பூஜை பாத்திரங்கள் பளபளக்க புதிய டிப்ஸ்

pooja vessels
- Advertisement -

ஒவ்வொரு வீட்டிலும் பெண்களுக்கு இருக்கும் மிகப் பெரிய வேலை என்றால் பூஜை பாத்திரங்களை சுத்தம் செய்வது தான். பூஜை செய்வது கடவுளை வணங்குவது எல்லாம் மனதிற்கு எத்தனை நிறைவான செயலாக இருந்தாலும் கூட, இந்த பூஜை பாத்திரங்களை சுத்தம் செய்வது எப்பொழுதும் கொஞ்சம் சிரமமான காரியம் தான். பூஜை பாத்திரங்களை சரியாக தேய்க்கா விட்டால் அது பழைய பொருள் போல் இருப்பதோடு பூஜை செய்யும் போது அது மனநிறைவை தராது.

அப்படி நிறம் மங்கிப் போய் பூஜை பாத்திரங்கள் அழுக்காக இருந்தால் அது நல்லதல்ல என்றும் சொல்வார்கள். ஆகையால் தான் இந்த பூஜை பாத்திரங்களை சுத்தம் செய்ய மட்டும் இத்தனை சிரமப்பட வேண்டி இருக்கிறது. இனி அப்படி சிரமத்திற்கு உள்ளாகாமல் எளிமையாக இந்த முறையில் முயற்சி செய்து பாருங்கள். உங்கள் பூஜை பாத்திரங்கள் எல்லாம் புதிது போல ஜொலி ஜொலிக்கும். வாங்க அது எப்படி என்பதை இந்த வீட்டுக் குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

பூஜை பாத்திரங்கள் பளபளக்க
இந்த முறையில் சுத்தம் செய்வதற்கு முதலில் பூஜை பாத்திரத்தில் உள்ள எண்ணெய் எல்லாம் வேறு ஒரு பாத்திரத்திற்கு மாற்றி விடுங்கள் அடுத்து டிஷ்யூ பேப்பர் அல்லது காட்டன் வைத்து என்னை மஞ்சள் குங்குமம் இவை அனைத்தையும் சுத்தமாக துடைத்து எடுத்து விடுங்கள். அதன் பிறகு ஒரு லெமனை எடுத்து இந்த பூஜை பாத்திரங்கள் மீது தெளித்து விடுங்கள்.

இப்போது ஒரு பாத்திரத்தில் கொஞ்சம் வெதுவெதுப்பான தண்ணீரை எடுத்து அதில் ஈனோவை சேர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் பூஜை பாத்திரங்கள் அளவுக்கு ஏற்றவாறு ஈனோவின் அளவை சேர்த்துக் கொள்ளுங்கள். இதிலும் கொஞ்சமாக லெமன் சாறு கலந்த பிறகு ஏற்கனவே நாம் லெமன் வைத்து தேய்த்த பூஜை பாத்திரங்களை இதில் அப்படியே போட்டு சிறிது நேரம் ஊற விடுங்கள்.

- Advertisement -

அதன் பிறகு ஒரு சிறிய தட்டில் கொஞ்சமாக பீதாம்பரியை எடுத்துக்கொண்டு நீங்கள் லெமன் பிழிந்த பிறகு மீதம் இருக்கும் தோலை வைத்து தொட்டு லேசாக தேய்த்து பாருங்கள் பூஜை பாத்திரங்கள் எல்லாம் அப்படி பளிச்சென்று மின்னத் தொடங்கி விடும். சிறு சிறு வேலைப்பாடுகள் உள்ள பூஜை பாத்திரங்களை தேய்க்க மட்டும் ஒரு டூத் பிரஷை பயன்படுத்திக் கொள்ளுங்கள் மற்ற படி சாதாரணமாக தெரிந்தாலே போதும்.

இதையெல்லாம் தேய்த்த பிறகு நல்ல தண்ணீரில் ஒரு முறை அலசிய பின்பு ஈரம் இல்லாமல் சுத்தமாக துடைத்து காய வைத்து எடுத்துக் கொள்ளுங்கள். கடைசியாக கொஞ்சமாக விபூதியை தொட்டு எல்லா பாத்திரத்தின் மீதும் தேய்த்து பாருங்கள். பூஜை பாத்திரங்கள் புதிது போல மின்னுவதோடு அவ்வளவு சீக்கிரத்தில் கருத்தும் போகாது. உங்கள் பூஜை அறையே தங்கம் போல மின்னும்.

இதையும் படிக்கலாமே: இன்ஸ்டன்ட் மா கோலம் போடுவது எப்படி?

பூஜை பாத்திரங்களை சுத்தம் செய்ய பயன்படுத்தும் இந்த முறை உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்களும் ஒருமுறை இப்படி முயற்சி செய்து பாருங்கள் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்.

- Advertisement -