நாளை பொங்கல் திருநாள் அன்று இவற்றை மறக்காமல் செய்யுங்கள்

pongal-festival

சூரியன் “தனுசு” ராசியில் இருந்து “மகர” ராசிக்கு பிரவேசிக்கும் மாதத்தின் முதல் தினம் தை மாதத்தின் முதல் தினமாகவும், தமிழர்களின் அறுவடை திருநாளான பொங்கல் திருநாளாகவும் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக கொண்டாடப்படுகிறது. சூரியன் மகர ராசிக்குள் பிரவேசிக்கும் காரணத்தால் இந்தியாவின் பல பகுதிகளில் இந்த பொங்கல் திருநாள் ‘மகரசங்கராந்தி’ தினமாக கொண்டாடப்படுகிறது. தமிழர்களின் விஷேஷ திருநாளான பொங்கல் விழா அன்று நாம் செய்ய வேண்டிய விடயங்கள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

sooriyan

பொங்கல் பண்டிகை கொண்டாடுவதற்கும் வழிபடுவதற்கும் சில விதிமுறைகளை பின்பற்றுவதால் அனைவருக்கும் நன்மை பயக்கும் விழாவாக பொங்கல் திருநாள் இருக்கும். பொங்கல் பண்டிகையின் போது பெண்கள் சூரியன் உதிப்பதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பே துயிலெழுந்து, குளித்து முடித்து விட்டு வீட்டின் முற்றத்தில் நீர் தெளித்து கோலமிட வேண்டும். பின்பு முற்றத்தின் ஒரு பகுதியை பசு சாணத்தால் மெழுகி, கோலமிட்டு, காவி நிறம் பூச வேண்டும்.

அடர் சிவப்பு அல்லது அரக்கு நிறமானது துர்க்கா தேவிக்குரிய நிறமாகும். நமது வாழ்வில் அனைத்து கஷ்டங்கள், துன்பங்கள் நீங்கி மங்கல வாழ்வும், சுக போகங்கள் பெருக இந்த அரக்கு அல்லது காவி நிறத்தை பூசுகிறார்கள். பின்பு முற்ற பகுதியை மாவிலை, வாழை, கரும்பு மற்றும் மலர்களால் அலங்கரித்து, பிள்ளையாரை பிடித்து வைக்க வேண்டும். பின்னர் குத்து விளக்கேற்றி, பூரண கும்பம் வைத்து வெற்றிலை, பாக்கு, தேங்காய் முதலிய மங்கல பொருட்களையும் வைக்க வேண்டும்.

pongal

பின்பு விநாயகர் பெருமானை முதலில் மனதில் நினைத்து வழிபட்டு, உங்களின் குலதெய்வம் மற்றும் இஷ்ட தெய்வங்களை பிரார்த்தனை செய்த பின்பு, ஒரு புது மண்பானையை எடுத்து அதன் வாய்ப்புறத்தில் மஞ்சள் இலை மற்றும் மாவிலைகளை கட்ட வேண்டும். அந்த மண்பானையின் மேற்புறத்தில் திருநீறை குழைத்து, 3 இடங்களில் பூசி, சந்தனம், குங்குமத்தால் திலகமிட்டு கொள்ள வேண்டும்.

- Advertisement -

பானைக்குள் பசும்பால் மற்றும் தண்ணீர் விட்டு நிரப்பி, தூபங்கள் கொளுத்தி, தீபம் காட்டி, கற்பூர ஆரத்தி காட்டி அந்த கற்பூர நெருப்பை அடுப்பில் போட்டுநெருப்பு வைக்க வேண்டும். பின்னர் குடும்பத்தின் கணவன், மனைவி இருவரும் சூரிய பகவான் மற்றும் அனைத்து தெய்வங்களையும் வணங்கி, பானையை இருவரும் சேர்ந்து தங்கள் கைகளால் பிடித்து, தூக்கி அடுப்பில் வைக்க வேண்டும். பானையில் பால் பொங்கி வரும் போது பொங்கலோ, பொங்கல் என்று குரல் எழுப்பியவாறே பச்சரிசியை பெண்கள் இருகைகளாலும் அள்ளி சூரியபகவானை வணங்கியபடி பானையின் வாய்விளம்பினை 3 முறை அரிசி வைத்திருக்கும் உங்கள் கைகளை சுற்றி அரிசியை பானையில் போட வேண்டும்.

Pongal festival

நன்கு பொங்கிய பொங்கலை எடுத்து மூன்று தலைவாழை இலையில் இட்டு, பழங்கள், கரும்பு முதலியவற்றை சூரிய பகவானுக்கு படைத்து, தூபதீபம் காட்டி சூரியபகவானை அனைவரும் வணங்க வேண்டும். சூரியனுக்கு தீபாராதனை காட்டும் போது தீபாராதனை காட்டும் போது உங்கள் குலதெய்வத்தையும், மூதாதையர்களையும் மனதில் நினைத்து வணங்க வேண்டும். இதன் பிறகு அனைவரும் படையல் பொங்கலை பிரசாதமாக சாப்பிட வேண்டும். மாலையில் அருகிலுள்ள கோயிலுக்கு சென்று இறைவனுக்கு தீபம் ஏற்றி வழிபட வேண்டும். மேற்கண்ட முறையில் பொங்கல் வழிபாடு செய்வதால் வருடம் முழுவதும் நன்மையான பலன்களை பெறுவீர்கள்.

இதையும் படிக்கலாமே:
மீன ராசி பரிகாரங்கள்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Pongal festival in Tamil. It is also called as Pongal vizha in Tamil or Pongal thirunal in Tamil or Pongal pandigai in Tamil or Thai thirunal in Tamil or Pongal valipadu in Tamil.