பொன், பொருள், ஆடை, ஆபரணங்கள் அதிகம் சேர்வதற்கு இந்த 1 பழம் உங்களிடம் இருந்தால் போதுமே! என்ன பழம் அது?

gold-dates-lakshmi

ஆடை, ஆபரணங்கள், பொன், பொருள் என்று சுகபோகமாக வாழ விரும்புபவர்கள் நம்மில் யார் தான் இல்லை? யாருக்காவது இருப்பதே போதும் என்கிற மனம் உண்டா? மனிதனாகப் பிறந்து விட்டாலே அவனுடைய கர்ம வினை அடிப்படையில் அவன் தன்னுடைய நல்லவைகளையும், கெட்டவைகளையும் அனுபவித்து வருவது அவனுடைய தலையில் எழுதி இருக்கும் தலையெழுத்து என்பார்கள். அப்படியிருக்க திடீரென்று ஒருவன் அதிர்ஷ்டசாலியாக மாறவும், பணக்காரனாகவும், என்ன காரணமாக இருக்கும்? உண்மையான பக்திக்கு மிஞ்சிய செல்வம் எதுவுமே இல்லை. இதனை உணர்ந்தவர்கள் அதிர்ஷ்டசாலிகள் தான். அவ்வகையில் சுகபோக வாழ்க்கை வாழ என்ன செய்யலாம்.? என்பதை தெரிந்து கொள்ள இந்தப் பதிவை தொடர்ந்து படியுங்கள்.

gold-pot

விலையுயர்ந்த ஆடை, ஆபரணங்கள் என்பது அத்தியாவசியமா என்று கேட்டால் இல்லை தான். ஆனால் எல்லோருக்குமே பொன், பொருளுடன் சுகபோக வாழ்க்கை வாழ வேண்டும் என்கிற ஆசை இருக்கத் தான் செய்யும். இதற்கு தாந்த்ரீக பரிகாரம் உள்ளது. இந்த பரிகாரத்திற்கு தேவை ஒரு பழம் மட்டுமே. அது என்ன பழம் தெரியுமா? அந்த பழத்தை வைத்து நாம் என்ன செய்ய போகிறோம்? இதனால் நமக்கு கிடைக்கப் போகும் நன்மைகள் என்னென்ன? என்பதை தான் இனி பார்க்க இருக்கிறோம்.

பேரிச்சம்பழம் ஆரோக்கியத்திலும் மற்றும் நல்ல விசேஷமான காரியங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. உடலுக்கு வலிமையை தரும் பேரிச்சை பழம், உள்ளத்திற்கும் வலிமையைத் தருகிறது. அதிலும் இந்த தாந்திரீக பரிகாரத்திற்கு பேரீச்சை பழத்தின் உலர்ந்த பேரிச்சை பழம் பயன்படுத்தப்படுகிறது. உலர்ந்த பேரிச்சை பழம் தான் இந்த பரிகாரத்திற்கு தேவையான பழமாகும்.

dry-dates

உலர்ந்த பேரிச்சை பழத்தை பதினொன்று என்ற எண்ணிக்கையில் எடுத்துக் கொள்ளுங்கள். அதனை சிகப்பு நிற பட்டுத் துணியில் சதுரமாக வெட்டிக் கொண்டு, அதில் வைத்து கருப்பு நூல் கொண்டு முடிந்து வைத்துக் கொள்ளுங்கள். இதை நீங்கள் பீரோவில் வைத்தால் ஆடைகள் அதிகமாக சேரும். விலை உயர்ந்த பொருட்கள் இருக்கும் இடங்களில் எல்லாம் வைத்தால் சுகபோக வாழ்க்கை கிடைக்கும் என்பது ஐதீகம்.

- Advertisement -

விலை உயர்ந்த பொருட்கள், நகைகள் போன்றவற்றை வைக்கும் இடங்களில் இதனை வைப்பதால் அவைகள் மேலும் மேலும் பெருகும் என்பது நம்பிக்கை. ஆடை, ஆபரணங்கள் சேர பீரோவில் நீங்கள் நகைகளை வைக்கும் இடத்தில் வைக்கலாம். பச்சை கற்பூரம் பணத்தை எப்படி ஈர்ப்பதற்கு தாந்திரீக குறிப்புகள் உள்ளனவோ! அதே போல தான் உலர் பேரீச்சை பழத்திற்கு பொன், பொருள் சேர்வதற்கான பரிகாரத்திற்கு பயன்படுத்த சில குறிப்புகளும் உள்ளன.

sukran

வெள்ளிக்கிழமை அன்று சுக்கிர ஹோரையில் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். அல்லது கேட்டதை திரும்பத் திரும்பக் கொடுக்கும் குளிகை நேரத்தில் இந்த பரிகாரத்தை செய்யலாம். குளிகை என்பது நீங்கள் செய்யும் காரியம் அல்லது பொருள் வாங்கும் விஷயங்கள் திரும்பத் திரும்ப நடைபெறும் ஒரு நேரத்தை குறிக்கிறது. ஒருவர் நகை வாங்க வேண்டுமென்றால் குளிகையில் வாங்கலாம். குளிகை நேரத்தில் வாங்கப்படும் பொருட்கள் நம் நம்மிடம் திரும்ப திரும்ப சேரும் என்பது ஐதீகம். அந்த நேரத்தில் இந்த பரிகாரத்தை செய்து வைத்தால் நீங்கள் நினைக்கக் கூடிய விஷயங்கள் திரும்பத் திரும்ப உங்களுக்கு நடக்கும். ஆடை, ஆபரணங்கள், பொன், பொருள் போன்றவைகள் சேர்ந்து ராஜயோக வாழ்க்கை கிடைக்கும் என்பது நம்பிக்கை.

இதையும் படிக்கலாமே
வீட்டில் அதிர்ஷ்ட மழை பொழிய காலையில் இந்த நீரால் வாசல் தெளியுங்கள்! எதிர்பார்க்காதது எல்லாம் நடக்கும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.