இந்த ஒரு பொருள் மட்டும் இருந்தால் போதும், உங்கள் பூஜை பாத்திரம் தங்கம் போல் மின்ன ஆரம்பித்து விடும். நம் வீட்டு பாத்திரமா என்று நீங்களே பார்த்து ஆச்சரியப்படுவீர்கள்.

poojavessels
- Advertisement -

நாள் கிழமை என்று வந்து விட்டால் வீட்டில் விளக்கு ஏற்றுவது சாமி கும்பிடுவது என்று அனைத்து மங்களகரமான விஷயங்களையும் சந்தோஷமாக செய்தாலும் கூட, இந்த பூஜை பாத்திரங்களை துலக்குவதில் மட்டும் சற்று சலிப்பு ஏற்படத்தான் செய்கிறது. காரணம் நாம் என்னதான் கஷ்டப்பட்டு தேய்த்தாலும் பூஜை பாத்திரங்கள் பளிச்சென்று ஆவதில்லை, அப்படியே பளிச்சென்று தேய்த்து விட்டாலும் தேய்க்கும் முதல் நாள் மட்டும் தான் அப்படி இருக்கிறது, அடுத்த நாளே அது கருப்பாக மாறி விடுகிறது. ஆனால் இந்த முறையை உபயோகித்து பூஜை பாத்திரங்களை தேய்த்தால் போதும் பளபளப்பாக ஆவதுடன் ஒரு மாதமானாலும் புது விளக்கு போல் பளிச்சென்று இருக்கும்.

இதற்க்கு தேவையான பொருள் நம் வீட்டில் இருக்கும் கோலமாவு தான். கோலமாவு கொண்டு தேய்க்கும் வழக்கம் இப்போது வந்ததல்ல, நம் முன்னோர்கள் எல்லாம் கூட இந்த முறையை தான் பயன்படுத்தினார்கள். ஏனென்றால் முன்பெல்லாம் விறகு அடுப்பில் தான் சமைப்பார்கள் அப்போது பாத்திரங்கள் அதிக அளவு கரி படிந்து இருக்கும் அதனை சுலபமாக தேய்க்க இந்த முறையை தான் பயன்படுத்தினார்கள்.

- Advertisement -

முதலில் பூஜை பாத்திரங்களை தேய்ப்பதற்கு முன் ஒரு காகிதம் அல்லது காட்டன் துணி கொண்டு அதில் உள்ள எண்ணெய் பிசுக்கை எல்லாம் துடைத்து விடுங்கள். பின் ஒரு எலுமிச்சை பழம் பாதி அளவு இருந்தால் கூட போதும், எடுத்து துடைத்து வைத்துள்ள பூஜை பொருட்களின் மீது லேசாக தேய்த்து வைத்து விடுங்கள் ஒரு பத்து நிமிடம் அப்படியே இருக்கட்டும்.

இந்த கோலமாவுடன் சிறிது விபூதியை கலந்து விடுங்கள். இதற்காக தனியாக விபூதி வாங்க வேண்டாம். நம் தீபகலசத்தில் எப்போதும் விபூதி வைத்திருப்போம், விளக்கு தேய்க்கும் போது அந்த விபதியை கீழே தான் கொட்டி விடுவோம் அதையே இந்த கோல மாவில் சேர்த்துக் கொண்டால் போதும்.

இத்துடன் நாம் பாத்திரம் தேய்க்கும் லிக்விட் அல்லது ஹேண்ட் வாஷ் இரண்டில் ஏதாவது ஒன்று இருந்தால் மட்டும் போதும் அதையும் இந்த கோலமாவுடன் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். பின்பு சாதாரண தேங்காய் நார் கொண்டு அழுத்தி கூட தேய்க்க வேண்டாம் லேசாக தேய்த்தாலே போதும் தேய்க்கும் போதே உங்களுக்கு மாற்றம் தெரியும். பளிச்சென்று நிறம் மாறிவிடும் தேய்த்த பின் சாதாரண தண்ணீரில் ஒரு முறை கழுவிய பிறகு நல்ல தண்ணீரில் ஒருமுறை அலசினால் போதும். பூஜை பாத்திரங்கள் பளபளப்பாக தங்கம் போல் மென்ன ஆரம்பித்துவிடும்.

- Advertisement -