1000 யாகம் செய்த பலனை தரும் பித்ரு மந்திரம்

pithru-mantra

இந்து மதத்தை பொறுத்தவரை, முன்னோர்களின் ஆன்மாவானது புனித ஆத்மாவாக இருந்து தங்களது சந்ததிகளை காத்து ரட்சிக்கிறது என்பது நம்பிக்கை. அந்த வகையில் தினம் தோறும் பித்ருக்களை வணங்கும் சமயத்திலும், தர்ப்பணம் கொடுக்கும் சமயத்திலும் கூறவேண்டிய ஒரு அற்புதமான மந்திரம் உள்ளது. அந்த மந்திரத்தையும் அதற்கான பலனையும் கீழே பார்ப்போம் வாருங்கள்.

mahalaya-ammavasai

பித்ரு ஸ்துதி
ஓம் நம : பித்ரே ஜன்ம தாத்ரே ஸர்வ தேவ மயாய ச
ஸுகதாய பிரஸன்னாய ஸுப்ரீதாய மஹாத்மனே

ஸர்வ யக்ஞ ஸ்வரூபாய ஸ்வர்காய பரமேஷ்டினே
ஸர்வ தீர்த்தாவலோகாய கருணா ஸாகராய ச

நம: ஸதா ஆஸு தோஷாய சிவ ரூபாய தே நம:
ஸதா அபராத க்ஷமினே ஸுகாய ஸுகதாய ச

துர்லபம் மானுஷமிதம் யேன லப்தம் மயா வபு:
ஸம்பாவனீயம் தர்மார்த்தே தஸ்மை பித்ரே நமோ நம:

- Advertisement -

தீர்த்த ஸ்நான தபோ ஹோம ஜபாதி யஸ்ய தர்சனம்
மஹா குரோஸ்ச குரவே தஸ்மை பித்ரே நமோ நம:

யஸ்ய ப்ரணாம ஸ்தவனாத் கோடிஸ: பித்ரு தர்ப்பணம்
அஸ்வ மேத சதை ஸ்துல்யம் தஸ்மை பித்ரே நமோ நம:

mahalaya-ammavasai

பொது பொருள்:
சொர்க்கத்தில் புனித ஆத்மாக்களாக இருக்கும் எங்கள் மூதாதையர்களே, கடல் போன்ற கருணை கொண்டவர்களே, நாங்கள் ஏதேனும் தவறுகளை செய்தால் அதை பொறுத்துக்கொண்டு எப்போதும் எங்களை காத்து ரட்சிப்பவர்களே, குருவுக்கெல்லாம் குருவானவர்களே உங்களுக்கு தர்ப்பணம் செய்ய நான் எப்போதும் கடமைபட்டுளேன்.

mahalaya-ammavasai

இதையும் படிக்கலாமே:
எத்தகைய கவலையையும் போக்கும் சிவன் 108 போற்றி

பலன்
தினம் தோறும் முன்னோர்களை வணங்குகையிலும், தர்ப்பணம் செய்கையில் இந்த மந்திரத்தை கூறுவதால் ஆயிரம் அஸ்வமேத யாகம் செய்த பலன் நம்மை வந்து சேரும். அதோடு நம் முன்னோர்களின் பரிபூரணம் அருளையும் இதன் வழியாக நாம் பெறலாம்.