- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஇறந்தவர்கள் உங்கள் கனவில் வராமல் போவதற்கு என்ன காரணம்? முன்னோர்கள் கனவில் வர செய்ய வேண்டியது...

இறந்தவர்கள் உங்கள் கனவில் வராமல் போவதற்கு என்ன காரணம்? முன்னோர்கள் கனவில் வர செய்ய வேண்டியது என்ன?

- Advertisement -

நம் குடும்ப உறுப்பினர்கள், நம்முடன் ஒன்றாக இருந்தவர்கள் திடீரென இறந்து போனால் அவர்களுக்கு உரிய திதி, தர்ப்பணங்கள் கொடுத்து வருவது வழக்கம். ஓராண்டு வரை அவர்களுடைய நினைப்பும், அவர்கள் கனவில் வருவது போன்ற விஷயங்களும் அவ்வபோது நெருங்கிய உறவுகளுக்கு நடப்பது உண்டு. ஆனால் ஓராண்டுக்கு பிறகு அவர்கள் உங்கள் கனவில் வராமல் போவதற்கு என்ன காரணம்? அவர்கள் மனதில் என்ன இருக்கிறது என்று தெரிந்து கொள்ள என்ன செய்யலாம்? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் அலச இருக்கிறோம்.

இறந்து போன முன்னோர்களுக்கு அவர்கள் இறந்து போன நாளில் படையல் வைத்து வழிபடுவதால் மட்டுமே ஒரு பிரயோஜனமும் இல்லை. நிறைய பேர் அவர்களுடைய திதியை மறந்து விட்டு, அவர்கள் எந்த தேதியில் இறந்து போனார்களோ, அந்த தேதியில் படையல் வைத்து வழிபடுகிறார்கள். அமாவாசை தோறும் படையல் வைத்து வழிபடுவது மற்றும் பித்துருக்களுக்கு உரிய விசேஷ நாட்களில் திதி கொடுத்துவிட்டு வருவது போன்ற விஷயங்கள் தவறாமல் செய்து வந்தால் குடும்பத்தில் எப்பொழுதும் நன்மைகள் நடைபெறும். ஆனால் இதை காட்டிலும் ரொம்பவும் முக்கியமான ஒரு விஷயம் உண்டு.

- Advertisement -

ஒரு மனிதன் இறந்து போன அந்த நாளில் எந்த திதி இருக்கிறதோ, அதே திதி அடுத்த ஒவ்வொரு வருடத்திலும் வரக்கூடிய நாளில் அவர்களுக்கு திதி கொடுப்பது என்பது தான் முறையான பித்ரு வழிபாடு ஆகும். ஒருவர் ஆனி மாதம் அஷ்டமி திதியில் இறந்து போகிறார் என்றால், அடுத்த வருடம் ஆனி மாதம் வரக்கூடிய அவர்களுடைய நினைவு தேதி அன்று வேறொரு திதி இருக்கும். அதற்கு ஒரு சில நாட்களுக்கு முன்பாகவோ அல்லது ஒரு சில நாட்களுக்கு பின்பாகவோ அவர் இறந்த அந்த அஷ்டமி திதி கண்டிப்பாக வரக்கூடும்.

அந்த நாளில் தான் அவர்கள் பூமிக்கு சொர்கலோகத்தில் இருந்து அனுப்பப்படுகிறார்கள். எனவே பசியும், தாகமுமாக இருக்கும் அவருக்கு அந்த நாளில் தான் நீங்கள் முறையாக எள்ளும், தண்ணீரும் இறைத்து திதி கொடுக்க வேண்டும். அவர்களுக்கு பிடித்தமான எல்லா உணவு வகைகளையும் படைத்து படையல் இட்டு முறையாக வழிபட்டு காக்கைக்கு சாதம் வைக்க வேண்டும். அந்த உணவை காக்கை எடுத்த பின்பு தான் கர்த்தாவாக இருக்க கூடிய அவருடைய மூத்த மகன் உணவை மேற்கொள்ள வேண்டும்.

- Advertisement -

இதை செய்ய தவறும் பொழுது உங்களுடைய கனவில் அவர்கள் தோன்றாமல் போவதற்கு நிறையவே வாய்ப்புகள் உண்டு. இறந்தவர்களை ஓராண்டுக்கு மேல் பலரும் நினைத்துப் பார்ப்பது கிடையாது. பித்ருக்கள் என்பவர்கள் எப்பொழுதும் நம்மை விட்டு நீங்குவது இல்லை. அவர்கள் வேறொரு பிறவி எடுத்தாலும், இப்பிறவியில் இருக்கும் இந்த ஆத்மாவானது உங்கள் குடும்பத்தை சுற்றி தான் வந்து கொண்டிருக்கும்.

அவர்களை எப்பொழுதும் நினைத்துக் கொண்டிருப்பது, அவர்களுக்கு உரிய பூஜை, புனஸ்காரங்களை செய்வது போன்றவற்றை தொடர்ந்து கடைபிடித்து வருபவர்களுக்கு கட்டாயம் எவ்விதமான பிரச்சனைகளும் வாழ்வில் ஏற்படுவது இல்லை! மேலும் மேலும் அவர்கள் தொடர்ந்து முன்னேறிக் கொண்டே இருப்பார்கள். வம்சம் விருத்தியடையும், குலம் செழிக்கும் இந்த பித்ரு வழிபாடு என்பது ரொம்பவே முக்கியமான வழிபாடு ஆகும். எனவே இதனை தவறவிடாமல் இது போல் கடைபிடித்து வந்து பாருங்கள், அவர்கள் மனதில் இருப்பதை உங்கள் கனவில் வந்து நிச்சயம் கூறி விட்டு செல்வார்கள்.

சற்று முன்