நல்ல நாள், விசேஷங்களின் பொழுது ஏதாவது ஒரு தடை ஏற்படுகிறதா? அதற்கு நீங்கள் செய்த இந்த விஷயங்களும் காரணமாக இருக்கலாம் தெரியுமா?

pooja-room-vilakku
- Advertisement -

நல்ல நாள் மற்றும் விசேஷங்களின் பொழுது சாமி கும்பிட முடியாமல் ஏதாவது ஒரு தடை, பிரச்சனைகள், சச்சரவுகள் ஏற்பட்டால் பெண்கள் செய்யும் இந்த சில தவறுகளும் அதற்கு காரணமாக அமைந்து விடுகிறது என்கிறது சாஸ்திரம். பூஜை செய்வதில் ஏற்படும் தடைகளுக்கு நாம் செய்யும் இந்த சில விஷயங்களை நாம் திருத்திக் கொள்ள கடமைப்பட்டுள்ளோம். அப்படியான அந்த சில விஷயங்களை பற்றிய தகவல்களை நீங்களும் தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணியுங்கள்.

broom-thudaippam

முதலாவதாக பெண்கள் செய்யும் தவறுகளில் முக்கிய தவறு வீடு கூட்டும் பொழுது குப்பையை ஒதுக்கி வைப்பது. தினந்தோறும் நாம் வீடு பெருக்கும் பொழுது அன்றைய நாளைய குப்பைகளை அன்றைய நாளே அகற்றி விட வேண்டும். தினமும் இரு முறையாவது வீட்டை கூட்டி சுத்தம் செய்ய வேண்டும். அப்படி வீட்டை கூட்டி சுத்தம் செய்யும் பொழுது மூலை முடுக்குகளில் எல்லாம் விட்டுவிட்டு சுத்தம் செய்வதும் மிகவும் தவறு. மூலை, முடுக்குகளில் இருக்கும் தூசு, தும்புகளை அகற்றுவதன் மூலம் நம் வீட்டில் இருக்கும் தரித்திரங்களும், பீடைகளும், தடைகளும் அகலும் என்பது நம்பிக்கை.

- Advertisement -

எனவே வீட்டை கூட்டி சுத்தம் செய்யும் பொழுது முழு வீட்டையும் ஒழுங்காக சுத்தம் செய்ய வேண்டும். ஆங்காங்கே துடைப்பத்தை போட்டால் மட்டும் போதாது. மேலும் கூட்டிய குப்பைகளை பிறகு அகற்றிக் கொள்ளலாம் என்று ஒதுக்கி வைக்கக் கூடாது. இப்படி ஒதுக்கி வைத்தால் நீங்கள் சாமி கும்பிடும் பொழுது சாமியும் இப்பொழுது என்னை கும்பிடாதே! பிறகு கும்பிட்டு கொள் என்று உங்களை ஒதுக்கி வைத்துவிடும் என்கிறது சாஸ்திரம்.

kuthu-vilakku

அதே போல நீங்கள் விளக்கு ஏற்றும் பொழுது முறையாக தீபத்தை மலை ஏற்ற வேண்டும். அதாவது தீபத்தை அணைய செய்ய வேண்டும். வாயால் ஊதுவது கூடாது, அதே போல் திரியை தள்ளி விட்டு எண்ணெயில் அமிழ்த்தி அணைக்கவும் கூடாது. ஊதுவத்தி குச்சியால் அணைப்பது, வத்திக் குச்சியால் அணைப்பது போன்றவற்றையும் செய்யக் கூடாது. இது போன்ற தவறான செயல்களில் ஈடுபடும் பொழுது உங்களுக்கு நல்ல நாள், விசேஷம் போன்றவற்றில் ஈடுபட முடியாமல் செய்து விடும்.

- Advertisement -

தீபத்தை முறையாக மலை ஏற்றுவது என்பது புஷ்பத்தால் அணைப்பது ஆகும். தீபத்தை குளிர்விற்பதற்கு பால் பயன்படுத்தலாம். புஷ்பத்தை பாலில் தொட்டு பின்பு தீபத்தை அணைக்கலாம்! இதனால் தீபம் மனதார குளிர்ந்து ஜோதியில் இருக்கும் தெய்வத்தை நிஷ்டை அடைய செய்யும். இதனால் தெய்வ குத்தம் எதுவும் ஏற்படாமல், உங்களுடைய பூஜைகள் முழுமை அடையும். பூஜைகளுக்கு உரிய பலன்கள் கிடைக்க இது போல சில விஷயங்களை நாம் கடைபிடிக்க வேண்டும்.

pooja-room

பூஜை அறையை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். அப்படி அல்லாமல் தூசி படிய விட்டு வேடிக்கை பார்ப்பது, அந்த தூசுகளுடன் பூஜைகள் செய்வது, விளக்கேற்றும் எண்ணெயை மாற்றாமல் பச்சை நிறம் அடைய செய்வது, போன்ற சில விஷயங்களும் நமக்கு நல்ல நாள், விசேஷங்களின் பொழுது பங்கு கொள்ள முடியாமல் செய்யும் விஷயங்கள் தான். இது போன்ற தவறுகளை பெண்கள் செய்யாமல் இருக்கும் பொழுது நல்ல நாள், விசேஷங்களின் போது எந்த தடையும் ஏற்படாமல் உங்களால் பூஜையில் கலந்து கொள்ள முடியும் என்பதை மனதில் வைத்து செயல்படுவது நல்லது.

- Advertisement -