பூஜை அறையை சுத்தம் செய்யும் முறை

pooja-room
- Advertisement -

வாரத்தில் ஒரு முறையோ அல்லது இரண்டு வாரத்திற்கு ஒரு முறையோ பெரும்பாலும் நம் வீட்டு பூஜை அறையை சுத்தம் செய்து விடுவோம். கண்ணுக்குத் தெரிந்த தூசுகள் எல்லாம் அந்த இடத்தில் இருந்து முழுமையாக நீங்கிவிடும். ஆனால் இறை சக்திக்கு எதிரான,  சில கெட்டது உங்கள் வீட்டையும், உங்கள் வீட்டு பூஜை அறையையும் வந்து அடைந்திருந்தால், அதை விரட்டி அடிப்பது எப்படி.

சாதாரணமாக தண்ணீர், சோப்பு போட்டு துடைத்தால் கண்ணுக்குத் தெரியாத எதிர்மறை ஆற்றல் அந்த இடத்தில் இருந்து நீங்காது. பூஜை அறையை சுத்தம் செய்ய சரியான ஒரு ஆன்மீகம் சார்ந்த முறையை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

- Advertisement -

பூஜை அறையை சுத்தம் செய்யும் முறை

திடீரென்று ஒரு சில சமயங்களில் நம்முடைய வீட்டில் இறை சக்தி இல்லாதது போல உணர்வோம். ஏதோ புரியவில்லை மனசு சஞ்சலமாக இருக்கிறது. நம்முடைய வீட்டில், நம் வீட்டு பூஜை அறையில் குலதெய்வம் இருக்கிறதா, தெய்வம் இருக்கிறதா, என்ற சந்தேகம் வரும். மின்விளக்குகள் அலங்காரம் இருக்கும். ஆனால் வீட்டிலும் பூஜை அறையிலும் ஒரு பிரகாசம் இருக்காது. வீட்டில் பணம் காசு இருக்கும். ஆனால், நிம்மதியும் சந்தோஷமும் தொலைந்து போய் இருக்கும்.

இப்படிப்பட்ட சமயத்தில் ஏதோ ஒரு துற் சக்தியின் ஆற்றல் நம் வீட்டில் தங்கி இருக்கிறது என்பதை நம்மால் நிச்சயம் கண்டுபிடித்து விட முடியும். அந்த சமயத்தில் இந்த குறிப்பு உங்களுக்கு பயன்படும். அப்படி இல்லை என்றால் இரண்டு வாரத்துக்கு ஒரு முறை, வாரத்துக்கு ஒருமுறை பூஜை அறையை சுத்தம் செய்யும் போதும் இந்த குறிப்பை நீங்கள் பின்பற்றலாம். தவறு கிடையாது.

- Advertisement -

எல்லா கெட்டதையும் அழிக்கக்கூடிய சக்தி கல்லுப்புக்கும், மஞ்சளுக்கும் உண்டு. நீங்கள் பூஜை அறையை எந்த வாசனை திரவியம் ஊற்றி சுத்தம் செய்தாலும் சரி. ஒரு சொம்பு குடிக்கின்ற தண்ணீரில், 1 ஸ்பூன் கல் உப்பு போட்டு, கரைத்து விடுங்கள். அதில் 2 சிட்டிகை மஞ்சள் பொடியை போடுங்கள். ஒரு நல்ல காட்டன் துணியில் இந்த தண்ணீரை நனைத்து சுவாமி வைக்கும் அந்த பூஜை அறையை துடைத்து விடுங்கள்.

பூஜை அறையில் சாமி அமரக்கூடிய ஸ்லாப் இருக்கும் அல்லவா. அதை இந்த ஈரத்துணியால் நன்றாக துடைத்து எடுத்து விடுங்கள் போதும். அந்த இடத்தில் நம்ம கண்ணுக்குத் தெரியாத எந்த கெட்ட ஆற்றலும் தாங்காது. நெகட்டிவ் எனர்ஜி வெளியேறிவிடும். பூஜை அறையில் நெகட்டிவ் எனர்ஜி எப்படி குடி ஏறும் என்று சில பேருக்கு சந்தேகம் வரும்.

- Advertisement -

பூஜை அறையிலும் நெகட்டிவ் எனர்ஜி இருக்கும். நெகட்டிவ் எனர்ஜி பூஜை அறையில் குடியேறியவுடன், பூஜை அறையில் இருக்கும் பாசிட்டிவ் எனர்ஜி வெளியே போய்விடும். அந்த சமயத்தில் தான் நம்முடைய வீட்டில் பிரச்சனைகள் வரத் தொடங்கும். இப்படி சுத்தம் செய்யக்கூடிய வேலையை கூடுமானவரை செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் செய்யாதீங்க.

மற்ற நாட்களில் செய்யுங்கள். வரக்கூடிய பொங்களுக்கும் உங்கள் பூஜை அறையை இந்த முறையில் சுத்தம் செய்து பாருங்கள். நிச்சயம் உங்களுக்கு நல்ல நேர்மறையான ஆற்றல் கிடைக்கும். அது மட்டும் அல்லாமல் உங்களுடைய வீட்டில் சின்ன சின்ன விக்ரகங்கள் சாமி சிலைகள் இருக்கும் அல்லவா. அந்த சிலைகளுக்கும் கொஞ்சமாக உப்பு சேர்த்த தண்ணீரில் அபிஷேகம் செய்து, பிறகு நல்ல தண்ணீர் வாசனை திரவியங்கள் ஊற்றி அபிஷேகம் செய்து கொள்ளலாம். அந்த இறையாற்றல் முழுமையாக உங்களுக்கு கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே: 11.1 இன்று, நினைத்தது நடக்க எழுத வேண்டிய ஸ்விட்ச் வேர்ட்

இதே போல தான் வீட்டை எந்த முறையில் நீங்கள் சுத்தம் செய்தாலும் சரி, ஒரு முறை கல் உப்பு, மஞ்சள் தூள் கலந்த தண்ணீரில் மாப் போட்டு விடுங்கள். வீட்டில் எந்த ஒரு நெகட்டிவ் எனர்ஜியும் தங்காமல் இருக்கும். மேல் சொன்ன ஆன்மீகம் சார்ந்த இந்த குறிப்பு உங்களுக்கு பயனுள்ளபடி அமைந்தால் பின்பற்ற பலன் பெறலாம்.

- Advertisement -