உங்கள் பரம்பரைக்கே பித்ருக்களின் சாபம் வராது! முன்னோர்களின் சாபம் நீங்க, உங்களுடைய வீட்டிலேயே பித்ரு பூஜையை எப்படி செய்வது?

pithru-dosham

முன்னோர்களை நாம் மறக்காமல் வழிபட வேண்டும் என்பதற்காக சொல்லப்பட்டுள்ள திதி தான், அமாவாசை திதி. இந்த அமாவாசை திதியில் கட்டாயம் பித்ருக்களுக்கு செய்ய வேண்டிய பூஜையை எந்த ஒரு குறையும் இல்லாமல் செய்து விட வேண்டும். அவசர அவசரமாக ஓடிக்கொண்டிருக்கும் இன்றைய சூழ்நிலையில், நாகரீகம் என்ற பெயரைக் கொண்டு, நிறைய பேர் பித்ரு வழிபாடு செய்வதையே மறந்து விடுகிறார்கள். மறைந்த நம்முடைய முன்னோர்களை மறப்பதன் மூலம், உண்டாவது தான் பித்ரு தோஷமும் பித்ரு சாபமும். நமக்கும் நம்முடைய சந்ததியினருக்கும் பித்ருக்களால் எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது. பித்ருக்களின் மனம் குளிர்ந்து நம்முடைய சந்ததியினரை ஆசீர்வதித்து கொண்டே இருக்க வேண்டும் என்றால் அமாவாசை தினத்தில் பித்ரு பூஜையை எப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

Amavasai Tharpanam

அமாவாசைக்கு முந்தைய நாளே உங்களது வீட்டை சுத்தமாக துடைத்து, பூஜை ஜாமான்களை கழுவி சுத்தம் செய்துவிட வேண்டும். தாய் தந்தை இல்லாதவர்கள் அமாவாசை தினத்தில், காலையிலேயே சூரிய உதயத்திற்கு முன்பு எழுந்து தலை ஸ்னானம் செய்து விட்டு, சுத்தமாகி விட்டு, உணவு அருந்தாமல் கோவில்களுக்கு அருகில் இருக்கும் குளத்தங்கரையில் அல்லது ஆற்றங்கரையிலும் அல்லது சில ஊர்களில் தர்ப்பணம் கொடுப்பதற்காக இடம் இருக்கும் அல்லவா? அந்த இடத்திற்குச் சென்று புரோகிதரை வரவழைத்து, தர்ப்பணம் கொடுப்பதை வழக்கமாக வைத்துக் கொள்ளலாம். இது ஒரு முறை.

வெளியிடங்களுக்கு சென்று தர்ப்பணம் கொடுக்க முடியாதவர்கள், வீட்டில் இருக்கக்கூடிய இறந்துபோன தாய் தந்தையின் திருவுருவப்படத்தை சுத்தமாக துடைத்து, மஞ்சள் குங்கும பொட்டு வைத்து துளசி மற்றும் வாசனை நிறைந்த பூக்களால் அலங்காரம் செய்து கொள்ள வேண்டும். அதன்பின்பு இறந்தவர்களின் படத்திற்கு முன்பாக ஒரு பித்தளைத் தாம்பாளத் தட்டு வைத்துக்கொள்ளுங்கள். முடிந்த வரை எவர்சில்வர் தட்டு வைப்பதை தவிர்த்து கொள்வது நல்லது.

tharpai-1

அதில் கட்டாயம் தர்ப்பைப் புல்லை போட வேண்டும். செம்பு பாத்திரத்தில் தண்ணீரை எடுத்துக் கொள்ள வேண்டும். சில்வர் பாத்திரத்தில் தண்ணீர் எடுப்பதைத் தவிர்த்து கொள்வது நல்லது. பித்தளை பாத்திரங்களையும் பயன்படுத்தலாம். தர்ப்பணம் செய்ய கட்டாயம் கருப்பு எள்ளும் தேவைப்படும்.

- Advertisement -

உங்களுடைய வலது கையால் கொஞ்சம் எள்ளை எடுத்து, அதில் தண்ணீர் விட்டு, எள்ளும் தண்ணீரையும் தாம்புல தட்டில் இருக்கும் தர்ப்பைப் புல்லின் மேல் மூன்று முறை விட வேண்டும். கையில் சிறிதளவு எள்ளை எடுத்து கொள்கிறீர்கள். அந்த எள்ளில் கொஞ்சமாக செம்பு பாத்திரத்தில் இருக்கும் தண்ணீரை எடுத்து ஊற்றி, எள்ளும் தண்ணீரும் சேர்ந்தபடி தாம்புல தட்டில் இருக்கும் தர்ப்பைப் புல்லின் மேல் விட்டுவிட வேண்டும் அவ்வளவுதான்.

