பூஜை செஞ்சு முடிச்சிட்டீங்களா? அப்படின்னா இந்த மந்திரத்தையும் சொல்லிடுங்க! எந்த தெய்வ குற்றமும் வராது.

- Advertisement -

அன்றாட பூஜையாக இருந்தாலும், செவ்வாய் வெள்ளிக்கிழமைகளில் விசேஷமாக செய்யப்படும் பூஜைகள் ஆக இருந்தாலும், விரத நாட்களிலும் நாம் பூஜை செய்யும் பொழுது ஒரு குறையும் ஏற்படாமல் செய்ய வேண்டும் என்கிற பயமும், பதட்டமும் ஒரு புறம் இருக்கும். நாம் அனுதினமும் எவ்வளவோ குற்றங்களை செய்து கொண்டிருக்கிறோம். தெரிந்தோ தெரியாமலோ நாம் செய்யும் பூஜையை பாதித்து விடக்கூடாது. பூஜை செய்த முழுமையான பலன் கிடைக்க பூஜை செய்து முடித்தபின் இந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். பூஜை குற்றத்தை நீக்கும் இந்த மந்திரம் மிகுந்த சக்தி கொண்டவை என்று கூறப்படுகிறது. அதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

poojai

இந்த சிறப்பு மந்திரம் அம்பாளிடம் மன்னிப்பு கேட்பதாக அமைந்திருக்கிறது. ஒரு சில சமயங்களில் நாம் பூஜைகள் மேற்கொள்ளும் பொழுது நம்முடைய மனநிலை ஒரு நிலையாக இருப்பதில்லை. பூஜை செய்து கொண்டே மனம் வேறு ஏதாவது ஒன்றை நினைத்துக் கொண்டே இருக்கும். இதுபோல் பூஜைகள் செய்யும் பொழுது, இறைவனை கோவில்களை தரிசனம் செய்யும் பொழுது மனதில் இறைவனை தவிர ஒரு சிந்தனை இருக்கக் கூடாது.

- Advertisement -

இறைவனை தரிசிக்க ஆரம்பிக்கும் முன்பே மனதில் இறைவனிடத்தில் பறி கொடுத்து விட வேண்டும். மனதில் எவ்வளவு குழப்பங்கள் இருந்தாலும் பத்து நிமிடம் ஒதுக்கி வைத்து விட்டு முழுமையாக இறைவனை மனதில் கொண்டு வர வேண்டும். அதன் பிறகு நீங்கள் வேண்டும் வேண்டுதல்கள் மட்டுமே இறைவனை நேரடியாக சென்றடையும். அப்படியில்லாமல் இறைவனை கண்கள் மட்டும் பார்த்துக் கொண்டு, மனம் வேறு எதைப் பற்றிய சிந்தனையிலோ இருந்தால் எப்படி வேண்டுதல்கள் பலிக்கும்?

praying-god1

பூஜை செய்யும் பொழுதும் இதே மாதிரிதான். மனதில் முதலில் இறைவனின் நிறுத்திக்கொண்டு அதன்பின் பூஜைகள் செய்ய வேண்டும். தீபாராதனை காண்பிக்கும் பொழுது ஜோதியில் இறைவனை தரிசனம் செய்ய வேண்டும். இப்படி செய்யமுடியாமல் மனம் தடுமாறினால் அது தெய்வ குற்றம் ஆகிறது. உங்களில் சிலர் மந்திரங்களைத் தவறாக உச்சரிப்பார்கள். இப்படி மந்திர குற்றம், பக்தி குறைவு, நாம் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்கள் நீங்கி பூஜை முழுமை பெற பூஜை முடிந்த பின் கீழ்வரும் இந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.

- Advertisement -

அம்பிகை ஸ்தோத்திரம்:
அபராத ஸஹஸ்ராணி க்ரியந்தே அஹர்நிஸம் மயா
தாஸோயமிதி மாம் மத்வா க்ஷமஸ்வ பரமேஸ்வரி
மந்த்ரஹீனம் க்ரியாஹீனம் பக்திஹீனம் ஸுரேஸ்வரி
யத்பூஜிதம் மயாதேவி பரிபூர்ணம் ததஸ்து மே

Lalithambikai

இந்த மந்திரத்தின் தமிழ் பொருள்:
அம்பிகையே! தேவியே! நான் காலை முதல் மாலை வரை இரவு பகலாக எவ்வளவோ பாவங்களை செய்திருக்கலாம். அவற்றை உங்களுக்கு பணிவிடை செய்யும் இந்த பக்தனுக்காக பொறுத்தருள்க! தேவர்களுக்கெல்லாம் தலைவியாய் இருக்கின்றவளே! உமையவளே! நான் செய்யும் இந்த பூஜையில் மந்திர குற்றங்களோ, என்னுடைய பக்தியில் குறைவோ, கர்மங்களின் குறைவோ இருந்தாலும் அவற்றையெல்லாம் பொறுத்து இந்த பூஜையை முழுமையாக அருள் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்பது தான் இந்த மந்திரத்தின் பொருளாகும். இதனை எல்லா பூஜையின் நிறைவிலும் கூறி பூஜையை முடிப்பது வேண்டுதலின் முழு பலன் கிடைக்கச் செய்யும். மந்திரம் புரியவில்லை என்றால் தமிழில் கூறலாம் தவறில்லை.

இதையும் படிக்கலாமே
கிரக பீடைகள் நீங்கி தீர்க்காயுளுடன் ஆரோக்கியமாக வாழ, இந்த ஆஞ்சநேயரை மனதில் நினைத்து இந்த மந்திரம் உச்சரித்தால் போதும்!

இது போன்ற மந்திரங்கள் பலவற்றை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

- Advertisement -