தலையில் பொடுகு தொல்லை அதிகம் இருப்பவர்கள் தலைக்கு குளித்து முடித்த பின்பு இப்படி செய்து விட்டு வந்து பாருங்க பொடுகு தொல்லை இனி இல்லை!

rice-water-podugu
- Advertisement -

தலைமுடி எப்பொழுதும் சுத்தமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் பொடுகு, பேன் போன்ற பிரச்சனைகள் படையெடுக்க ஆரம்பித்து விடும். தலையில் பொடுகு தொல்லை ஒருமுறை வந்துவிட்டால் அது அவ்வளவு எளிதாக நீங்கும் விஷயம் அல்ல! எனவே பொடுகு இல்லாமல் கண்டிப்பாக உங்களுடைய தலைமுடியை பராமரிப்பது ரொம்பவே நல்லது. சரி, பொடுகு தொல்லை அதிகமாக வந்துவிட்டது, அதை எப்படி சுலபமாக போக்குவது? என்பதை இனி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

தலை முழுவதும் பொடுகு பிரச்சனைகளால் அவதிப்படுபவர்கள் அதை படிப்படியாக முழுமையாக குணப்படுத்த நீங்கள் தலைக்கு குளித்து முடித்த பின்பு இது போல செய்து வர வேண்டும். இதனால் பொடுகை உண்டாக்கக்கூடிய விஷமிகள் வேர்கால்களிலேயே அழிந்து விடும். இனிமேல் பொடுகு தொல்லை என்பதே மீண்டும் உங்களுக்கு வராது. அந்த அளவிற்கு சிறப்பாக பங்காற்றக் கூடிய அந்த ஒரு பொருள் அரிசி களைந்த தண்ணீர் ஆகும். சாதம் வடிக்க பயன்படுத்தும் அரிசியை நீங்கள் முதல் முறை தண்ணீர் ஊற்றி கழுவும் போது அதை கீழே ஊற்றி விட வேண்டும்.

- Advertisement -

இரண்டாவது முறை மற்றும் மூன்றாவது முறையாக தண்ணீர் ஊற்றி கழுவுபவர்கள் அந்த தண்ணீரை எந்த காரணம் கொண்டும் வீணாக்க கூடாது. அதில் இருக்கும் சத்துக்கள் பல வகையில் பயன் தரக்கூடியவை. குறிப்பாக தலைமுடி பிரச்சனைகளை போக்கக்கூடிய அற்புதமான ஆற்றல் கொண்டுள்ள இந்த அரிசி களைந்த தண்ணீர் வீணடிக்க கூடிய ஒன்றல்ல! நீங்கள் அப்படியே கீழே ஊற்ற வேண்டும் என்றால் உங்களுடைய வீட்டில் வளரக்கூடிய செடி, கொடிகளுக்கு ஊற்றுங்கள். நல்ல சத்துள்ள தாவரங்களாக வளர்ந்து உங்களுக்கு நற்பலன்களை கொடுக்கும்.

இவ்வளவு சத்துக்கள் கொண்டுள்ள அரிசி களைந்த தண்ணீரை கொண்டு எப்படி பொடுகை விரட்டுவது? ஒரு வாரத்திற்கு குறைந்தது ஒன்று அல்லது இரண்டு முறை கண்டிப்பாக தலையை அலசி சுத்தம் செய்ய வேண்டும். இதற்கு நீங்கள் இயற்கையான முறையில் ஷாம்பு அல்லது சிகைக்காய் போன்றவற்றை பயன்படுத்துவது ரொம்பவே நல்லது. அப்படி பயன்படுத்த முடியாதவர்கள் ஷாம்புவை தண்ணீரில் கலந்து பயன்படுத்துங்கள். நேரடியாக தலையில் அப்ளை செய்ய வேண்டாம்.

- Advertisement -

நன்கு தலைக்கு குளித்து முடித்த பின்பு கடைசியாக இந்த அரிசி களைந்த தண்ணீரை தலையின் வேர்க்கால்கள் முழுவதும் ஊற்றுங்கள். அது அப்படியே தலைமுடி வரை வந்து சேரும். பிறகு தலை முடியை அரிசி களைந்த தண்ணீரால் ஒரு முறை தேய்த்து விடுங்கள். எல்லா இடங்களிலும் அரிசி களைந்த தண்ணீர் படும்படி தேய்த்து விட்டு பின்னர் கடைசியாக தலையை ஒரு முறை வெறும் தண்ணீரில் நன்கு அலசி விட்டு வந்து விடுங்கள். இவ்வாறு செய்வதால் தலைமுடியில் இருக்கும் பொடுகுகளை உண்டாக்கக்கூடிய விஷமங்கள் அழியும்.

மேலும் வேர்க்கால்களில் நல்ல ஒரு ஊட்டசத்து கிடைத்து புதிய முடி முளைப்பதில் இருக்கும் தடைகளையும் நீக்கும். இதனால் முடி உதிர்தல் பிரச்சனை, பொடுகு பிரச்சனை, பேன் தொல்லை போன்றவை எளிதாக படிப்படியாக குறைந்து விடும். ஒரே நாளில் எல்லா விஷயமும் நடந்து விடாது எனவே வாரம் இரு முறை இது போல அரிசி களைந்த நீரால் கடைசியாக தலையை அலசி வாருங்கள், விரைவிலேயே உங்கள் பிரச்சனை தீரும்.

- Advertisement -