வீட்டில் பூஜை செய்யும் பொழுது செய்யக்கூடாத 5 தவறுகள் என்ன?

amman-mangalyam
- Advertisement -

பொதுவாக தினமும் வீட்டில் பூஜை அறையில் விளக்கேற்றி வழிபட்டால் எல்லா நன்மைகளும் நடக்கும் என்பது சாஸ்திர நம்பிக்கை. எல்லா நாட்களிலும் இல்லாத போதிலும் செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமையில் விளக்கேற்றி வழிபாடு செய்வது வழக்கம். இப்படி நாம் வீட்டின் பூஜை அறையில் பூஜைகள் செய்யும் பொழுது செய்யக் கூடாத தவறுகள் என்னென்ன? அதில் முக்கிய 5 தவறுகளை பற்றிய சுவாரசிய தகவல்களை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம், வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

pooja-room

பொதுவாக பூஜைகளை அதிகம் செய்வது பெண்கள் தான். ஆண்கள் அவ்வளவாக இந்த விஷயங்களில் கலந்து கொள்வது இல்லை. இப்படியிருக்க பெண்கள் பூஜை செய்யும் பொழுது கட்டாயம் சிரித்த முகத்துடன் இருக்க வேண்டும். குடும்பத்தில் இருக்கும் சண்டை, சச்சரவுகளை எண்ணிக் கொண்டே பூஜைகளை செய்யக்கூடாது. மேலும் கண்களில் தண்ணீர் வர அழுது கொண்டே பூஜையும் செய்யக் கூடாது. மனதில் எந்த விதமான கெட்ட எண்ணங்களும் இல்லாமல், தேவையற்ற சிந்தனைகளும் இல்லாமல் முழு இறை பக்தியுடன், இனிமையான முகத்துடன் பூஜைகள் செய்யும் பொழுது தான் அந்தப் பூஜை முழுமை பெறுகிறது. இல்லையென்றால் நீங்கள் பூஜை செய்வதில் ஒரு பலனும் கிடைக்காது.

- Advertisement -

பெண்கள் கையில் வளையல் போடாமல் பூஜை செய்யக்கூடாது. வெறும் கையால் ஊதுபத்தி காண்பிப்பது, கற்பூரம் ஏற்றுவது போன்றவற்றை செய்தால் அங்கு இறை ஆகர்சனம் ஏற்படாமல் போய்விடும். ஊதுவத்தி காண்பிப்பதும், கற்பூரம் ஏற்றுவதும் இறைவனை நாம் ஏற்றி வைத்த விளக்கின் ஜோதியில் ஆகர்சனம் செய்வதற்கு தான். இறைவன் ஆகர்சனம் ஆகினால் தானே நீங்கள் வேண்டிய வேண்டுதல்கள் பலிக்கும்?

pooja-room

வேண்டிய வேண்டுதல்கள் நிறைவேற இறைவன் ஜோதியில் ஆகர்சனம் ஆக வேண்டும். அதற்கு பெண்கள் மகா லட்சுமி கடாட்சத்துடன் இருப்பது அவசியமாகும். கையில் கண்ணாடி வளையல்களை அணிந்து கொண்டு, தலை நிறைய பூ வைத்துக் கொண்டு, நெற்றியில் குங்குமம் இட்டுக் கொண்டு சிரித்த முகத்துடன் பூஜை செய்தால் எந்த ஒரு பூஜையும் நிச்சயம் நிறைவுறும். நெற்றியில் பொட்டு இட்டுக் கொள்ளாமல், பெண்கள் பூஜை செய்வது மிகவும் தவறு.

- Advertisement -

பூஜை செய்யும் பெண்கள் சுமங்கலி பெண்களாக இருக்கும் பொழுது அவர்களுடைய தாலி பாக்கியம் நீடித்து நிலைத்து நிற்க, கணவனின் ஆயுள் நீள்வதற்கு பூஜை செய்யும் பொழுது உங்கள் மாங்கல்யத்தில் குங்குமம் இட்டுக் கொள்ளுங்கள். நம்முடைய முன்னோர்கள் நமக்கு வழி வகுத்த பாதை இது தான். நம்முடைய தாய்மார்கள், பாட்டிமார்கள் எல்லாம் காலம் காலமாக மாங்கல்யத்தில் குங்குமம் இட்டுக் கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இன்று அது குறைவது கூட குடும்பத்தில் நடக்கும் பல்வேறு பிரச்சனைகளுக்கு காரணமாக அமைந்து விடுகிறது.

mangalyam1

பூஜை செய்யும் பொழுது கட்டாயம் பஞ்ச பாத்திரத்தில் தண்ணீர் வைக்க வேண்டும். தண்ணீர் இல்லாமல் பூஜைகளை துவங்க கூடாது. பஞ்ச பூதங்களை உள்ளடக்கியது தான் தெய்வ சக்தி எனவே பூஜை அறையில் இந்த பஞ்ச பூதங்களும் இடம் பெற்றிருக்க வேண்டும். நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகிய பஞ்ச பூதங்களும் பூஜை அறையில் இருக்கும் பொழுது தான் நீங்கள் பூஜைகளை செய்ய வேண்டும். பூஜை செய்யும் பொழுது எல்லா ஜன்னல், கதவுகளையும் திறந்து வைத்திருக்க வேண்டும். இவற்றை மூடி வைத்து பூஜையை துவங்க கூடாது. இப்படி ஒவ்வொரு விஷயத்திலும் நாம் கவனமுடன், பக்தியுடன் பூஜை செய்து வந்தால் நிச்சயம் நம்முடைய வேண்டுதல்கள் யாவும் பலிக்கும்.

- Advertisement -