உங்கள் வீட்டு செடிகளில் கொத்துக்கொத்தாக எறும்புகள், பூச்சிகள் தொல்லை அதிகம் உள்ளதா? ஒரே நாளில் பூச்சிகளை விரட்டியடிக்க இந்த ஒரு வாசம் போதும்!

insects-in-plant
- Advertisement -

சிலபேர் வீட்டு பூச்செடிகளில் எறும்புகளின் தொல்லை அதிகமாக இருக்கும். சிலபேர் வீட்டில் வைத்திருக்கும் காய்கறி செடிகள், பழ செடிகளில் எரும்பு தொல்லை, பூச்சித் தொல்லையையும் தாங்கவே முடியாத அளவிற்கும், அடர்த்தியாக கொத்துக்கொத்தாக, ஆங்காங்கே படர்ந்து கிடக்கும். இப்படி எறும்புகள் பூச்சிகள் அதிகமாக இருக்கும் பட்சத்தில், நம்முடைய செடிகள் பட்டு போவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. செடிகளில் எவ்வளவு அதிகப்படியான பூச்சிகள் இருந்தாலும் கூட நம்மால், சுலபமாக விரட்டிவிட முடியும். இந்த ஒரு பொருளின் வாசம் இருந்தால்! அது எந்த பொருள் என்பதை பற்றியும், செடிகளில் உள்ள பூச்சிகளை மொத்தமாக, ஒரே நாளில் எப்படி விரட்டுவது, என்பதை பற்றியும் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

neem oil 3-compressed

முதலில் 1 லிட்டர் அளவு தண்ணீரை ஒரு பக்கெட்டில் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் 5ml அளவு, வேப்பெண்ணையை ஊற்ற வேண்டும். அதன் பின்பாக, பாத்திரம் தேய்க்க பயன்படுத்தப்படும் சோப்பு அல்லது லிக்விட், இந்த இரண்டில் எதுவாக இருந்தாலும், அதை 2 டேபிள்ஸ்பூன் அளவு சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த சோப்பு எதற்காக என்றால், அந்த வேப்ப எண்ணையும், தண்ணீரும் நன்றாக கலக்க வேண்டும் என்பதற்காகத் தான். எக்காரணத்தைக் கொண்டும், வேப்ப எண்ணெய் தண்ணீரில் தனியாக மிதக்க கூடாது. (தண்ணீர், வேப்பெண்ணை, பாத்திரம் தேய்க்க பயன்படுத்தும் சோப், இந்த மூன்று பொருட்களும் சேர்த்த தண்ணீர், இது ஒருபக்கம் அப்படியே இருக்கட்டும்.)

- Advertisement -

இப்போது, இந்த தண்ணீருடன் நாம் சேர்க்க போக்கும் பொருள் கிராம்பு. இந்தக் கிராம்பை முந்தைய நாள் இரவே, தண்ணீரில் போட்டு நன்றாக ஊறவைத்து விடுங்கள். கிராம்பு, தண்ணீரில் நன்றாக ஊறிய பின்பு, ஊற வைத்த அந்த நீர் கருப்பு நிறமாக மாறி இருக்கும். ஒரு கைப்பிடி அளவு கிராம்பை, 2 கப் அளவு(1/2 லிட்டர்) தண்ணீரில் போட்டு ஊறவைத்தால் போதும்.

kirambu 4-compressed

இப்போது, தண்ணீரில் ஊற வைத்திருக்கும், இந்த கிராம்பை வடிகட்டி, கிராம்பு நீரை மட்டும், வேப்பெண்ணெய் கரைசல் தண்ணீரோடு கலந்து விடவேண்டும். அவ்வளவுதான். உங்கள் வீட்டு பூச்செடிகளில், எந்த இடத்திலெல்லாம் பூச்சி பிரச்சனை இருக்கிறதோ, அந்த இடத்தில் ஸ்ப்ரே பாட்டிலால் ஸ்ப்ரே செய்து விடுங்கள்.

- Advertisement -

குறிப்பாக கத்தரிக்காய், தக்காளி போன்ற செடிகளில் பூச்சிகளின் தொல்லை அதிகமாக இருக்கும். அந்த இடத்தில் எல்லாம் இந்த தண்ணீரை ஸ்ப்ரே செய்து பாருங்கள்! எறும்புகளின் தொல்லை ஒரே நாளிலேயே காணாமல் போய்விடும். தவிர பூச்சிகளின் தொல்லை அதிகமாக இருக்கும் பட்சத்தில், வாரத்தில் இரண்டு முறை இந்த லவங்கம் சேர்த்த வேப்பெண்ணை தண்ணீரை பயன்படுத்தி பாருங்கள். உங்கள் வீட்டு செடிகளில் பூச்சிகளின் தொல்லை தானாகவே குறைய ஆரம்பித்துவிடும்.

tomato-grow3

இந்த தண்ணீரானது தாராளமாக வேர் பகுதிகளில் படலாம். ஒரு சிறிய கப் அளவு தண்ணீரை செடிகளின் மண்ணிலும் ஊற்றலாம் தவறில்லை. செடிகளுக்கு எந்த ஒரு பிரச்சனையும் வராது என்பது குறிப்பிடத்தக்கது. லவங்கத்தின் வாசத்திற்கு எறும்புகள் ஒரே நாளில் காணாமல் போய்விடும். உங்கள் வீட்டு செடிகளுக்கு காய்கறி கழிவுகளை உரமாகப் போடும் பட்சத்தில் எறும்புகளின் தொந்தரவு அதிகமாகத்தான் இருக்கும். முடிந்தவரை எறும்பு சாக்பீஸ் வைத்து தொட்டிகளின் ஓரங்களில் கோடு போட்டு வைப்பது நல்லது.

இதையும் படிக்கலாமே
வெறும் தண்ணீரில் பூண்டு வளர்க்கலாம். வீட்டிலேயே பூண்டு செடி எப்படி வளர்க்கணும் தெரியுமா?

இது போன்று மேலும் தேவையான தகவல்கள் பலவற்றை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -