உங்கள் வீட்டு பூச்செடிகளில் இருக்கும் எப்படிப்பட்ட பூச்சிகளையும் விரட்ட, காசு கொடுத்து செயற்கை மருந்து வாங்க வேண்டாம். உங்கள் வீட்டு சமையலறையில் இருக்கும் இந்த இயற்கையான பொருட்கள் போதும்.

garden-insect

நம் எல்லோருக்குமே உணவு மற்றும் இதர பயன் மிகுந்த பொருட்களை அதிக அளவில் வழங்கக்கூடிய ஒரு உயிர் வகையாக மரங்கள், செடிகள், தாவரங்கள் போன்றவை திகழ்கின்றன. தற்காலத்தில் கிராமம் அல்லது நகரம் என எந்த இடத்தில் மனிதர்கள் வசித்தாலும், தங்களுக்கு கிடைக்கின்ற குறைந்த இடத்தில் அவர்களுக்கு விருப்பமான மரம், செடி வகைகளை வளர்க்கின்றனர். அப்படி அவர்கள் வளர்க்கின்ற அந்த தாவரங்கள் பருவநிலை மாற்றங்கள் மற்றும் இதர காரணங்களால் பூச்சிகளின் தாக்குதலுக்கு உள்ளாகிற பொழுது செய்வதறியாது வருந்துகின்றனர். தங்கள் வீடுகளில் வளர்க்கப்படுகின்றன செடி, தாவர வகைகளை மேற்சொன்ன பூச்சிகளின் தாக்குதல்களிலிருந்து காப்பதற்கு, வீட்டிலேயே சுலபமான பூச்சிக்கொல்லி திரவங்களை தயாரிக்கும் முறை குறித்து இங்கே விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

kambali-poochi

ஒரு கப் அளவிற்கு நல்லெண்ணெய் அல்லது விளக்கெண்ணெய் எடுத்துக் கொண்டு, அதில் ஒரு டேபிள்ஸ்பூன் அளவு பெரிய கடைகளில் விற்கப்படுகின்ற சோப்பு திரவம் வாங்கி, கலந்துகொண்டு அந்தக் கலவையும் ஸ்பிரேயர் எனப்படும் நீர் தெளிப்பான் இருக்கின்ற குடவையில் ஊற்றி, நன்கு குலுக்க வேண்டும். இதன் பின்பு அந்தக் கலவையை ஸ்பிரேயர் கொண்டு, உங்கள் வீட்டு தோட்டத்தில் பூச்சிகளால் பாதிக்கப்பட்டிருக்கும் செடிகளின் மீது முழுதாக தெளிக்க வேண்டும். இந்த கலவையில் எண்ணெய் நிறைந்திருப்பதால் செடிகளுக்கு தீங்கு விளைவிக்கின்ற பூச்சிகளின் உடல் மீது அந்த எண்ணெய் ஒட்டிக் கொண்டு அவைகள் சுவாசிக்கவோ அல்லது பறந்து போகிற முடியாத படியோ செய்து அவற்றை கொன்றழித்து செடிவகைகளை காக்கும்.

