Onion garlic chutney : காரசாரமான ருசியான பூண்டு கார சட்னி எளிதாக எப்படி வீட்டில் அரைப்பது?

poondu-onion-chutney_tamil
- Advertisement -

ஒரு வாரம் ஆனாலும் இந்த சட்னி கெட்டுப் போகவே போகாது. ரொம்பவே ருசியாக இருக்கக்கூடிய இந்த சட்னி சின்ன வெங்காயம் மற்றும் பூண்டு அதிகமாக சேர்த்து செய்யப்படுவதால் ஆரோக்கியமானதும் கூட! நாவூரும் சுவையில் காரசாரமான இந்த பூண்டு கார சட்னி இட்லி, தோசைக்கு தொட்டுக்க செம டேஸ்டாக இருக்கும். மிருதுவான சப்பாத்தியுடன் தொட்டுக்கிட்டாலும் நன்றாக இருக்கும். நீங்களும் இதே மாதிரி ட்ரை பண்ணி பாருங்க, இனி அடிக்கடி உங்க வீட்டில் பூண்டு சட்னி செய்விங்க! இந்த பூண்டு சட்னி ரெசிபி செய்வது எப்படி? என்று இனி தெரிந்து கொள்வோம் வாங்க.

தேவையான பொருட்கள்

நல்லெண்ணெய் – ரெண்டு டேபிள் ஸ்பூன், வரமிளகாய் – 10, காஷ்மீரி மிளகாய் – 3, சின்ன வெங்காயம் – 150 கிராம், பூண்டு பற்கள் – 150 கிராம், புளி – சிறு எலுமிச்சை பழ அளவு, உப்பு – தேவையான அளவு. தாளிக்க: நல்லெண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன், கடுகு – அரை ஸ்பூன், உளுத்தம் பருப்பு – ஒரு ஸ்பூன், பெருங்காயத்தூள் – கால் ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து.

- Advertisement -

செய்முறை

பூண்டு கார சட்னி செய்வதற்கு முதலில் 150 கிராம் அளவிற்கு ஒரு கப் முழுக்க பூண்டை உரித்து வைத்துக் கொள்ளுங்கள். அதே போல 150 கிராம் அளவிற்கு சரிசமமாக சின்ன வெங்காயத்தையும் தோல் உரித்து முழுதாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். மற்ற தேவையான பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள். ரெண்டு டேபிள் ஸ்பூன் அளவிற்கு நல்லெண்ணெய் விட்டு காய விடுங்கள். ஒரு வாரம் வரை கெட்டுப் போகாமல் இருக்க நல்லெண்ணெய் ஊற்றி செய்ய வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் வரமிளகாய்களை காம்பு நீக்கி சேர்த்து அடுப்பை குறைவான தீயில் வைத்து ஐந்து நிமிடம் நன்கு வறுத்து உப்பி வர எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பின்னர் மீதம் இருக்கும் அந்த எண்ணெயிலேயே உரித்து வைத்துள்ள பூண்டு பற்கள் மற்றும் சின்ன வெங்காயத்தையும் சேர்த்து வதக்குங்கள். இவை பாதி அளவிற்கு வதங்கி வரும் பொழுது ஒரு சிறு எலுமிச்சை பழ அளவிற்கு புளியை எடுத்து சிறு சிறு துண்டுகளாக பிரித்துப் போட்டுக் கொள்ளுங்கள். இப்போது எல்லாவற்றையும் நன்கு வதக்கி சுருங்க வறுத்து எடுங்கள். இப்போது ஒரு மிக்ஸி ஜாரை கழுவி எடுத்து அதில் வறுத்து எடுத்து வைத்துள்ள வரமிளகாய், பூண்டு, வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து இதனுடன் தேவையான அளவிற்கு உப்பு போட்டு நைசாக பேஸ்ட் போல அரைத்து எடுத்துக் கொண்டு வாருங்கள்.

இதையும் படிக்கலாமே:
காஜூ கட்லி சாப்பிடணும்னு ஆசைப்பட்டா அதுக்கு முந்திரி தான் வேணும்னு அவசியமில்லை, ஒரு கப் வேர்க்கடலை இருந்தா போதும் சுவையான இந்த கட்லியை செஞ்சி அசத்துங்க.

பிறகு தாளிக்க அடுப்பில் ஒரு டேபிள்ஸ்பூன் அளவிற்கு நல்லெண்ணெய் விட்டு காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்து வந்ததும் உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு ஒரு கொத்து கருவேப்பிலையும், கொஞ்சம் பெருங்காயத்தூளும் போட்டு லேசாக வறுத்து அரைத்து வைத்துள்ள சட்னியையும் சேர்த்து வதக்குங்கள். ஒரு ஐந்து நிமிடம் எண்ணெய் தெளிய வதக்க வேண்டும். அப்போது தான் பச்சை வாசம் நீங்கி அதிக நாட்கள் வரை கெட்டுப் போகாமல் இருக்கும். கெட்டியாக திரண்டு வந்ததும் அடுப்பை அணைத்து பரிமாற வேண்டியதுதான். ரொம்பவே ருசியாக இருக்கக்கூடிய இந்த பூண்டு கார சட்னி இட்லி, தோசை, சப்பாத்திக்கு கூட செம்மையாக இருக்கும், ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -