையெல்லாம் செய்வதோடு அன்றைய தினம் முக்கியமாக செய்ய வேண்டியது, இரண்டு பேருக்கு ஆவது நாம் தானம் செய்ய வேண்டும். அதை ஆலயத்தில் நீங்கள் செய்தாலும் சரி அல்லது வீட்டிற்கு அழைத்து சாப்பாடு போட்டாலும் சரி நிச்சயம் இரண்டு பேருக்கும் அன்னதானம் செய்ய வேண்டும்.

இதையும் படிக்கலாமே: வீட்டில் பணமழை பொழிய நாளை புரட்டாசி கடைசி சனிக்கிழமை இந்த வழிபாட்டை எந்த காரணம் கொண்டும் தவற விடாதீர்கள்.

இவையெல்லாம் முடிந்த பிறகு அன்றைய தினம் மாலையில் வீட்டின் அருகில் இருக்கும் அம்மன் ஆலயத்திற்கு சென்று தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும். இதுவும் அமாவாசை வழிபாட்டில் மிகவும் முக்கியமானது தான். நமக்கென நம்முடன் வாழ்ந்த முன்னோர்களுக்காக அன்றைய தினம் அவர்களை மனதார நினைத்து வழிபட்டு அவர்களின் முழுமையான ஆசீர்வாதத்தை பெற இப்படி எளிமையான வழிபாட்டை மேற்கொள்ளுங்கள்.

- Advertisement -