tharpanam1

எள்ளும் தண்ணீரையும் விட்டு, தர்ப்பணம் செய்த பிறகு உங்களது முன்னோர்களை உங்களது தாய் தந்தையர்களை மனதார நினைத்து, ‘நான் அறிந்தும் அறியாமலும் ஏதேனும் தவறு செய்திருந்தால் அதை மன்னிக்க வேண்டும் என்றும், என்னுடைய குடும்பத்தையும் எனக்கு அடுத்தடுத்து வரக்கூடிய சந்ததியினருக்கு எந்தவிதமான ஆபத்தும் ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டியது உங்களுடைய கடமை என்றும்’ பிரார்த்தனை செய்து கொண்டு, அதன் பின்பு அந்த தாம்பாளத் தட்டில் இருக்கும் தர்பை புல், எள்ளு, தண்ணீரை செடிகளுக்கு ஊற்றி விடலாம். அப்படி இல்லை என்றால் கால்படாத மண் பாங்கான இடங்களில் ஊற்றி விடலாம். (உங்களால் புரோகிதரிடம் செல்ல முடியவில்லை. அதிகமாக செலவு செய்ய முடியாது. இப்படியாக எந்த சூழ்நிலையிலை இருந்தாலும் சரி, உங்களுடைய வீட்டில் மேற்சொன்னபடி சுலபமான முறையில் தர்பணத்தை கொடுத்து விடுங்கள்.)

pray

அதன் பின்பாக பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்து விட்டு, உங்களுடைய வீட்டில் அமாவாசை தினத்தன்று எப்படி சமைப்பீங்களோ உங்கள் வீட்டு வழக்கப்படி, அதேபோல் சமைத்து இலைபோட்டு தீப ஆராதனை காட்டி பூஜை செய்து முடித்துவிட்டு, அந்த சாதத்தை காகத்திற்கு வைத்துவிட்டு, அதன் பின்புதான் நீங்கள் உணவருந்த வேண்டும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். பூஜையை முடிப்பதற்கு முன்பாக தர்ப்பணத்தை செய்து முடிப்பதற்கு முன்பாக தற்பணம் கொடுப்பவர் கட்டாயம் சாப்பிடக் கூடாது என்பது தான் ஐதிகம்.

praying-god1

மாதம் ஒருமுறை அமாவாசை தினத்தில் பித்ருக்களை நினைத்து இப்படித்தான் பூஜை செய்ய வேண்டும். கையில் காசு இல்லை, வேலைப்பளு அதிகமாக இருக்கின்றது என்பதற்காக நாம் சுலபமாக செய்யக்கூடிய இந்த பூஜையை செய்யாமல் தவறி விட்டோமே ஆனால் இதற்கான தண்டனை தான் பித்ரு தோஷம் பித்ரு சாபம் ஆக மாறி நம்முடைய பரம்பரையை பாதிக்கின்றது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

annathanam

முன்னோர்களை நினைத்து மாதம்தோறும் வரும் அமாவாசைதித தினத்தில், உங்களால் முடிந்த சிறிய அளவு உதவியாக இருந்தாலும், அதை இயலாதவர்களுக்கு செய்வது நமக்கு பெரிய புண்ணியத்தை தேடித்தரும். இன்று பெரிய அளவில் பேசப்படும் பித்ரு தோஷம் பித்ரு சாபமும் உங்களுக்கோ அல்லது உங்களை குடும்பத்தை சேர்ந்தவர்கள் யாருக்காவது இருந்தாலும் சரி, அல்லது நம் பித்ருக்களின் சாபம், இனி நம் பரம்பரைக்கே வரக்கூடாது என்றாலும் சரி, மாதந்தோறும் வரக்கூடிய அமாவாசை திதி அன்று பித்ரு பூஜையை தவறாமல் செய்ய வேண்டும் மற்றும் வருடத்திற்கு ஒருமுறை அவர்களுக்கு கொடுக்க வேண்டிய திதியை தவறாமல் கொடுத்து விட வேண்டும்.

Amavasai Tharpanam

இறந்தவர்களின் நாள் கிழமை திதி எதுவுமே தெரியாதவர்கள் மஹாலய அமாவாசை தினத்தன்று அவர்களுக்கு முறையாக செய்யப்படும் திதி தர்ப்பணம் முறைகளை கட்டாயம் கொடுத்தே ஆக வேண்டும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
கண்ணாடி முகம் பார்ப்பதற்கு மட்டும் தான் பயன்படுகிறது என்று நினைத்தோம்! ஆனால் இப்படியும் சில ரகசியங்கள் இருக்கிறதா?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.