வீட்டில் பூஜை மணியை ஆட்டும் பொழுது செய்யக்கூடாத இந்த தவறை நீங்களும் செய்றீங்களா? இனிமே மாத்திக்கோங்க!

pooja-bell1

பூஜை அறையில் நாம் செய்யும் சிறு சிறு விஷயங்களிலும் கவனமாக இருப்பது வீட்டிற்கு சுபீட்சத்தை கொடுக்கும். பூஜை அறையில் வைத்திருக்கும் ஒவ்வொரு பொருட்களுக்கும், ஒவ்வொரு சக்திகள் உண்டு. ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு பொருளும் உண்டு. அந்த வகையில் பூஜை அறையில் வைத்திருக்கும் மணி பூஜைக்கு மிகவும் முக்கியமானது ஆகும். வீட்டில் பூஜை அறையில் எதற்காக மணி அடிக்கிறார்கள்? வீட்டில் மட்டுமல்ல, கோவில்களிலும் மணி ஓசை முக்கியத்துவமாக கருதப்படுவது எதற்காக? அதை பூஜையின் பொழுது எப்படி முறையாக பயன்படுத்த வேண்டும்? என்பதை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

temple-bell

கோவில்களிலும், வீடுகளிலும் பூஜை செய்யும் பொழுது மணி அடிப்பதற்கு மிக முக்கிய காரணம் இறைவனுக்கும் நமக்குமான உரையாடலை நெறிப்படுத்துவதற்கு தான். கோவிலுக்குள் நுழைந்த உடன் அமைதியாக இருந்தால் நம் மனமும் பல்வேறு சிந்தனைகளில் மூழ்கி போகும் ஆபத்து உண்டு. மணியோசை கேட்டால் சிந்தனை ஒருமுகப்படும். நாம் எதற்காக அங்கு சென்று இருக்கிறோம்? நமக்கு என்ன வேண்டும்? என்கிற தெளிவான சிந்தனை பிறக்கும். இறைவனுக்கும் நமக்குமான தொடர்பை கொண்டு செல்வதில் இந்த பூஜை மணிக்கு முக்கிய பங்கு உண்டு.

வீட்டிலும் அது போல் தான், வீட்டில் நமக்கு இருக்கும் அத்தனை பிரச்சனைகளும் தீர்வதற்கு தான் பூஜை செய்கிறோம். அந்த பூஜை முழுமனதாக, ஒரு மித்த நினைவுகளுடன் செய்ய வேண்டும். இதனை மணி ஓசை நமக்கு பெற்றுத் தரும். அது போல் பூஜை மணியை கொண்டு ஒலியை எழுப்பும் பொழுது நம்மையறியாமலேயே நம்முடைய மனதை இறைவன் பால் ஈர்க்கப்படுகிறது. நம் வேண்டுதல்களை வைக்கும் முன்பே, நம் வேண்டுதல் பலிக்கும் என்கிற தன்னம்பிக்கையை இந்த பூஜை மணி நமக்கு உண்டாக்குகிறது.

aarathi

வீட்டில் நாம் பூஜை செய்யும் பொழுது கற்பூர ஹாரத்தி காண்பிக்கும் பொழுது பூஜை மணியை எடுத்து ஒலிக்க விடுவோம். பூஜையை ஆரம்பிக்கும் பொழுதே மணி ஓசையை எழுப்ப வேண்டிய அவசியம் இல்லை. கற்பூர ஹாரத்தி காண்பிக்கப்படும் பொழுது மட்டும் மணி ஓசை எழுப்பினால் போதுமானது. கற்பூர ஆரத்தி காண்பிக்கப்படும் பொழுது இறைவன் நம் பக்கம் நமக்கான வேண்டுதல்களை கேட்க காத்திருப்பதாக சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

எனவே கற்பூரத்தை எரிய விடும் முன்பு பூஜை மணியை வலது கையில் எடுத்து பின் அதை இடது கைக்கு மாற்றிக் கொள்ள வேண்டும். அதன் பின்னர் கற்பூரத்தை பற்ற வைத்து ஹாரத்தி காண்பிக்க ஆரம்பிக்க வேண்டும். அது போல் ஹாரத்தி கீழே வைத்து விட்ட பின்னர் தான் இடது கையில் இருக்கும் மணியை வலது கைக்கு மாற்றி கீழே வைக்க வேண்டும். தேவையில்லாத நேரத்தில் பூஜை மணியை பயன்படுத்தக் கூடாது.

pooja-bell

பூஜை மணியை ஒரு போதும் தரையில் வைக்கக்கூடாது. பூஜையில் இருக்கும் தாம்பூல தட்டில் வைக்கலாம். பூஜை மணியை ஒரு பொழுதும் சாய்த்து வைக்க கூடாது வைக்க வேண்டும். சந்தன, குங்குமம் இடாமல் பூஜை மணியை ஆட்ட கூடாது. பூஜை மணி சேதமடைந்தால் உடனே அதனை மாற்றி விட வேண்டும். சேதமடைந்த பூஜை மணியை ஒரு போதும் வீட்டில் வைத்திருக்க கூடாது, இது நஷ்டத்தை ஏற்படுத்தும். பூஜை மணியை கீழே தவறா விடுவது கூடாது. தெரியாமல் கீழே தவறினால் வேண்டுதலில் குறை வைத்து இருப்பதாக அர்த்தமாகிறது.

இதையும் படிக்கலாமே
இதை கோவிலில் நீங்கள் பெற்றால் உங்கள் எப்பேர்ப்பட்ட தலையெழுத்தும் தழைகீழாக மாறிவிடும் தெரியுமா? பீடை நீங்கி ராசியாக மாற அடிக்கடி இதைப் பெற்றுக் கொள்ளுங்கள்!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.