இன்ஸ்டன்ட் மா கோலம் போடுவது எப்படி?

kolam
- Advertisement -

இந்த பச்சரிசி மாக்கோலம் வீட்டிற்கு லட்சுமி கடாட்சத்தையும் அழகையும் கொடுக்கும். ஆனால், பச்சரிசியை ஊறவைத்து அதை அரைத்து கோலம் போடுவதற்குள் அதிக நேரம் எடுக்கும். அதுமட்டுமில்லாமல் சின்ன கோலம் போட குறைந்த அளவு பச்சரிசியை ஊற வைத்தால் மிக்ஸி ஜாரில் அரைப்பதில் கூட இல்லத்தரசிகளுக்கு சிரமம் இருக்கும்.

இனி அந்த சிரமம் எல்லாம் வேண்டாம். இப்படி இன்ஸ்டன்ட்டா மா கோலம் போட குட்டி குட்டி அரிசி மாவு உருண்டைகளை தயார் செய்து கொண்டால், இதை வைத்து வேலையை சுலபமாக முடிக்கலாம். இந்த அரிசி மாவு உருண்டைகளை எப்படி தயார் செய்வது. பயனுள்ள வீட்டு குறிப்பு இதோ இந்த பதிவில் உங்களுக்காக.

- Advertisement -

இன்ஸ்டன்ட் அரிசி மா கோலம்

இந்த குறிப்புக்கு ரேஷன் பச்சரிசி இருந்தால் கூட போதும். 1 கப் அரிசி எடுத்துக் கொள்ளுங்கள். அதை நன்றாக கழுவி விடுங்கள். அரிசி வெள்ளையாக வந்துவிடும். முதல் நாள் இரவே இதை தண்ணீரில் போட்டு ஊற வைத்து விடுங்கள். மறுநாள் இந்த பச்சரிசியை தண்ணீரையெல்லாம் வடித்து கொஞ்சம் கொஞ்சமாக மிக்ஸி ஜாரில் போட்டு கொஞ்சமாக தண்ணீர் விட்டு நைசான மாவாக அரைத்துக் கொள்ளுங்கள்.

ரொம்பவும் தண்ணீர் ஊற்ற வேண்டாம். மிக்ஸி ஜார் அரைபடும் அளவுக்கு தண்ணீர் ஊற்றினால் போதும். இந்த அரிசி மாவை அப்படியே ஒரு சல்லடையில் கொட்டி வடிகட்டலாம். அப்படி இல்லை என்றால் வெள்ளை காட்டன் துணியில் கொட்டி வடிகட்டி விடுங்கள். கீழே அரிசி மாவு தண்ணீர் எல்லாம் வடிந்து, துணிக்கு மேலே மாவு மட்டும் நிக்கும்.

- Advertisement -

முறுக்கு மாவு பிசைந்து வைத்தது போல நமக்கு அரிசி மாவு கிடைத்திருக்கும். இந்த அரிசி மாவை அப்படியே சின்னச்சின்ன உருண்டைகளாக உருட்டி சீடை போல தட்டி, ஒரு தட்டில் வைத்து நல்ல வெயிலில் இரண்டு நாட்கள் காய வைத்து விட்டால் போதும். சூப்பரான இன்ஸ்டன்ட் அரிசிமாவு உருண்டைகள் தயார்.

இந்த உருண்டைகளை காற்று புகாத ஈரம் இல்லாத பாட்டிலில் போட்டு மூடி ஸ்டோர் செய்து கொள்ளலாம் ஒரு வருடமானாலும் கெட்டுப் போகாது. அப்படி இல்லையா அரைத்த இந்த மாவை பரவலாக தட்டில் கொட்டி கூட வெயிலில் காய வைத்து பிறகு அப்படியே கத்தியை வைத்து வெட்டி எடுத்துக் கொள்ளலாம். அதுவும் நம்முடைய விருப்பம் தான்.

- Advertisement -

உங்களுக்கு எப்படி சௌகரியமோ அப்படி செய்து கொள்ளுங்கள். வெள்ளை வெள்ளையாக இருக்கும் இந்த கட்டிகளை எப்படி கோலம் போட பயன்படுத்துவது. ஒரு சின்ன கிண்ணத்தில் தேவையான உருண்டைகளை எடுத்து போட்டுக்கோங்க. அதில் தேவையான அளவு தண்ணீரை ஊற்றி கரைத்தால் மாவு கரைந்து விடும். கோலம் போட மாவு ரெடி ஆகிவிடும்.

ஒரே நிமிடத்தில் இந்த இன்ஸ்டன்ட் அரிசிமா உருண்டைகளை வைத்து கோலமாவு தயார் செய்து விடலாம். தினம் தினம் அரிசி ஊற வைத்து அரைக்க வேண்டிய பிரச்சனையே கிடையாது. காலையிலேயே உங்கள் வீட்டு நிலை வாசல் படியில் இந்த மாக்கோலத்தை போடுங்க. அத்தனை லட்சுமி கடாட்சம் கிடைக்கும். இன்னும் ஒரு சில நாட்களில் மார்கழி மாதம் வரப்போகுது அல்லவா.

இதையும் படிக்கலாமே: துணியில் இருக்கும் அழுக்கு நீங்க டிப்ஸ்

அரிசிமா கோலம் பிடிக்கும். மார்கழி மாதத்தில் கோலம் போட பிடிக்கும் என்பவர்கள் இந்த குறிப்பை பின்பற்றி பார்க்கலாம். இப்போது ஒரு சில இடங்களில் மழை பெய்து கொண்டிருக்கிறது. கொஞ்சம் வெயில் சமயத்தில் இந்த குறிப்பை பின்பற்றி இந்த மாவு உருண்டைகளை தயார் செய்து கொள்ளுங்கள். இந்த பயனுள்ள வீட்டு குறிப்பு பிடித்தவர்கள் பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -