1 மாதம் ஆனாலும் தேய்த்து வைத்த பூஜை பாத்திரம் கருத்துப் போகவே போகாது. 1 நிமிடத்தில் கருத்து போன பித்தளை பாத்திரத்தை தங்கம் போல மாற்ற இதுவரை நீங்கள் கேள்விப்படாத புத்தம் புதிய ஐடியா.

poojavessels
- Advertisement -

நிஜமாவே வேற எங்கேயும் இந்த குறிப்பை நீங்க பார்த்திருக்க மாட்டீங்க. கேள்வி மட்டும் இருக்க மாட்டீங்க. ஒரே ஒரு முறை பின் சொல்லக்கூடிய குறிப்பை முயற்சி செய்து பாருங்கள். உங்களுடைய பூஜை அறையில் இருக்கும் பூஜை பாத்திரத்தை, நீங்கள் மாதத்திற்கு ஒரு முறை தேய்த்து வைத்தாலும் கூட அது கருத்துப் போகாமல் இருக்கும். புதுசு போலவே. பளபளப்பாக அப்படியே பார்ப்பதற்கு பொலிவாக இருக்கும். வேலைக்கு போகும் பெண்களுக்கெல்லாம் வாரத்தில் ஒரு நாள் பூஜை பாத்திரத்தை தேய்க்க முடியாது அல்லவா. அப்படிப்பட்டவர்கள் எல்லாம் கூட இந்த டிப்ஸை ட்ரை பண்ணி பார்க்கலாம்.

நேரடியாக நாம் குறிப்பை பார்த்து விடுவோம். இந்த குறிப்புக்கு நாம் பயன்படுத்தக்கூடிய அந்த புத்தம் புதிய பொருள் என்ன தெரியுமா. உருளைக்கிழங்கு தோல். உருளைக்கிழங்கு வறுவல் செய்யும்போதெல்லாம், சில பேர் தோலை சீவி எடுத்து விடுவார்கள் அல்லவா. அப்படி சீவி எடுத்த அந்த தோலை, ஒரு டப்பாவில் போட்டு மூடி பிரிட்ஜில் ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளலாம். உருளைக்கிழங்கு மசாலா செய்யும்போது வேக வைத்து தோலை உரிப்போம் அல்லவா. அந்த தோலையும் டப்பாவில் போட்டு பிரிட்ஜில் ஸ்டோர் செய்து வைத்துக் கொண்டால், அதை தேவைப்படும்போது எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

- Advertisement -

ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் வேக வைத்திருக்கும் உருளைக்கிழங்கு தோல் 2 டேபிள்ஸ்பூன் அளவு, பாதி அளவு எலுமிச்சம்பழம் தோளுடன் சிறிய துண்டுகளாக வெட்டி போட்டுக் கொள்ளுங்கள். கட்டியான புளி கரைசல் 2 டேபிள் ஸ்பூன், மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன், இந்த பொருட்களை எல்லாம் போட்டு பேஸ்ட் போல அரைத்துக் கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் கொஞ்சம் தண்ணீர் ஊற்றிக் கொள்ளலாம். ஆனால் எலுமிச்சை பழ சாறும் புளிக்கரைசலமே நமக்கு போதுமானதாக இருக்கும்.

அரைத்து வைத்திருக்கும் இந்த பேஸ்டை தேங்காய் நாரில் தொட்டு உங்களுடைய பூஜை பாத்திரத்தை நன்றாக தேய்க்க வேண்டும். தேங்காய் நார் விளக்குகளில் உள்ள டிசைனில் இடுக்குகளில் இருக்கும் கருப்பு நிறத்தைக் கூட நீக்கிவிடும். பூஜை அறையில் இருக்கும் பித்தளை பாத்திரங்கள், செம்பு பாத்திரங்கள் இந்த இரண்டு வகையான பாத்திரங்களை சுத்தம் செய்வதற்குமே இந்த ஒரு பேஸ்ட் போதும்.

- Advertisement -

முதலில் உங்கள் வீட்டு பித்தளை பாத்திரத்தில் இருக்கும் மஞ்சள் குங்குமம் எண்ணெய் எல்லாவற்றையும் ஒரு துணியை வைத்து துடைத்து எடுத்து விடுங்கள். அதன் பின்பு இந்த பேஸ்டை போட்டு தேய்க்கலாம். இந்த பேஸ்டிலேயே உங்களுக்கு எண்ணெய் பிசுபிசுப்பு நீங்கிவிடும். உங்களுக்கு அது மனதிருப்தி அடையவில்லை எனும் பட்சத்தில் கொஞ்சமாக பாத்திரம் தேய்க்கும் விம் லிக்யூடோ அல்லது வேறு ஏதாவது லிக்விட் சேர்த்து கூட இதோடு நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். அது உங்களுடைய விருப்பம்.

பூஜை பாத்திரங்களை இந்த பேஸ்டை வைத்து தேய்த்து கழுவி விட்டு, உடனடியாக காட்டன் துணியை வைத்து பூஜை பாத்திரத்தில் இருக்கும் ஈரத்தை துடைத்து விடுங்கள். அதன் பின்பு கொஞ்சமாக விபூதி எடுத்து சுத்தம் செய்த காய்ந்த பித்தளை பாத்திரத்தின் மேல் நன்றாக தேய்க்க வேண்டும். நீங்கள் தேய்த்த பித்தளை பாத்திரம் இன்னும் பள பளப்பாக மாறும். மீண்டும் ஒரு காய்ந்த துண்டை வைத்து அந்த விபூதியை எல்லாம் நன்றாக துடைத்து எடுத்து விடுங்கள். பாருங்க உங்களுடைய பூஜை பாத்திரம் வேற லெவல் கலருக்கு வந்திருக்கும். மேலே சொன்ன குறிப்புகள் உங்களுக்கு பிடிச்சிருந்தா ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -