இந்த நிற பூனை வளர்த்தால் அதிர்ஷ்டம் வருமா என்ன? இவ்ளோ நாளா இது தெரிஞ்சுக்காம போயிட்டோமே!

cat
- Advertisement -

பொதுவாக பூனையை வளர்ப்பது என்பது அதிர்ஷ்டம் நிறைந்ததாகவே கருதப்படுகிறது. ஆனால் குறிப்பிட்ட இந்த நிற வகை பூனையை வளர்க்கும் பொழுது துரதிர்ஷ்டம் நம்மை துரத்துமே என்ற நம்பிக்கையும் நிலவுகிறது. அந்த வகையில் இந்த நிற பூனையை வளர்ப்பவர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டோ கொட்டென்று கொட்டும் என்றும் நம்பப்படுகிறது. அப்படியான பூனை என்ன? அதைப் பற்றிய சுவாரசிய ஆன்மீகம் சார்ந்த தகவல்களை இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்வோம் வாங்க.

இன்று பலருடைய இல்லங்களில் மனிதன் மட்டும் அல்லாது, சில வீட்டு விலங்குகளும் வளர்க்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த பூனையும் ஒன்றாக இருக்கிறது. விதவிதமான நிறங்களில் இருக்கக் கூடிய பூனைகளில் கருப்பு நிற பூனை என்பது அதிர்ஷ்டத்திற்கு மாறாக கெட்ட சகுனமாக கருதப்பட்டு வந்தது. காலம் காலமாக இதனை ஒரு சகுன தடையாகவே பார்த்து வந்தனர்.

- Advertisement -

கருப்பு பூனை குறுக்கே சென்றால் சிறிது நேரம் கழித்து தான் நாம் பயணம் செய்ய வேண்டும் என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். முந்தைய காலங்களில் காளைகளைப் பூட்டிய வண்டியில் செல்லும் பொழுது கருப்பு பூனை குறுக்கே வர நேர்ந்தால் காளை மிரண்டு ஓடும் என்றும், இதனால் அதில் பயணம் செய்பவர்களுக்கு காயம் உண்டாகியது என்றும் கூறப்படுகிறது. எனவே தான் கருப்பு பூனை வரும் பொழுது சிறிது நேரம் வண்டியை நிறுத்திவிட்டு பிறகு பிரயாணம் செய்தனர்.

அதே போல கருப்பு பூனை சனி மற்றும் ராகுவின் அம்சமாக கருதப்படுகிறது. இவர்களின் கோபத்திற்கு ஆளாக கூடாது. இவர்களுடைய பார்வை நம் மீது படக்கூடாது என்பதற்காகவும், கருப்பு பூனை குறுக்கே வந்தால் சிறிது நேரம் கழித்து முன்னர் ஒரு ஆளை விட்டுவிட்டு, நாம் பின்னர் செல்ல வேண்டும் என்று சாஸ்திரங்கள் வலியுறுத்துகிறது. இப்படியான கெட்ட சகுனத்தையும், துரதிஷ்டத்தையும் கொண்டுள்ள கருப்பு பூனை உண்மையில் அதிர்ஷ்டகரமானது என்று பல நாடுகள் இன்றளவிலும் நம்பி வருகின்றனர். கருப்பு பூனை வீட்டில் வளர்ப்பவர்களுக்கு அதிர்ஷ்டம் வருமாம். அவர்களுக்கு வரக்கூடிய கெட்ட விஷயங்களை எல்லாம் அது கிரகித்துக் கொள்ளும் என்றும், இதனால் நமக்கு வரக்கூடிய துன்பங்கள் குறையும் என்றும் நம்பப்படுகிறது.

- Advertisement -

இப்பொழுது எல்லாம் எங்குமே கருப்பு பூனையை பார்க்க முடிவதில்லை என்பதை உணர்கிறீர்களா? கருப்பு பூனை பொதுவாக மந்திரவாதம், பில்லி, சூனியம், ஏவல் போன்றவற்றுக்கு பயன்படுத்தப்படுவதாக நம்பி வந்தனர். இது துரதிருஷ்டத்தின் அடையாளமாக இருந்து வந்தது, ஆனால் கருப்பு பூனை உண்மையில் நம்முடைய நிதி நிலைமையை மேம்படுத்துகிறது. குடும்பத்தில் இருக்கும் சண்டை, சச்சரவுகளை தடுத்து நிறுத்தி அவர்களுக்குள் ஒரு பிணைப்பை ஏற்படுத்துகிறது. புது புரிதலை உண்டாக்குகிறது. இதனால் குடும்பம் சுபிட்சமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இத்தகைய அதிர்ஷ்டம் நிறைந்த கருப்பு பூனையை வீட்டில் வளர்ப்பது என்பது துரதிஷ்டமானது அல்ல, அதிர்ஷ்டமானது தான்.

இதையும் படிக்கலாமே:
எந்த செலவும் செய்யாமல் பித்ரு சாபத்திலிருந்து விடுபட இந்த ஒரு விஷயத்தை மட்டும் நீங்கள் செய்தால் போதும். உங்கள் அடுத்தடுத்த தலைமுறைக்கு கூட பித்ரு சாபம் வராது.

பிரிட்டன் நாட்டில் திருமண பரிசாக கருப்பு பூனையை மணமக்களுக்கு அளிக்கின்றனர். இது அவர்களுக்குள் அதிர்ஷ்டத்தையும், மகிழ்ச்சியையும் கொண்டு வருவதாக நம்புகின்றனர். மேலும் பிரிட்டிஷ் மாலுமிகள் பூனையை கப்பலில் கொண்டு செல்கின்றனர். இதனால் கப்பல் கவிழாது என்றும், அதில் இருக்கும் எலிகள் கப்பலை சேதப்படுத்தாது என்றும் நம்பி வந்தனர். கொடூரமான மனித இனத்திற்கு வரக்கூடிய நோய்கள் பலவும் பூனைக்கும் வரும் என்பதால் அதை வைத்து பல பரிசோதனைகளும் நடத்தப்பட்டு வருகின்றன. இப்படி பல வகைகளில் நமக்கு நன்மை செய்யக்கூடிய இந்த பூனை அல்லது கருப்பு பூனை எப்பொழுதும் அதிர்ஷ்டகரமானது.

- Advertisement -