நாம் சமையலுக்கு பயன்படுத்தும் பூண்டு பல மருத்துவ குணங்களை கொண்டதாகும். பூண்டு ஒரு மிகச்சிறந்த கிருமிநாசினி என்பதை நாம் அனைவரும் அறிவோம். அப்படிப்பட்ட பூண்டு பயிர்களுக்கு தீமை விளைவிக்கும் பூச்சிகளை அழிக்கும் ஆற்றல் நிறைந்ததாகவும் உள்ளது. பூண்டு பயன்படுத்தி பூச்சிக்கொல்லி தயாரிக்க விரும்புபவர்கள், 2 முழுமையான பூண்டுகளை எடுத்துக் கொண்டு, அவற்றை தோல் நீக்கி, சிறிதளவு தண்ணீர் சேர்த்து, மிக்ஸியில் போட்டு பசை போன்ற பதத்தில் நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். இப்படி தயாரான இந்தப் பூண்டு பசையை ஒரு நாள் இரவு முழுவதும் ஊற விட வேண்டும். மறுநாள் காலையில் ஒரு கிண்ணத்தில் இந்தப் பூண்டுப் பசையை வடிகட்டி, பூண்டுச் சாற்றை மட்டும் எடுத்துக்கொண்டு, அதனுடன் அரை கப் அளவு நல்லெண்ணெய் அல்லது வேப்பெண்ணெய் மற்றும் ஒரு டேபிள்ஸ் பூன் சோப்பு திரவம் ஊற்றி, நன்கு கலந்து இந்தக் கலவையை ஸ்பிரேயர் டப்பாவில் ஊற்றி நன்கு குலுக்கி, பின்பு உங்கள் தோட்டத்தில் பூச்சி தாக்குதலால் பாதிக்கப்பட்டிருக்கும் செடிகளின் மீது ஸ்பிரே செய்ய வேண்டும். இந்த பூண்டு பூச்சிக்கொல்லி மருந்து தாவரங்களில் இருக்கின்ற கண்ணுக்குத் தெரியாத நுண் பூச்சிகளை அழித்து, மேற்கொண்டு புதிய வகை பூச்சிகளின் தாக்கம் செடிகளுக்கு ஏற்படாதவாறு தடுக்கும் திரவமாக செயல்படுகிறது.

rose-plant-spray

நாம் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தும் காய் வகையான மிளகாய் நுண் கிருமிகளையும், பூச்சிகளையும் அழிக்கும் அமிலங்களை அதிகம் கொண்டுள்ளது. மிளகாய் கொண்டு பூச்சிக்கொல்லி தயாரிக்க விரும்புபவர்கள். அரை கப் அளவிற்கு பச்சை அல்லது சிவப்பு மிளகாய்களை எடுத்துக் கொண்டு அதை மிக்ஸியில் போட்டு, சிறிதளவு தண்ணீர் விட்டு பசை பதத்தில் நன்கு அடித்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு பாத்திரத்தில் இந்த மிளகாய் பசையை வடிகட்டி, அதன் சாற்றினை மட்டும் எடுத்துக் கொண்டு அதனுடன் சோப் திரவம் ஒரு டேபிள் ஸ்பூன் அளவு கலந்து, ஸ்ப்ரேயர் குடுவைக்குள் அந்த கலவையை ஊற்றி நன்கு குலுக்கிய பிறகு உங்கள் வீட்டில் பூச்சி பாதிப்பு இருக்கின்ற செடிகளின் மீது தெளித்து வந்தால் எப்படிப்பட்ட பூச்சிகளும் விரைவாக அந்தச் செடிகளை விட்டு நீங்கும்.

பலரும் தங்களின் வீடுகளில் தக்காளிச் செடியை வளர்க்கின்றனர். ஆனால் அந்த தக்காளி செடியில் இலைகளில் இருக்கின்ற “டொமடைன்” எனப்படும் வேதிப்பொருள் சிறந்த பூச்சிக்கொல்லியாக இருப்பதாக சமீப காலங்களில் நடைபெற்ற ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. தக்காளி இலைகள் கொண்டு பூச்சிக்கொல்லி தயாரிக்க விரும்புபவர்கள் முழுவதுமாக வளர்ந்த தக்காளி செடியின் அடி பாகத்தில் இருக்கின்ற, நன்கு வளர்ந்த தக்காளி இலைகள் 2 கப் அளவிற்கு சேகரித்து, ஒரு கோப்பையில் கால்பங்கு அளவிற்கு தண்ணீர் ஊற்றி அந்த தக்காளி இலைகளை ஒரு நாள் முழுவதும் ஊற வைக்கவேண்டும். மறுநாள் காலையில் தக்காளி இலைகளை நீக்கிவிட்டு, அந்த இலைகள் ஊறிய நீரை ஊற்றி பூச்சித் தாக்குதல்கள் இருக்கின்ற செடிகளின் மீது தெளித்து அவற்றைப் பாதுகாக்கலாம்.