ஸ்டீல் ஸ்க்ரப்பரை வைத்து பாத்ரூமை தேய்த்து தேய்த்து கழுவி கையெல்லாம் வலிக்குதா? கை வலிக்காமல் பாத்ரூமில் இருக்கும் கறைகளை நீக்க இதோ ஒரு சூப்பர் ஐடியா.

- Advertisement -

எவ்வளவுதான் வேலையை சுலபமாக்குவதற்கு லிக்விட், பிரஷ் வந்தாலும் இந்த பாத்ரூமை சுத்தம் செய்யக்கூடிய வேலை மட்டும் நமக்கு எளிமையாக முடியவே முடியாது. கை வலிக்க ஸ்டில் நாரை போட்டு தேய்த்து தேய்த்து வீட்டில் இருக்கும் பெண்களுக்கு கை வலி வந்தது தான் மிச்சம். மிக மிக எளிமையான முறையில் பாத்ரூமில் இருக்கும் கறைகளை நீக்குவதற்கு ஒரு பயனுள்ள வீட்டு குறிப்பு இதோ உங்களுக்காக. இந்த ஐடியாவை ட்ரை பண்ணி பாருங்க. உங்களுக்கு பிடிச்சிருந்தா இதே மெத்தடை பயன்படுத்தி உங்க பாத்ரூமை சுத்தம் செய்து கொள்ளலாம்.

கை வலிக்காமல் பாத்ரூம் சுத்தம் செய்ய புது ஐடியா:
உங்கள் வீட்டு பாத்ரூமை சுத்தம் செய்வதற்கு உங்கள் விருப்பம் போல எந்த லிக்விடை வேண்டும் என்றாலும் பயன்படுத்திக் கொள்ளுங்கள். அது உங்களுடைய விருப்பம். ஹார்பிக், லைசால், பாத்ரூம் கிளீனர், அல்லது வீட்டிலேயே செய்த லிக்விட் (வினிகர், எலுமிச்சை பழச்சாறு, உப்பு, டெட்டால், துணி பவுடர், சேர்த்து கரைத்த லிக்விட்), என்று எது உங்களுக்கு அலர்ஜி இல்லாமல் இருக்குதோ அதை எடுத்து முதலில் சுவரில் டைல்ஸில் படும்படி ஊற்றி விட வேண்டும். ஸ்ப்ரே பாட்டில் பயன்படுத்தியும் ஊற்றலாம். அல்லது உங்கள் வசதிக்கு ஏற்ப அழுக்கு உள்ள பகுதிகளில் ஏதாவது ஒரு லிக்விடை ஊற்றி ஊற வையுங்கள்.

- Advertisement -

நாம் இப்படி ஊற்றி இருக்கக்கூடிய லிக்விட் எல்லா இடங்களிலும் பரவ வேண்டும். அதற்காக ஒரு துடைப்பத்தை வைத்து இந்த லிக்விடை எல்லா இடங்களிலும் தடவி விடுங்கள். அதன் பின்பு இந்த அழுக்கு படிந்த பாத்ரூம் அப்படியே பத்து நிமிடம் ஊறட்டும். ஊறிய பின்பு ஏதாவது சின்ன ஸ்க்ரப்பரை வைத்து தான் டயல்ஸ் தரை, கதவை தேய்ப்போம் அல்லவா. அந்த சின்ன ஸ்டீல் ஸ்க்ரப்பரை இனி தொடாதீர்கள்.

உங்க எல்லோர் வீட்டிலும் குப்பை வார கூடிய முறம் இருக்கும் அல்லவா. அந்த முறத்தின் குப்பை அல்லும் பகுதி நன்றாக அகலமாக கொஞ்சம் கூர்மையாக இருக்கும். அந்த குப்பை வார கூடிய முறத்தின் மேலே ஒரு தடிமனான துணியை சுற்றி, சேஃப்டி பின் போட்டு தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். அப்படி இல்லையா ஒரு பழைய துணி பையை அந்த மரத்தில் போட்டு கட்டிக் கொள்ளுங்கள். முறத்திலிருந்து துணி நழுவி கழண்டு வரக்கூடாது. அவ்வளவு தான்.

- Advertisement -

குப்பை வாரும் முறத்தின் அந்த நுனி பகுதியை தண்ணீரில் நனைத்து விட்டு, அல்லது நீங்கள் சுத்தம் செய்யும் லிக்விடில் நனைத்துவிட்டு உங்கள் பாத்ரூமை தேய்த்துக் கொடுக்க வேண்டும். முறத்தின் கைப்பிடியை நீங்கள் பிடித்துக் கொள்ளுங்கள். இந்த முறம் அகலமாக இருப்பதால் மிக மிக எளிமையாக உங்கள் வீட்டு பாத்ரூம் டைல்ஸ் தேய்த்து சுலபமாக சுத்தம் செய்து கொள்ளலாம். அதாவது உங்களுடைய வீட்டில் நீங்களே தயார் செய்த வைப்பர் இது.

நீங்களே தயார் செய்த இந்த பிளாஸ்டிக் மொரம் வைப்பர் வைத்து பாத்ரூம் டைல்ஸ், கதவு இவைகளை தேய்க்கும் போது அதில் இருக்கும் அழுக்கு மிக மிக எளிமையாக நமக்கு நீங்கிவிடும். (ஆனால் முறத்தின் நுனியில் அந்த பிளாஸ்டிக் கூர்மையாக இருக்கும். துணியோடு சேர்ந்து அதை நாம் அழுக்கு படிந்த டயல்ஸில் லேசாக அழுத்தம் கொடுத்து தேய்க்கும் போது, அழுக்கு சீக்கிரமே நீங்கிவிடும். வைப்பருக்கு முனையில் ரப்பர் போல தான் இருக்கும். கடையில் வாங்கிய வைப்பறை வைத்த சுத்தம் செய்தாலும் கூட பெஸ்ட் ரிசல்ட் கிடைக்காது.)

இதையும் படிக்கலாமே: பாத்ரூம் கிச்சன் கிளீன் பண்ண இனி கொஞ்சமும் கஷ்டப்படவே வேண்டாமே டெட்டால் கூட இதை சேர்த்து ட்ரை பண்ணி பாருங்க!

இப்படி சுத்தம் செய்தால் கொஞ்சம் கை வலிக்காமல் எளிமையாக நிறைய இடங்களை தேய்த்து நம்மால் சுத்தம் செய்ய முடியும். அதற்காகத்தான் இந்த குறிப்பு. நீங்கள் ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள். உங்களுக்கு பிடித்திருந்தால் இதை தொடர்ந்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

- Advertisement -