உங்கள் வீட்டு பூஜை பாத்திரங்கள் பளபளவென்று மின்னுவதற்கு இந்த எளிமையான டிப்ஸை தெரிந்துகொள்ளுங்கள்

poojai
- Advertisement -

ஒவ்வொரு வீட்டிலும் மிகவும் முக்கியமான இடங்கள் என்றால் அது சமையலறையும், பூஜை அறையும் மட்டும் தான். வீட்டிற்கு வரும் விருந்தாளிகள் முதலில் சென்று பார்ப்பது நமது வீட்டு பூஜை அறையை தான். பூஜை அறையை எவ்வாறு வைத்திருக்கிறோமா அதுபோலத்தான் நமது வீட்டையும் நாம் பராமரித்து வருகிறோம் என்பது அவர்களின் கணிப்பாகும். அவ்வாறு நமது குணத்தையே கணிக்கும் இந்த பூஜை அறையை நாம் எவ்வாறு வைத்திருக்க வேண்டும். நமது வீட்டின் பூஜை அறையை எந்த அளவிற்கு சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்திருக்கிறோமோ அவ்வாறு நமது வீட்டில் மகாலட்சுமி நிரந்தரமாக வாசம் செய்வார்கள். இதனால் பணம் செல்வம் அனைத்தும் எப்போதும் நிறைந்து காணப்படும். பணத்தட்டுப்பாடு என்பதே இருக்காது. இவ்வாறு பூஜை அறையில் மிகவும் முக்கியமானது பூஜை பொருட்கள் தான். இவற்றை எப்படி பளபளவென்று சுத்தம் செய்ய வேண்டும் என்பதை பற்றிஜதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

பூஜை அறையை திறந்த உடனேயே அதில் பெரும்பகுதியாக இருப்பது பூஜைப் பொருட்களான பித்தளை பாத்திரங்கள் தான். ஒவ்வொரு வீட்டிலும் அவர்களின் தேவைக்கு ஏற்ப இந்த பூஜை பாத்திரங்கள் குறைவாகவும், அதிகமாகவும் இருக்கிறது. வாரத்திற்கு ஒரு முறையாவது இவற்றை வெளியே எடுத்து சுத்தம் செய்வது வழக்கமான வேலை ஆகிறது.

- Advertisement -

எனவே அவற்றை சுத்தம் செய்வதற்கு எப்பொழுதும் ஒரு மணி நேரமாவது செலவாகிறது. இவற்றில் அதிகப்படியான எண்ணெய்ப் பிசுக்கும், மஞ்சள் குங்குமம் கரைகளும் ஒட்டிக்கொண்டிருக்கும். இவற்றை சுத்தம் செய்வது மிகவும் கடினமான விஷயமாக இருக்கிறது. அதேபோல் இதனை சுத்தம் செய்வதற்கு நாம் ஒரு சில முறைகளை கையாண்டு வருகிறோம்.

ஆனால் இவற்றின் மூலம் இரண்டு நாட்களிலேயே உங்கள் பித்தளை பாத்திரங்கள் கருப்பாக மாறிவிடும். இவ்வாறு பித்தளை பாத்திரங்கள் கருப்பாக மாறாமல் பத்து நாட்கள் ஆனாலும் அப்படியே பளபளவென்று இருக்க இந்த எளிய குறிப்பைத் தெரிந்து கொண்டால் போதும். இதற்கு நமது வீட்டிலிருக்கும் பொருட்களே போதுமானதாக இருக்கிறது.

- Advertisement -

அதற்காக முதலில் மூன்று ஸ்பூன் கோதுமை மாவை எடுத்துக்கொள்ள வேண்டும். அதனுடன் 2 ஸ்பூன் ஸ்பூன் உப்பு மற்றும் சிறிதளவு எலுமிச்சை சாறு இவற்றை சேர்த்து ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும். பின்னர் பூஜை பாத்திரங்களில் இருக்கும் எண்ணெய் பிசுக்கை சுத்தமாகத் துடைத்து கொள்ள வேண்டும்.

அதன் பின் கலந்து வைத்துள்ள பேஸ்ட்டை பூஜை பாத்திரங்கள் மீது தடவி விட வேண்டும். ஐந்து நிமிடத்திற்குள் இவற்றை அப்படியே விட்டுவிட்டு, பல் துலக்கப் பயன்படும் பிரஷ் ஒன்றை புதியதாக எடுத்துக்கொள்ள வேண்டும். அதனை வைத்து இவற்றை நன்றாக தேய்த்துவிட வேண்டும். பின்னர் தண்ணீர் ஊற்றி நன்றாகக் கழுவிக் கொள்ள வேண்டும். பிறகு இவற்றை ஒரு காட்டன் துணியை வைத்து சுத்தமாக துடைத்து எடுக்க வேண்டும். பின்பு உங்கள் பூஜை பாத்திரங்களை பார்க்கும் பழுதை கண்ணை கூசுகின்ற அளவிற்கு பளபளப்பாக மாறிவிடும்.

- Advertisement -