உங்கள் வீட்டு பூஜை அறையில், இந்த 2 சுவாமி படங்களை இப்படி வைத்து வழிபாடு செய்தால், எந்த காலத்திலும் உங்கள் கஷ்டத்திற்கு விடிவு காலமே பிறக்காது.

perumal

நம்முடைய வீட்டில் பணக்கஷ்டம் தீர வேண்டும் என்பதற்காக, நாம் செய்யாத பரிகாரங்கள் இல்லை. பண கஷ்டம் வந்துவிட்டால், அதனைத் தொடர்ந்து வீட்டில் நிச்சயமாக மன கஷ்டமும் வரத் தான் செய்யும். வாழ்க்கையை நடத்திச் செல்வதற்கு தேவையான அளவு வருமானம் இல்லை என்றால், தேவையற்ற பிரச்சனைகள் வீட்டில் இருப்பவர்களுக்குள்ளே ஏற்படும். நிச்சயம் நிம்மதி கெடத்தான் செய்யும். உங்கள் வீட்டில் இருக்கும் பணம் பிரச்சனையாக இருந்தாலும் சரி, அல்லது மற்ற வேறு எந்த பிரச்சினையாக இருந்தாலும் சரி, அந்த பிரச்சனைகளுக்கான தீர்வை பெற பூஜை அறையில் குறிப்பிட்ட இந்த இரண்டு தெய்வங்களின் திரு உருவ படங்களை எப்படி வைக்க வேண்டும் என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

perumal-1

நம்மில் நிறைய பேர் வீட்டில் பணப்புழக்கம் அதிகமாக இருக்க வேண்டும். வீட்டில் இருக்கக் கூடிய பணக்கஷ்டம் தீர வேண்டும் என்பதற்காக, பெருமாள் வழிபாடு செய்வதை வழக்கமாக வைத்திருப்போம். இருப்பினும் சில பேருடைய வீட்டில் பெருமாளின் திருவுருவப் படத்தை வைத்து வழிபாடு செய்தாலும், அந்த வீட்டில் பண கஷ்டம் இருந்து கொண்டே வரும். இப்படிப்பட்டவர்கள் உங்கள் வீட்டில் இருக்கும் பெருமாளின் திருவுருவப் படத்திற்கு முன்பாக ஒரு வெள்ளைப் பட்டு வஸ்திரத்தை வாங்கி வைத்து பாருங்கள்.

கொஞ்சம் விலை அதிகமாக இருந்தாலும் அசல் வெள்ளை பட்டு துணியை வாங்கி, பெருமாளின் பாதங்களில் வைத்து வழிபாடு செய்து வந்தால், தீராத பண கஷ்டத்திற்கும் கூடிய விரைவில் நல்ல தீர்வு கிடைக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. முயற்சி செய்து பாருங்கள். (இதற்காக பெருமாளை தனியாக, வெள்ளைப்பட்டு வைக்காமல், வீட்டில் வழிபாடு செய்தால் பண கஷ்டம் வரும் என்பது அர்த்தம் கிடையாது. உங்கள் கஷ்டத்திற்கு விடிவு காலம் பிறக்க இந்த பரிகார முறையை நீங்கள் முயற்சி செய்து பார்க்கலாம்.)

white-cloth

இரண்டாவதாக புவனேஸ்வரி அம்மனின் திரு உருவப் படம். வீட்டில் இருப்பவர்களுக்கு வேலை வாய்ப்புகள் சரியாக அமையவில்லை. தொழிலில் நல்ல வருமானம் இல்லை. எதைத் தொட்டாலும் தோல்வி, எனும் பட்சத்தில் புவனேஸ்வரி அம்மனின் திருவுருவத்தை, பச்சை நிற புடவை அணிந்தவாறு இருக்கும்படி நம்முடைய வீட்டில் வாங்கி வைப்பது மிகவும் நல்லது.

- Advertisement -

புவனேஸ்வரி அம்மனின் திருவுருவ படத்தில் குறிப்பாக மேரு சக்கரம் இருப்பது மேலும் சிறப்பினை தேடித்தரும் என்று சொல்லப்பட்டுள்ளது. சக்கரத்துடன் சேர்ந்த புவனேஸ்வரி அம்மனின் திருவுருவ படம் கிடைக்கவில்லை என்றாலும், புவனேஸ்வரி அம்மனின் படத்தை தனியாக வாங்கிக் கொள்ளுங்கள். மேரு சக்கரத்தின் படத்தை தனியாக வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். இரண்டும் ஒன்றாக உங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்து வரும் பட்சத்தில் வருமானத்தில் உள்ள தடைகள் அனைத்தும் நீங்கும். முயற்சி செய்து பாருங்கள். (எந்த காலத்திலும் தீர்வு கிடைக்காத பிரச்சனையை தீர்த்துவைக்க, இந்த பரிகாரம் உங்களுக்கு உதவியாக இருக்கும்.)

buvaneshwari-amman

சில பேர் வீடுகளில் மேரு சக்கரத்தை வாங்கி வைத்து வழிபடுவதை வழக்கமாக வைத்திருப்பார்கள். ஆனால் அதற்கான பூஜை புனஸ்காரங்களை சரியான முறையில் செய்து வர வேண்டும். சாதாரணமாக எல்லோராலும் தினம்தோறும் சக்கரத்திற்கு செய்ய வேண்டிய வழிபாட்டு முறைகளை செய்ய முடியுமா என்பது சந்தேகத்திற்குரிய விஷயம். மேரு சக்கரத்தை தான் வாங்கி வைக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. மேரு சக்கரத்தின் புகைப்படத்தை பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்தாலும் அது நன்மையே தரும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
இந்த உலகத்தையே சுலபமாக வென்று, உள்ளங்கைகளில் அடக்கி விட முடியும். இந்த 1 எலுமிச்சை பழம் உங்கள் கையில் இருந்தால்!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.