- Advertisement -
Homeவீட்டு குறிப்புகள்பூஜை பாத்திரங்களை தேய்த்து கையெல்லாம் வலிக்கிறதா? இனி நீங்க அழுத்தம் கொடுத்து தேய்க்கவே தேவை இல்லை....

பூஜை பாத்திரங்களை தேய்த்து கையெல்லாம் வலிக்கிறதா? இனி நீங்க அழுத்தம் கொடுத்து தேய்க்கவே தேவை இல்லை. இதோ சூப்பரான டிப்ஸ்

- Advertisement -

வாரந்தோறும் வெள்ளிக்கிழமை அன்று தீபம் ஏற்றி, கற்பூர ஆராதனை காட்டி வழிபடுவது என்பது நமது வழக்கத்தில் உள்ளது. இதற்காக நாம் பயன்படுத்தும் பூஜை பாத்திரங்களை மிகவும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். ஒரு சில வீடுகளில் பூஜை பாத்திரங்கள் கண்ணை பறிக்கும் அளவிற்கு புதியது போல் பளபளவென்று இருக்கும். ஒரு சில சமயங்களில் நாம் என்னதான் சுத்தமாக தேய்தாலும் அதில் உள்ள சில கறைகள் முழுவதுமாக போகாமல் அப்படியே ஒட்டிக்கொண்டு பூஜை பாத்திரமங்கள் அதிக பொலிவின்றி இருக்கும். பூஜைக்கு பயன்படுத்தும் இந்த முக்கியமான பூஜை பாத்திரங்களை எவ்வாறு சுலபமான முறையில் சுத்தம் செய்யலாம் என்பதைப் பற்றி இப்பதிவில் பதிவிட்டு உள்ளோம்.

poojai

ஒரு வீட்டில் மிகவும் முக்கியமான இடம் பூஜை அறை தான். வீட்டிற்கு வரும் பெரியவர்கள் நமது பூஜை அறையைத் தான் முதலில் பார்வை இடுவார்கள். அது ஏனென்றால் நீங்கள் உங்கள் பூஜை அறையை எவ்வளவு சுத்தமாக, அழகாக வைத்திருக்கிறீர்களோ அதேபோல் உங்கள் குடும்பத்தையும் அழகாக வழிநடத்தி செல்வீர்கள் என்று உங்களுடைய குணத்தைப் பற்றி அவர்கள் யூகிப்பார்கள். இவ்வாறு உங்களுடைய நற் பண்புகளை வெளிப்படுத்தும் இந்த பூஜை அறையையும் அதில் உள்ள பூஜை பாத்திரங்களையும் நீங்கள் எப்பொழுதும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.

- Advertisement -

அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு வாரமும் பூஜை பாத்திரத்தை சுத்தம் செய்து அதன் பின்னர் பூஜை செய்தோம் என்றால் உங்கள் மனதிற்கு மனநிறைவு கிடைக்கும். எந்த அளவிற்கு பூஜை அறையையும், பூஜை பொருட்களையும் சுத்தமாக வைத்திருக்கிறோமோ அதற்கு ஏற்றார்போல் நமக்கு நல்ல பலன்கள் கிடைக்கிறது. சுத்தம் இருக்குமிடத்தில் தான் மகாலட்சுமி தேவி குடி கொண்டு இருப்பாள். மகாலட்சுமி ஒருவர் மட்டும் உங்கள் வீடு தேடி வந்து விட்டால் போதும் மற்ற அனைத்து செல்வங்களும் உங்களை தானாகவே வந்தடையும்.

poojai pathiram

பூஜை பாத்திரத்தை தூய்மை செய்யும் முறை:
பூஜை பாத்திரங்களை தூய்மை செய்வதை வியாழக்கிழமை அன்று செய்துவிடவேண்டும். வெள்ளிக்கிழமைகளில் நாம் எந்த ஒரு சுத்தம் செய்யும் செயல்களையும் செய்தல் கூடாது. ஏன் என்றால் மகாலட்சுமி வெள்ளிக்கிழமை அன்று தான் நமது வீடு தேடி வருவாள் என்று நமது முன்னோர்கள் சொல்வார்கள். எனவே வெள்ளிக்கிழமைக்கு முந்தைய நாளான வியாழக்கிழமை அன்று இந்த வேலையினை செய்திடல் வேண்டும்.

- Advertisement -

முதலில் பூஜை அறையில் உள்ள பூஜை பாத்திரங்களை ஒரு தட்டில் தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விளக்குகளில் உள்ள பழைய திரியை அகற்றி விட வேண்டும். அதனை மீண்டும் பயன்படுத்தக்கூடாது. விளக்கேற்றிய எண்ணெய் மீதம் இருந்தால் அவற்றை ஒரு சிறிய கிண்ணத்தில் மாற்றி வைத்துக் கொள்ளுங்கள். பிறகு எண்ணெய் பசையை ஒரு சிறிய துணி வைத்து துடைத்து விடுங்கள்.

poojai pathiram

அதன்பின் அடுப்பைப் பற்றவைத்து அதன்மீது ஒரு வாயகன்ற பெரிய பாத்திரத்தில் நீரை நிரப்பி வைக்க வேண்டும். தண்ணீரில் ஒரு நெல்லிக்காய் அளவு புளியை கரைத்துவிட வேண்டும். இரண்டு ஸ்பூன் சோடா உப்பு, சிறிதளவு சபீனா அல்லது பூஜை பாத்திரம் துலக்க பயன்படும் பீதாம்பரி பவுடர் இவற்றை ஒன்றாக சேர்த்து கலந்து விடவேண்டும். இதனுடன் எலுமிச்சை பழச்சாறு அல்லது எலுமிச்சை பழத்தோல் இருந்தால் சேர்த்துக் கொள்ளலாம்.

பின்னர் இந்த தண்ணீரில் துடைத்து வைத்துள்ள பூஜை பாத்திரங்களை ஒன்றன்பின் ஒன்றாக உள்ளே வைக்க வேண்டும். சிறிது நேரம் தண்ணீருடன் சேர்ந்து பூஜை பாத்திரங்கள் நன்றாக கொதிக்க வேண்டும். பூஜை பாத்திரங்கள் தண்ணீரிருடன் சேர்ந்து எவ்வளவு நேரம் கொதிக்கிறதோ அந்த அளவிற்கு பூஜை பாத்திரங்களில் ஒட்டியுள்ள எண்ணெய் பிசுக்கு மற்றும் அழுக்குகள் போன்றவை தூய்மையாகி பாத்திரங்கள் சுத்தமாகும்.

poojai pathiram

பிறகு அடுப்பை அணைத்து தண்ணீர் சிறிது நேரம் ஆரும் வரை காத்திருந்து அதன் பின்னர் பூஜை பாத்திரங்களை வெளியில் எடுத்து நீங்கள் வெறும் கையில் லேசாக தேய்த்து தண்ணீரில் கழுவினால் மட்டுமே போதும். உங்கள் பூஜை பாத்திரம் புதியதாக கடையில் வாங்கியது போல் பளபளவென்று மாறிவிடும். இந்த முறையை மாதம் ஒருமுறை செய்து பயன்பெறுங்கள்.

சற்று முன்