பூஜை பாத்திரங்களை தேய்க்கும் போது இந்த 1 பொருளை சேர்த்துக் கொண்டால், 2 மாதமானாலும் தேய்த்து வைத்த பூஜை பாத்திரம் கருத்தும் போகாது. எண்ணெய் ஊற்றி வைத்திருக்கக் கூடிய இடத்தில் பச்சை நிறத்தில் பாசியும் பிடிக்காது.

poojai-jamanam
- Advertisement -

சில பேர் வீடுகளில் தேய்த்து வைத்த பூஜை பாத்திரம் ஒரு வாரத்திலேயே கருத்துப் போய்விடும். ஏதோ பூஜை பாத்திரங்களை மாத கணக்கில் தேய்க்காது போல ஒரு தோற்றத்தை கொடுக்கும். இப்படி அடிக்கடி கருத்துப் போகக் கூடிய பூஜை பாத்திரத்தை நிரந்தரமாக பளபளப்பாக வைத்துக் கொள்ள எப்படி சுத்தம் செய்வது, என்பதை பற்றிய ஒரு சின்ன குறிப்பை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

அந்த காலத்திலேயே நம்முடைய பாட்டிமார்கள் பூஜை பாத்திரத்தை சாம்பல் போட்டு, தேங்காய் நார் வைத்து தேய்த்து தான் சுத்தம் செய்வார்கள். இன்றைக்கு நாம் சாம்பலை தேடி போக முடியாது. அடுப்பு யார் வீட்டிலும் பற்ற வைப்பது இல்லை. ஆனால் வீட்டில் சாம்பிராணி தூபம் போட்டாலும் சரி அல்லது கம்ப்யூட்டர் சாம்பிராணி ஏற்றி வைத்தாலும் சரி, அல்லது ஸ்டிக் சாம்பிராணி ஏற்றி வைத்தாலும் சரி, அதிலிருந்து நமக்கு சாம்பல் கிடைக்கும். அதை ஒரு சின்ன டப்பாவில் போட்டு சேகரித்து வைத்து அதை பூஜை பாத்திரங்கள் தேய்க்க பயன்படுத்திக் கொள்ளலாம்.

- Advertisement -

ஒரு சின்ன கிண்ணத்தில் நீங்கள் சேகரித்து வைத்திருக்கும் சாம்பல் தேவையான அளவு, 1 எலுமிச்சை பழத்தின் சாறு, கற்பூர 1 நசுக்கி இதோடு போட்டுக்கோங்க. வடித்த சாதத்தின் கஞ்சி ஊற்றி இதை பேஸ்ட் போல கலந்து இதில் பூஜை பாத்திரங்களை தேய்க்க வேண்டும். இந்த பேஸ்ட்டில் தேங்காய் நாரை தொட்டு பூஜை பாத்திரத்தின் மேல் தடவி விடுங்கள். இரண்டு நிமிடம் மட்டும் அந்த பூஜை பாத்திரம் இந்த பேஸ்டில் ஊறிய பின்பு, தேங்காய் நாரை வைத்து லேசாக தேய்த்துக் கொடுத்தாலே பூஜை பாத்திரங்கள் பளபளப்பாக மாறிவிடும். அரிசி வடித்த கஞ்சியையும் கற்பூரத்தையும் இதோடு நாம் சேர்க்கும் போது பூஜை பாத்திரம் நீண்ட நாட்களுக்கு பள பளப்பாக இருக்கும்.

பூஜை பாத்திரத்தை நன்றாக தேய்த்து சுத்தம் செய்து கழுவி விட்டீர்கள். உங்க வீட்டில் பாத்திரம் தேய்க்க உப்பு தண்ணீர் என்றால், ஒரு முறை நல்ல தண்ணீரிலும் அதை கழுவி விட வேண்டும். அந்த ஈரத்தை காட்டன் துணியை வைத்து நன்றாக துடைத்து எடுத்து விட்டு, ஒரு சொட்டு கூட கையில் ஈரம் இருக்கக் கூடாது. பாத்திரங்களிலும் ஈரம் இருக்கக் கூடாது. அப்போது பூஜை பாத்திரத்தில் மேலே விபூதியை தடவி லேசாக கையில் துடைத்து விட்டாலே பூஜை பாத்திரங்கள் பளபளப்பாக மாறும்.

- Advertisement -

பூஜை பாத்திரத்தில் மீதம் ஒட்டி பிடித்திருக்கும் விபூதியை நல்ல துணியில் துடைத்து எடுத்தால் பூஜை பாத்திரங்கள் அவ்வளவு அருமையாக ஜொலிக்கும். இரண்டு மாதமானாலும் இந்த ஜொலி ஜொலிப்பு அப்படியே இருக்கும். அதற்காக இரண்டு மாதத்திற்கு ஒரு முறை பூஜை பாத்திரங்களை தேய்க்க கூடாது. நேரம் இருப்பவர்கள் வாரத்தில் ஒரு நாள் கட்டாயமாக பூஜை பாத்திரங்களை தேய்க்க வேண்டும். நேரம் இல்லாதவர்கள் இரண்டு வாரத்திற்கு ஒரு முறையோ, மாதத்திற்கு ஒரு முறையாவது கட்டாயமாக பூஜை பாத்திரங்களை தேய்ப்பது குடும்பத்திற்கு நல்லது. குறிப்பு படிச்சிருந்தா ட்ரை பண்ணி பாருங்க.

பின்குறிப்பு: நீங்கள் மேலே சொன்ன பொருட்களை பயன்படுத்தாமல் புளி பயன்படுத்தியோ, அல்லது சபீனா பவுடர், பீதாம்பரம் பவுடர், பாத்திரம் தேய்க்கும் லிக்குவட் என்று எந்த பொருட்களை வைத்து பூஜை பாத்திரங்கள் தேய்த்தாலும் அதில் ஒரு கற்பூரத்தை நசுக்கி போட்டு தேயுங்கள். பூஜை பாத்திரம் சீக்கிரமாக கருத்து போகாது.

- Advertisement -