சமையல் பாத்திரங்கள் மின்ன எளிய வழி.

vessel
- Advertisement -

சமையல் பாத்திரங்கள் இல்லாத வீடு என்று எந்த வீடுமே இருக்காது. வீட்டில் ஏதாவது ஒரு பாத்திரமாவது இருக்கும். சமையலறையே இல்லாத வீட்டில் கூட பாத்திரம் வைத்து சமைப்பவர்கள் பலர் இருக்கிறார்கள். அப்படி சமையலுக்காக உபயோகப்படுத்தும் பாத்திரங்கள் எப்பொழுதும் புதிது போல எந்தவித கரையும் இல்லாமல் இருப்பதற்கு எந்த வழிமுறையை பின்பற்ற வேண்டும் என்றுதான் இந்த வீட்டு குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம்.

பொதுவாக பாத்திரங்களை நாம் சமைக்கும் பொழுது நம்மை அறியாமல் அந்த பாத்திரங்களில் எண்ணெய் பிசுக்கு, அடிபிடித்தல் என்று பல கறைகள் ஏற்படும். அவற்றை நாம் உடனுக்குடனே சுத்தம் செய்யாவிட்டால் அந்த பாத்திரங்களை மறுபடியும் சமைப்பதற்கு உபயோகப்படுத்த சிறிது சிரமப்படுவோம். அதே சமயம் வீட்டிற்கு யாராவது வந்து அந்த பாத்திரங்களை பார்த்தால் மிகவும் அசௌகரியமாக உணர்வார்கள். இப்படி இந்த தர்ம சங்கடமான சூழ்நிலை ஏற்படாமல் இருக்கவும் வீட்டில் இருக்கும் அனைத்து பாத்திரங்களும் எத்தனை வருடங்கள் ஆனாலும் பளிச்சென்று இருக்கவும் செய்யக்கூடிய ஒரு எளிய வழிமுறை.

- Advertisement -

இன்றைய காலத்தில் அனைவரும் பாத்திரம் தேய்ப்பதற்கு டிஷ்வாஷ் என்ற ஒன்றை பயன்படுத்துகிறார்கள். இந்த லிக்விடை சிறிது தண்ணீர் ஊற்றி கலந்து தேய்ப்பார்கள். என்னதான் தேய்த்தாலும் பல பாத்திரங்கள் பளபளப்பாக இருப்பதில்லை என்பதுதான் உண்மை. அதிலும் சில பிடிவாதமான கறைகளை தேய்ப்பதற்குள் நம் கை வலித்து விடும். இப்பொழுது இதே டிஷ்வாஸ் லிக்விடை வைத்து எந்த முறையில் உபயோகப்படுத்தினால் பாத்திரம் புத்தம் புதிது போல் மின்னும் என்றுதான் பார்க்கப் போகிறோம்.

ஒரு பெரிய பாத்திரம் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் அரை லிட்டர் அளவிற்கு டிஷ்வாஷ் லிக்விடை ஊற்றுங்கள். அதனுடன் 100 கிராம் அளவிலான பல் தேய்க்கும் பேஸ்ட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அது வெள்ளை நிறத்தில் இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும். இப்பொழுது அந்த பேஸ்ட் அனைத்தையும் டிஸ் வாஷ் லிக்விடில் போட்டு நன்றாக கலந்து கொள்ளுங்கள். பிறகு இதனுடன் ஒரு ஸ்பூன் அளவிற்கு மட்டும் பேக்கிங் சோடாவை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

- Advertisement -

பேஸ்டும் பேக்கிங் சோடாவும் அந்த டிஷ் வாஷ் லிக்விடில் கரைந்து விட வேண்டும். அந்த அளவுக்கு நன்றாக அடித்து கரைத்துக் கொள்ளுங்கள். பிறகு இதனுடன் 200 மில்லி தண்ணீரை ஊற்றி நன்றாக கலந்து ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது இந்த லிக்விடை பயன்படுத்தி நம் வீட்டுப் பாத்திரங்களை தேய்த்தோம் என்றால் எந்தவித கஷ்டமும் படாமல் கை வலிக்காமல் மிகவும் எளிமையான முறையில் தேய்த்தால் அனைத்து கறைகளும் காணாமல் போய்விடும். பாத்திரத்தை புத்தம் புதுசு போல் ஆக்கி விடும்.

இதையும் படிக்கலாமே: கலர் துணியில் ஒட்டிய சாயத்தை நீக்க டிப்ஸ்.

வீட்டிலே இருக்கக்கூடிய பொருட்களை வைத்தே நம் வீட்டுப் பாத்திரங்களை புத்தம் புதுசு போல் நம்மால் ஆக்க முடியும். முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -