பூஜை அறை முதல் பூஜை பொருட்கள் வரை பளிச்சென்று மாற்றி, நல்ல தெய்வீக மணதுடன் இருக்க இந்த சின்ன சின்ன குறிப்புகளை தெரிந்து கொள்ளுங்கள். இனி உங்கள் வீட்டிற்கு வருபவர்கள் எப்படி உங்கள் வீட்டை பராமரிக்கிறீங்க என்று ஆச்சரியமாக கேட்பார்கள்.

- Advertisement -

நம் எல்லோருக்குமே வீட்டில் விளக்கு ஏற்றி பூஜை செய்து வீட்டை எப்பொழுதும் மங்களகரமாக வைத்திருக்க பிடிக்கும் தான். ஆனாலும் இந்த பூஜை அறை வேலைகள் என்பது மற்ற வேலையை விட கடினம் தான். விளக்குகளை தேய்ப்பது, பூஜை படங்களை துடைப்பது, இது போன்ற வேலைகளை பார்த்து பார்த்து செய்ய வேண்டும். அப்பொழுது தான் ஓரளவிற்காவது நாம் கோவிலுக்குள் செல்லும் போது இருக்கும் மன திருப்தியை வீட்டில் கிடைக்கும். இந்த கபதிவில் உள்ள குறிப்புகள் உங்களுக்கு தெரிந்து விட்டால் உங்கள் வீடு எப்பொழுதுமே கோவில் போல தான் இருக்கும் ஏதோ உங்கள் பூஜை அறையில் எப்பொழுதும் தெய்வீகத் தன்மையுடன் இருக்க சில குறிப்புகள்.

வீட்டில் சாமி படங்களுக்கும், விளக்குகளுக்கும், மஞ்சள் குங்குமம் வைப்பது வழக்கம். அப்படி வைக்கும் போது அந்த மஞ்சள் குங்குமத்தை கலக்க முடிந்த அளவிற்கு பன்னீர் ஊற்றி கலந்து கொள்ளுங்கள். நல்ல மணமாக இருக்கும். சுவாமி படங்களை துடைக்கும் போது நீங்கள் துடைக்கும் துணியில் கொஞ்சம் பன்னீர் தொட்டு துடைத்தால், அப்பொழுதும் நல்ல மணத்துடன் இருக்கும்.

- Advertisement -

அதே போல் வீட்டில் பெரும்பாலும் உருளி வைத்து மலர்களை போடும் பழக்கம் இப்பொழுது பெரும்பாலும் அனைவரும் கடைப்பிடிக்கிறார்கள். அந்த உரிலியில் கொஞ்சம் ஜவ்வாது போட்ட பிறகு தண்ணீர் ஊற்றி பூவை வைத்தால், அந்த ஜவ்வாதின் மணம் நாளெல்லாம் வீட்டில் பரவி ஒரு நல்ல பாசிட்டிவ் எனர்ஜி கொடுக்கும்.

சந்தனத்தை வாங்கி வைக்கும் போதும் அதை நல்ல பவுடர் செய்து அந்த பவுடருடன் ஜவ்வாது கலந்து வைத்தால், நீங்கள் எப்பொழுது சந்தனம் வைத்தாலும் நல்ல மணதுடன் இருப்பதுடன், உங்களுக்கே புத்துணர்ச்சியுடன் இருப்பதாக உணர்வு தோன்றும்.

- Advertisement -

ஊதுபத்தி ஏற்றும் பொழுது கொஞ்சம் பன்னீர் கைகளில் ஊற்றிக் கொண்டு அதில் இந்த ஊதுபத்தியை நன்றாக தடவிக் கொள்ளுங்கள். அதிகமாக ஊற்ற கூடாது ஊதுபத்தி ஈரம் ஆகிவிடும். இந்த பன்னீரை ஊதுபத்தியின் மேல் லேசாக தேய்க்கும் போது அதில் ஏற்கனவே சேர்த்திருக்கும் அந்த வாசனை திரவியங்களை மனம் என்னும் அதிகமாக பன்னீருடன் சேர்ந்து கிடைக்கும்.

அதே போல் விளக்குத் திரிகளை ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் போட்டு அதில் எண்ணெய் ஊற்றி எப்போதும் அதில் பச்சை கற்பூரம் போட்டு வைத்து, அந்த திரியில் விளக்கேற்றினால், பச்சைக் கற்பூரத்தின் மணம் நாள் முழுவதும் பரவிக் கொண்டே இருக்கும்.

இதே போல் விளக்கு ஏற்ற பயன்படுத்தும் எண்ணைய்யிலும் பச்சைக் கற்பூரம் போட்டு வைத்து விடுங்கள். எப்போது விளக்கேற்றினாலும் எந்த எண்ணெயை ஊற்றி விளக்கு ஏற்றினால் வீட்டில் அந்த பச்சைக் கற்பூரத்தின் மணம் அவ்வளவு நன்றாக இருக்கும்.

இதையெல்லாம் செய்தாலும் பூஜை பாத்திரங்களை பளிச்சென்று வைப்பது தான், இவற்றில் முக்கியமான வேலை. அதற்கு மிக மிக எளிமையான வழி பித்தளை செம்பு பாத்திரங்களை தேய்க்க சபினா உடன் கொஞ்சம் லெமன் சேர்த்து தேங்காய் நார் வைத்து தேய்க்கும் போது பித்தளை, செம்பு பாத்திரங்கள் நல்ல பளிச்சென்று மாறி விடும். வெள்ளி பொருட்களை தேய்க்க ஹேண்ட் வாஷை பயன்படுத்தி, அதே போல் தேங்காய் நாரை கொண்டு தேய்த்தால் வெள்ளிப் பொருள்களில் உள்ள எண்ணெய் பிசுக்கு நீங்கி விளக்கு பளிச்சென்று மாறி விடும்.

- Advertisement -