குப்பையில் தூக்கி போடும் இந்த 1 பொருள் போதும். முடி உதிர்வதை தடுத்து காடு போல முடியை வளரச் செய்யலாம்.

hair16
- Advertisement -

கடைகளில் நிறைய காசு கொடுத்து மாதுளம் பழம் வாங்குவோம். உள்ளே இருக்கும் முத்துக்களை மட்டும் எடுத்துக் கொண்டு மேலே இருக்கும் தோலை தூக்கி வீணாக குப்பையில் தான் போடுவோம். ஆனால் மாதுளை பழ தோலிலும் சத்து நிறைய உள்ளது. பொதுவாக ஆரஞ்சு பழ தோலை தானே பியூட்டி டிப்ஸ் க்கு பயன்படுத்துவோம். ஆனால் அதேபோல இந்த மாதுளை பழ தோலையும் அழகு குறிப்புக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பதுபோல சரும அழகுக்கும், முடியை அடர்த்தியாக வளர செய்வதற்கும் மாதுளை பழத்தோலை எப்படி பயன்படுத்துவது தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

உங்கள் வீட்டில் எத்தனை மாதுளை பழ தோல்கள் இருக்கிறதோ அதை நீங்கள் குறிப்புக்காக பயன்படுத்திக் கொள்ளலாம். அது உங்களுடைய இஷ்டம் தான். ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் 2 மாதுளை பழ தோலை போட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து 1 பெரிய டம்ளர் அளவு தண்ணீரை ஊற்றுங்கள். அரைத்து வைத்திருக்கும் மாதுளை பழ தோல் விழுதை அந்த தண்ணீரில் போட்டு அடுப்பை மிதமான தீயில் கொதிக்க வையுங்கள்.

- Advertisement -

தண்ணீரின் நிறம் கொஞ்சம் கொஞ்சமாக மாறத் தொடங்கும். தோலில் இருக்கக்கூடிய சத்துக்கள் அனைத்தும் அந்த தண்ணீரில் இறங்கும். பத்து நிமிடங்கள் தண்ணீர் கொதித்தால் போதும். அதன் பின்பு அடுப்பை அணைத்து விட்டு இதை ஒரு ஃபில்டரின் மூலம் நன்றாக வடிகட்டி எடுத்தால் மாதுளை பழத்தோல் தண்ணீர் நமக்கு கிடைத்துவிடும். அவ்வளவு தான். இதை நன்றாக ஆறவைத்து ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி ஃப்ரிட்ஜில் ஸ்டோர் செய்து வைத்துக்கொள்ளுங்கள். இது 7 லிருந்து 10 நாட்கள் வரை கெட்டுப்போகாது.

இந்த ஸ்பிரேவை தலையில் எப்படி அப்ளை செய்வது. தலையில் மயிர்கால்களுக்கு இடையே இந்த ஸ்ப்ரேவை நன்றாக அடித்து விட்டு உங்களுடைய விரல்களை வைத்து நன்றாக மசாஜ் செய்யுங்கள். அதன் பின்பு அப்படியே விட்டுவிடலாம். தலைக்கு குளிக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. உங்களுக்கு தேவைப்பட்டால் வெறும் தண்ணீரை ஊற்றி கூட தலையை அலசிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த ஸ்பிரேவை முகத்தில் எப்படி அப்ளை செய்வது. முகத்தை சுத்தமாக கழுவிவிட்டு நன்றாக துடைத்து விட்டு, இந்த ஸ்பிரே வை முகம் கழுத்து பகுதிகளில் அடித்து லேசாக கையை வைத்து அப்படியே தடவிக்கொடுங்கள். இந்த தண்ணீர் சருமத்தில் இழுத்துக்கொள்ளும். அவ்வளவு தான் அப்படியே விட்டு விடுங்கள். 1/2 மணிநேரம் கழித்து தண்ணீரில் முகத்தை கழுவிக் கொள்ளலாம். இப்படி செய்து வர உங்களுடைய சரும அழகும் கூடும். முகம் பொலிவு பெறும்.

இந்த மாதுளை பழ தோலை வெயிலில் நன்றாக காய வைத்து பொடி செய்து ஸ்டோர் செய்து வைத்துக் கொண்டால், கெட்டுப்போகாது. தேவைப்படும் போது இந்த பொடியை அழகு குறிப்புகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். உங்களுக்கு இந்த குறிப்புகள் பிடித்திருந்தால் மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க. நிச்சயமா நல்ல ரிசல்ட் கிடைக்கும். இந்த குறிப்பை இத்தனை நாட்கள் பயன்படுத்த வேண்டும் என்றெல்லாம் அவசியம் கிடையாது. பழத்தின் தோல் கிடைக்கும்போது வீணாக்காமல் உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள்.

- Advertisement -