வீட்டில் அதிர்ஷ்ட மழை பொழிய காலையில் இந்த நீரால் வாசல் தெளியுங்கள்! எதிர்பார்க்காதது எல்லாம் நடக்கும்.

mint-puthina-vasal

ஒருவருடைய வீட்டில் நல்ல தேவதைகள் வாசம் செய்வதை மகாலட்சுமி விரும்புகிறாள். நல்லது, கெட்டது என்று எப்படி இரண்டு பக்கங்கள் இருக்கிறதோ! அதே போல துர்தேவதைகள், நல்ல தேவதைகளும் நம் வீட்டை சுற்றி இருக்கத் தான் செய்வர். அதில் எந்த தேவதையை நாம் அழைக்கிறோம்? என்பதில் தான் நம்முடைய அதிர்ஷ்டமே அடங்கி இருக்கிறது. நாம் நடந்து கொள்ளும் ஒவ்வொரு விஷயங்களிலும் நம்முடைய ஆரா சக்தி கட்டுப்படுவது போல, தேவதைகளையும் அது கட்டுப்படுத்துகிறது. அவ்வகையில் வீட்டில் அதிர்ஷ்ட மழை பொழிய என்ன செய்யலாம்? என்பதை இப்பதிவில் காண்போமா?

new home

நாம் நல்லது நினைத்தால், நல்லது நடக்கும். கெட்டதும் நினைத்தால், கெட்டது நடக்கும் என்பது போல நம்முடைய நல்ல செயல்கள் நல்ல தேவதைகளையும், தீய செயல்கள் துர் தேவதைகளையும் வீட்டிற்குள் அழைத்து விடும். துர்தேவதைகள் இருக்கும் இல்லத்தில் மகாலட்சுமி எப்போதும் வருவதில்லை. அப்போது அங்கே பணக்கஷ்டம் உருவாகிறது. ஒருவருக்கு பணக்கஷ்டம் ஏற்படுவதற்கு அவர்கள் தான் காரணம். வேறு யாருமல்ல. அதனால் தான் வீடுகளில் இறைவழிபாடுகள் எப்பொழுதும் தடைபடாமல் நடந்து கொண்டே இருக்க வேண்டும்.

கோவில்களில் பூஜைகள் நின்றால் அந்த ஊருக்கே ஆபத்து என்று கூறக் கேட்டிருப்போம். ஊரில் மழையும் பெய்யாமல், பஞ்சமும் ஏற்படும். இதெல்லாம் அந்தக் காலத்தில் உண்மையாக நடந்துள்ள விஷயங்கள் தான். அதற்காக தான் இன்று மூலை முடுக்குகளிலெல்லாம் சிறிய சிறிய கோவில்கள் நிறைய எழுந்தருளியுள்ளன. எந்த தெருவில் திரும்பினாலும் ஒரு கோவில் இருக்கும். இதெல்லாம் அந்த காலத்திலிருந்து நம்பிக்கையுடன் கடைபிடிக்கப்பட்டு வரும் சில பக்தி நெறிகள். நம்முடைய வீட்டிலும் செல்வ செழிப்பு உண்டாவதற்கு நாம் நல்ல தேவதைகளை வீட்டிற்குள் அழைக்க வேண்டும்.

gopuram-2

இதற்கு காலையில் எழுந்திருக்கும் பொழுதே, முதல் வேலையாக இந்த விஷயத்தை கடைபிடித்து பாருங்கள். இதனால் வாசலில் இருக்கும் நல்ல தேவதைகள் வீட்டிற்குள் அடியெடுத்து வைக்கும் என்பது நியதி. அதாவது வீட்டு வாசலில் தண்ணீர் தெளித்து கோலம் போடுவது, மகாலட்சுமியை அழைப்பதற்கு தான். அந்த தண்ணீரில் சிறிது புதினா இலைகளையும், துளசி இலைகளையும் போட்டு ஊறவைத்து மறுநாள் காலையில் அந்த தண்ணீரை வைத்து வாசல் தெளித்து கோலம் இட்டு வந்தால் நல்ல தேவதைகள் வீட்டிற்குள் வருவதாக சில தாந்த்ரீக குறிப்புகள் எடுத்துரைத்துள்ளது.

- Advertisement -

துளசியில் மகாலட்சுமியும், ஸ்ரீமந் நாராயணனும் வாசம் செய்வதாக புராணங்கள் குறிப்பிடுகிறது. அதே போல புதினா இலைகளில் நல்ல தேவதைகளை அழைக்கும் சக்தி உள்ளதாக தாந்திரீகம் குறிப்பிடுகிறது. இந்த இரண்டு இலைகளையும் முன்னிரவு ஊற வைத்து அந்த தண்ணீரை கொண்டு வாசல் தெளித்து கோலமிட்டால் எல்லா நல்ல தேவதைகளும் எளிதாக நம் வீட்டிற்குள் வந்து விடுவார்கள். நல்ல தேவதைகள் இருக்கும் வீட்டில் மகாலட்சுமியும் நிச்சயம் வருவாள்.

mint-puthina-plant

மகாலட்சுமி இருக்கும் வீட்டில் பணக் கஷ்டமும், வருமான தடையும் ஏற்படாது. எப்பொழுதும் மகிழ்ச்சியும், செல்வ செழிப்பும் நிறைந்திருக்க இது போன்ற சிறு சிறு குறிப்புகள் பெரும் துணை புரிவதாக ஆன்மீகத்தில் சொல்லப்பட்டுள்ளது. சிறு துளி பெருவெள்ளம் என்பது போல சிறு சிறு பக்தி நெறிகள் நம்முடைய கஷ்டங்களை போக்கி, வீட்டில் செல்வ வளத்தை அதிகரித்து அதிர்ஷ்ட மழையை பொழிய வைத்து, மனமகிழ்ச்சியை உண்டாக்கும்.

இதையும் படிக்கலாமே
வீட்டில் இந்த பொருட்களை மட்டும் தெரியாமல் கூட சிந்தினால்! நடக்கக்கூடாதது எல்லாம் நடக்கும் தெரியுமா?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.