பித்ரு தோஷம் நீங்க பரிகாரம்

pithrudhosham
- Advertisement -

நாம் இன்று இவ்வுலகில் வாழ நமது பரம்பரையின் முன்னோர்களே காரணம். மறைந்து விட்ட நமது முன்னோர்கள் “பித்ருக்கள்’ என அழைக்கப்படுகின்றனர். பித்ருக்கள் சூட்சமமாக இருக்கும் பித்ரு லோகத்தில் வாழ்வதாக இந்து மதத்தின் நம்பிக்கை. இந்த பித்ருக்களால் சிலருக்கு பித்ரு தோஷம் ஏற்படுவதை நாம் கேள்விப்பட்டிருப்போம். இந்த “பித்ரு தோஷம்” என்றால் என்ன என்பது பற்றியும் அதற்கான பரிகாரங்கள் பற்றியும் இங்கு காண்போம்.

பித்ரு தோஷம் பரிகாரம்

பித்ருக்களாகிய நமது முன்னோர்கள் அவர்கள் வாழும் காலத்தில், அவர்களின் வாரிசுகளால் துன்பங்களை அனுபவித்திருந்தாலும், அவர்கள் மறைந்த பிறகு பித்ருக்களுக்கு அளிக்கப்படும் திதி, ஸ்ரார்த்தம் போன்றவை முறையாக அளிக்காமல் போவதாலும் “பித்ரு தோஷம்” ஏற்படுகிறது. இந்த பித்ரு தோஷத்தால் பாதிக்கப்பட்ட்டவர்களின் வீட்டில் குடும்ப உறுப்பினர்கள் யாரேனும் விபத்துகளிலோ அல்லது வேறு ஏதாவது வழிகளிலோ திடீர் மரணம் அடைதல், குடும்பத்தில் எவருக்கேனும் உடல் நலம், மன நலம் பாதிக்கப்படுதல், குழந்தை பேறில்லாமை, தாமத திருமணம் அல்லது திருமணமே ஆகாத நிலை, வேலையில்லா திண்டாட்டம், தொழில் – வியாபாரங்களில் பெருத்த நஷ்டம், கடன் சுமை அதிகரிப்பது, குடும்ப உறுப்பினர்களிடையே அவ்வப்போது வாக்குவாதங்கள், சண்டைகள் ஏற்படுவது போன்றவை ஒரு குடும்பத்தில் பித்ரு தோஷம் இருப்பதற்கான அறிகுறிகளாகும்.

- Advertisement -

பித்ரு தோஷம் காரணமாக ஏற்படும் பிரச்சனைகள் நீங்கி, நமது முன்னோர்களின் ஆசிகளை பெறுவதற்கு வருடந்தோறும் முன்னோர்களுக்குரிய ஸ்ரார்த்தம், திதிகள் போன்றவற்றை அதற்குண்டான காலங்களில் சரியாக கொடுத்து வந்தாலே நல்ல பலன் இருக்கும். அப்போது பிராமணர்களுக்கும், ஏழைகளுக்கும் அரிசி, ஆடை போன்றவற்றை தானமாக கொடுப்பது நல்லது. தெருக்களை பெருக்கும் தொழிலாளர்களுக்கு அன்னதானம் மற்றும் இன்ன பிற உதவிகளை செய்வது பித்ரு தோஷத்தை நீக்கும்.

காகங்கள் மறைந்த நமது முன்னோர்களின் அம்சம் நிறைந்ததாகும். தினந்தோறும் காகங்களுக்கு நாம் காலை உணவை சாப்பிடும் முன்பு காகங்களுக்கு உணவு வைத்து பின்பு நாம் சாப்பிட வேண்டும். இச்செயல் நமக்கு பித்ரு தோஷத்தை நீக்கும் சிறந்த முறையாகும். காசி, ராமேஸ்வரம் போன்ற புனிதத்தலங்களுக்கு சென்று அங்கு பித்ரு தோஷ பூஜை செய்வது மிகவும் சிறந்த பரிகாரமாகும்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:
உப்பு பரிகாரம் எப்படி செய்ய வேண்டும் அதன் நன்மைகள் என்ன?

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Pithru dosham Pariharam in Tamil. It is also called as Pithru dosham remedies or Munnor sabam neenga pariharam in Tamil.

- Advertisement -