ஒரே நாளில் பொடுகு நீங்கி தலைமுடி சுத்தமாக என்ன செய்ய வேண்டும்? இழந்த முடி வளர்ச்சியை மீண்டும் தூண்டிவிட இப்படி செய்யுங்கள்!

podugu-katralai-murungai-seeds
- Advertisement -

பொதுவாக தலைமுடி உதிர்வதற்கு மிக முக்கிய காரணம் பல்வேறு விஷயங்களாக இருந்தாலும் வறண்டு போவதும், போஷாக்கு இல்லாததும் முதல் காரணமாக அமைந்து இருக்கும். இன்று நாம் சாப்பிடும் உணவு முறை பழக்கங்கள் மற்றும் சுற்றுச்சூழல் காரணமாக முடியை வேகமாக இழக்க நேரிடுகிறது. இப்படிப்பட்ட நிலையில் தலைமுடி வளர்ச்சியை மீண்டும் தூண்டி விட செய்ய நாம் என்ன செய்யலாம்? மேலும் பொடுகு தொல்லையிலிருந்து நிவாரணம் கிடைக்க என்ன பண்ணனும்? என்பதை தான் இந்த அழகு குறிப்பு சார்ந்த பகுதியின் மூலம் நாம் தொடர்ந்து தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

தலை முடியில் ஒருவிதமான பூஞ்சை தொற்று ஏற்படுவதால் பொடுகு உண்டாகிறது. இந்த பொடுகு நாட்பட நாட்பட விடாப்பிடியான பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. இது தலை முடி மட்டுமல்லாமல் சருமத்திற்கும் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடிய அபாயம் இருப்பதால் உடனடியாக இதனை சரி செய்வது நல்லது. பொடுகு பிரச்சனை இருப்பவர்கள் அதிலிருந்து நிவாரணம் காண கற்றாழையை தேர்ந்தெடுப்பது தான் நல்ல வழியாகும்.

- Advertisement -

கற்றாழையில் இருக்கக்கூடிய ஜெல் போன்ற பகுதி முக சருமம் மட்டும் அல்லாமல் தலை சருமத்திலும் ஊடுருவி சென்று நல்ல ஒரு போஷாக்கை கொடுத்து எரிச்சல், நமைச்சல் போன்றவற்றில் இருந்து நிவாரணத்தை கொடுக்கிறது. இதில் இருக்கும் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் பூஞ்ஜை தொற்றுகளை எளிதாக அகற்றக் கூடியது எனவே இதை சரியான முறையில் பயன்படுத்தினால் பொடுகை உடனே விரட்டி அடித்து விடலாம். மேலும் இது ஈரப்பதத்தை தக்க வைத்து தலைமுடியை வறண்ட தன்மையிலிருந்து பாதுகாக்கிறது.

கற்றாழையை நேரடியாக தலையில் தடவுவதால் சிலருக்கு அலர்ஜி ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. எனவே கற்றாழையை முதல் முதலில் தலைக்கு பயன்படுத்துபவர்கள் பரிசோதனைக்கு பின்பு அதை தொடர்ந்து உபயோகப்படுத்த வேண்டும். எனவே 50ml தேங்காய் எண்ணெயை எடுத்துக் கொள்ளுங்கள். எப்பொழுதும் தலைக்கு தேய்க்க பயன்படுத்தும் தேங்காய் எண்ணெய் பாரம்பரியமான முறையில் செக்கில் ஆட்டியதாக இருப்பது நல்லது.

- Advertisement -

தேங்காய் எண்ணெயை லேசாக காய்ச்சிக் கொள்ளுங்கள். அதனுடன் ஒரு பெரிய கற்றாழை மடலினுடைய ஜெல்லை நன்கு அலசி சுத்தம் செய்து ஈரப்பதம் இல்லாமல் துடைத்து சிறு சிறு துண்டுகளாக கத்தரித்து சேர்க்க வேண்டும். பின்னர் இவற்றுடன் சேர்க்க வேண்டிய முக்கியமான ஒரு பொருள் முருங்கைக்காயின் உடைய விதைகள் ஆகும். முருங்கைக்காயில் இருக்கும் விதைகள் தலைமுடி வளர்ச்சியை தூண்டி விடக் கூடிய அற்புதமான ஆற்றல் கொண்டுள்ளது. மேலும் தலைமுடிக்கு தேவையான ஊட்டச்சத்தையும் கொடுக்கக் கூடியது. இது பொடுகையும் அழிக்கும் திறன் கொண்டுள்ளது.

இதையும் படிக்கலாமே:
பாலுடன் இந்த 1 பொருளை சேர்த்து முகத்துக்கு தடவி பாருங்க ஒரே வாரத்தில் பளிச்சென்று எரியும் மின்விளக்கு போல உங்க முகம் பிரகாசமாக எரியுமே!

முருங்கைக்காய் விதைகளை நன்கு காய வைத்து பவுடர் செய்து வைத்தும் பயன்படுத்தலாம் அல்லது நீங்கள் விதைகளை அப்படியே காய வைத்து இந்த எண்ணெயுடன் சேர்த்து காய்ச்சிக் கொள்ளலாம். காய்ச்சிய எண்ணெயை நன்கு வடித்து எடுத்துக் கொள்ளுங்கள். இந்த எண்ணெயை நன்கு குளிர ஆற வைக்க வேண்டும். ஆறிய பின்பு ஒரு பாட்டிலில் ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளுங்கள் இந்த எண்ணெயை நீங்கள் தினமும் தலைக்கு மசாஜ் செய்து வர வேண்டும். ஒரு பத்து நிமிடம் மசாஜ் செய்து கட்டிக் கொள்ளுங்கள்.பிறகு மறுநாள் காலையில் தலைக்கு அலசி கொள்ளலாம். இப்படி செய்து வர விரைவாகவே இழந்த தலைமுடியை நீங்கள் மீண்டும் அடைந்து, நல்ல ஒரு ஆரோக்கியமான கேசத்தை பெறலாம்.

- Advertisement -