பூஜை பாத்திரங்களை இந்த 2 பொருளை வைத்து தேய்த்தால் தங்கம் போல மின்னும். இந்த பளபளப்பு 2 வாரம் ஆனாலும் குறையாமல் அப்படியே இருக்கும்.

poojavessels
- Advertisement -

நம் வீட்டில் இருக்கக்கூடிய பூஜை பாத்திரங்களை சுத்தம் செய்வதற்கு நிறைய வழிகள் உள்ளது. அதில் ஒரு சில வழிகளை பின்பற்றி நம் வீட்டில் இருக்கும் பூஜை பாத்திரங்களை தேய்க்கும் போது, அந்த பூஜை பாத்திரங்கள் பளபளப்பாக இருக்கும். ஆனால் சிறிது நேரம் கழித்து பூஜை அறையில் வைத்த பின்பு, ஒரு சில மணி நேரங்களிலேயே அந்த பூஜை பாத்திரங்கள் கருத்த நிறத்தில் மாறிவிடும். அதாவது பளபளவென ஜொலிக்காமல், பித்தளையின் வண்ணம் மங்கியது போல காணப்படும். ஆனால், இந்த குறிப்பை பின்பற்றி உங்கள் வீட்டு பூஜை பாத்திரங்களை தேய்த்து வைத்தால், 2 வாரங்கள் ஆனாலும் தேய்த்து வைத்த பூஜை பாத்திரங்கள் கருத்துப் போகாமல் அப்படியே இருக்கும். இந்த குறிப்பில் நாம் பயன்படுத்த போகும் அந்த 2 பொருள் என்ன, அந்த 2 பொருளை முறையாக எப்படிப் பயன்படுத்துவது. தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

sabena

பூஜை பாத்திரங்கள் தேய்க்க நாம் பயன்படுத்த போகும் அந்த 2 பொருள். சபீனா பவுடர், எலுமிச்சம்பழம் அவ்வளவு தான். முதலில் பூஜை பாத்திரத்தில் இருக்கக்கூடிய எண்ணெய் மஞ்சள் குங்குமத்தை ஒரு துணியைக் கொண்டு சுத்தமாக துடைத்து எடுத்துவிடுங்கள். அப்போதுதான் அந்த பாத்திரங்களை தேய்த்து சுத்தம் செய்ய வசதியாக இருக்கும்.

- Advertisement -

அடுத்தபடியாக ஒரு எலுமிச்சம் பழத்தை எடுத்து இரண்டாக வெட்டி, பாத்திரங்கள் தேய்க்க பயன்படுத்த போகின்றோம். பாதி அளவு எலுமிச்சம் பழத்தை எடுத்து இலேசாக அதில் சாறு வரும்படி பிழிந்து, அந்த எலுமிச்சம் பழங்களை அப்படியே பூஜை பாத்திரத்தின் மேல் வைத்து நன்றாக தேய்த்துவிட வேண்டும். எல்லா பூஜை பாத்திரங்களிலும் முதலில் எலுமிச்சை பழத்தை கொண்டு தேய்த்து விடுங்கள். இதற்கு காய்ந்த எலுமிச்சம் பழங்களை கூட நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

elumichai lemon

அதன் பின்பு சபீனா பவுடரை ஒரு சின்ன தட்டில் கொட்டி வைத்துக் கொள்ளுங்கள். தேங்காய் நாரில் இந்த சபீனா பவுடரை தொட்டு எலுமிச்சை சாறை தேய்த்து வைத்திருக்கும் எல்லா பூஜை பாத்திரங்களை லேசாக தேய்த்து கொடுத்தாலே போதும். பூஜை பாத்திரங்கள் உடனடியாக பளபளப்பாக மாறிவிடும். அழுத்தித் தேய்க்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. தேய்த்து வைத்திருக்கும் இந்தப் பாத்திரங்களை தண்ணீரில் நன்றாக கழுவிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

உங்களுடைய வீட்டில் தண்ணீர் ரொம்பவும் உப்புத்தன்மை கொண்டதாக இருந்தால், குடிக்கும் தண்ணீரில் இறுதியாக ஒருமுறை இந்த பாத்திரங்களை அலசிவிட்டு ஒரு காட்டன் துணியை கொண்டு உடனடியாக பாத்திரங்களை சுத்தமாகத் துடைத்துவிட வேண்டும். அதன் பின்பு ஒரு ஐந்து நிமிடம் இந்த பாத்திரங்களை உலர வைத்து விட்டு எப்போதும் போல மஞ்சள் குங்குமத்தை இட்டு பூஜை அறையில் வைத்து கொள்ளுங்கள். நிச்சயமாக இரண்டு வாரத்திற்கு ஒரு முறை பூஜை பாத்திரங்களை தேய்க்கும் பழக்கம் உங்களுக்கு இருந்தாலும், இந்த பாத்திரம் தினம் தினம் புதுசு போலவே மின்னும்.

ஒரு சிறிய பாத்திரத்தில் சபீனா பவுடர் போட்டு, அதில் எலுமிச்சை சாரை பிழிந்து கலந்தும் நீங்கள் இந்த முறையை பின்பற்றி கொள்ளலாம். அது உங்களுடைய இஷ்டம். ஆனால் எலுமிச்சம் பழத் தோலைக் கொண்டு பாத்திரங்களை தேய்க்கும் போது நமக்கும் சிரமம் குறையும். அதே சமயம் பாத்திரம் சீக்கிரமே பளபளப்பாகவும் மாறும். உங்களுக்கு இந்த குறிப்பு பிடித்து இருந்தால் உங்களுடைய வீட்டிலும் ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -