இந்த ஐடியா மட்டும் தெரிஞ்சா போதுங்க. டயர்டே ஆகாமல் பொங்கலுக்கு உங்களுடைய வீட்டை பம்பரம் போல சுற்றி சுற்றி சுத்தம் செய்து விடலாம்.

cleaning
- Advertisement -

பொங்கல் வரப்போகுது என்றாலே வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகளுக்கு வீட்டை சுத்தம் செய்வது ஒரு மிகப்பெரிய வேலையாக இருக்கும். அதிலும் வேலைக்கு செல்லக்கூடிய பெண்களுக்கு இந்த பொங்கல் வேலையை செய்து முடிப்பது பெரிய விஷயம் தான். வீட்டில் உதவிக்கு யாராவது இருந்தால் சமாளித்து விடலாம். ஒருவரே எல்லா வேலையையும் பார்க்க வேண்டும் என்றால் அது ரொம்ப ரொம்ப கஷ்டம். சுத்தம் செய்யக்கூடிய வேலையை வருடத்தில் ஒரு நாள் மட்டும் செய்யக்கூடாது. வாரத்தில் ஒரு நாள், மாதத்தில் ஒரு நாள் உங்களுடைய வீட்டில் ஒவ்வொரு பகுதியாக, சுத்தம் செய்து கொண்டே இருந்தால், இந்த பொங்கல் வேலை மலை போல் நமக்கு தெரியாது.

பொங்கலுக்கு வீடு சுத்தம் செய்வது எப்படி:
இருப்பினும் இந்த பொங்கலுக்கு உங்களுடைய வீட்டு சுத்தம் செய்யக்கூடிய வேலையை எப்படி சுலபமாக செய்வது என்பதை பற்றிய பயனுள்ள சின்ன சின்ன வீட்டு குறிப்புகளை இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். குறிப்புகளை எல்லாம் படித்து பாருங்கள். இப்போதுதான் புதியதாக பொங்கல் வேலை செய்ய தொடங்குபவர்களுக்கு இந்த குறிப்பை படிக்கும் போது ஏதாவது சின்ன சின்னதா ஐடியாக்கள் கிடைக்கும்.

- Advertisement -

பிளான் பண்ணாம எந்த வேலையையும் தொடங்கவே கூடாது. முதலில் பிளானிங் ரொம்ப ரொம்ப முக்கியம். சமையலறைக்காக தனியாக ஒரு நாள் ஒதுக்க வேண்டும். பூஜை அறைக்காக தனியாக ஒரு நாள் ஒதுக்க வேண்டும். வரவேற்பறை படுக்கையறைக்காக தனியாக ஒரு நாள் ஒதுக்க வேண்டும். இப்படி மூன்று அல்லது நான்கு நாட்களாக உங்களுடைய வேலையை பிரித்துக் கொள்ளுங்கள்.

சுத்தம் செய்யக்கூடிய வேலையை இன்றிலிருந்து ஆரம்பிக்கப் போகிறீர்கள் என்றால், காலையில் எழுந்த உடனேயே காலை, மதியத்திற்கு தேவையான சாப்பாட்டை சமைத்து பத்திரமாக மூடி ஒரு இடத்தில் வைத்து விட வேண்டும். அதன் பின்பு சுத்தம் செய்ய தொடங்கி விடலாம். மாஸ்க் அவசியம் போட்டுக்கோங்க.

- Advertisement -

முதலில் வீட்டில் பரண் மேல் சுத்தம் செய்து விட வேண்டும். அதாவது ஸ்லாப் அட்டாணி என்று கூட சில பேர் சொல்லுவார்கள். அந்த இடத்தில் இருக்க கூடிய தேவையில்லாத எல்லா பொருட்களையும் முதலில் தூக்கி வெளியே போட்டு விடுங்கள். பரண்மேல் மட்டுமல்ல, உங்களுடைய வீட்டில் முதலில் தேவையில்லாத பொருட்களை எல்லாம் முதலில் அகற்றி வீட்டிற்கு வெளியே வைத்து விட்டால் சுத்தம் செய்யக்கூடிய வேலை மிக மிக எளிமையாக முடிந்து விடும். (பழைய துணி, உடைந்த பிளாஸ்டிக் பொருட்கள், குழந்தைகள் விளையாடும் பழைய பொம்மைகள், பயன்படுத்தாத உடைந்த எல்லாவற்றையும் தூக்கிப் போட்டுடுங்க.)

அதன் பிறகு கீழே இருக்கக்கூடிய அலமாரிகளை எல்லாம் சுத்தம் செய்வதற்கு முன்பு, முதலில் மேலே இருக்கக்கூடிய ஒட்டடையை அடித்து விட வேண்டும். கீழே இருக்கும் டிவி, கம்ப்யூட்டர், ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், டிரெஸ்ஸிங் டேபிள், இப்படி மற்ற பொருட்களின் மீது ஒரு புடவை அல்லது பெட்ஷீட் போட்டு மூடிவிட்டு ஒட்டடையை அடிக்க தொடங்குங்கள்.

- Advertisement -

அதன் பிறகு ஜன்னலில் இருக்கும் வலை ஸ்கிரீன்களை எல்லாம் கழட்டி, தண்ணீரில் 20 நிமிடம் ஊற வைத்து துவைத்து மொட்டை மாடியில் கொண்டு போய் காய வைத்து விட்டு வந்து விடுங்கள். வீட்டுக்குள் இந்த வேலையெல்லாம் முடிப்பதற்குள் அது காய்ந்து விடும். அடுத்து வீட்டிற்குள் வந்து இதற்குள் துடைக்க வேண்டிய பொருட்களை எல்லாம் துடைத்து, வீட்டை சுத்தம் செய்ய வேண்டும். உதாரணத்திற்கு ஜன்னல், கதவுகள், மாட்டி வைத்திருக்கும் போட்டோ, வால் கிளாக், ஃபேன், லைட் ஸ்விட்ச் போர்டு இவைகளை எல்லாம் துடைத்து சுத்தம் செய்து விட வேண்டும். பிறகு டிவி கம்ப்யூட்டர் ட்ரெஸ்ஸிங் டேபிள், ஷோகேஸ் இவைகளையும் ஒரு துணியை வைத்து துடைத்து மொத்தமாக சுத்தம் செய்து விடுங்கள்.

அடுத்து கீழே சிந்தி இருக்கக்கூடிய தூசு தும்புகளை எல்லாம் கூட்டி மொத்தமாக எடுத்து வெளியே கொட்டி விட வேண்டும். பிறகு உடனடியாக வீட்டை மாப் போட்டு விட வேண்டும். மற்றபடி வரவேற்பறையில் இருக்கும் அலமாரி, பெட்ரூமில் இருக்கும் அலமாரி, இவைகளை எல்லாம் தனித்தனியாக ஒவ்வொரு நாள் ஒவ்வொரு அலமாரியாக சுத்தம் செய்து கொள்வது நல்லது. (அதாவது துணிமணிகள் மற்ற தேவையான பொருட்களை எல்லாம் அடுக்கி வைத்திருக்கும் அலமாரிகள் இருக்கும் அல்லவா, அதை ஒருநாள் தனியாக சுத்தம் செய்து அலமாரியில் இருக்கும் நியூஸ் பேப்பரை எல்லாம் மாற்றி விடுங்கள்.)

இது அல்லாமல் சில பேர் வீட்டில் வெளியே விராண்டா, படிக்கூண்டு, இருக்கும் அல்லவா அதையும் பாத்ரூமையும் சேர்த்து ஒரு நாள் தனியாக சுத்தம் செய்ய பிளான் செஞ்சுக்கோங்க. இப்படி செய்தால் மூன்றிலிருந்து நான்கு நாட்களுக்குள் உங்களுடைய பொங்கல் வேலை முடிந்துவிடும்.

இதையும் படிக்கலாமே: ஸ்டீல் ஸ்க்ரப்பரை வைத்து பாத்ரூமை தேய்த்து தேய்த்து கழுவி கையெல்லாம் வலிக்குதா? கை வலிக்காமல் பாத்ரூமில் இருக்கும் கறைகளை நீக்க இதோ ஒரு சூப்பர் ஐடியா.

இறுதியாக எல்லா அழுக்கும் போர்வை, தலையணியில், பாயில் படிந்து இருக்கும் அல்லவா. அதையெல்லாம் இறுதியாக துவைத்து போட்டு விட வேண்டும். இப்படி ஒவ்வொரு வேலைக்கும் ஒவ்வொரு நாள் கொடுத்து தனித்தனியாக பொங்கல் வேலையை செய்யும் போது நிச்சயமாக இல்லத்தரசிகளுக்கு பெரியதாக டயட் இருக்காது. உங்களுடைய வீட்டில் குழந்தைகள் இருந்தால் அவர்களுக்கும் ஜன்னல் கதவுகள் துடைக்க கூடிய வேலையை சொல்லிக் கொடுங்கள். அவர்களும் உதவி செய்வார்கள். வீட்டில் இருக்கும் ஆண்களுக்கும் நேரம் கிடைக்கும் போது வீடு சுத்தம் செய்ய மனைவிக்கு உதவி செய்யலாம். மேலே சொன்ன பயனுள்ள குறிப்பு உங்களுக்கு பிடிச்சிருந்தா ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -