10 நிமிடத்தில் ஆரோக்கியமான லஞ்ச் பாக்ஸ், சாப்பாடு தயார்! சூப்பரான பூண்டு சாதம் செய்வது எப்படி?

poondu-sadam1

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் ஒரு கலவை சாதத்தை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். பள்ளி செல்லும் குழந்தைகளுக்கும், அலுவலகத்திற்குச் செல்லும் கணவர்களுக்கும் என்ன சமைத்து கட்டிக் கொடுப்பது! என்ற குழப்பம் இனி தேவையில்லை. வாரத்தில் ஒரு நாள், சாதம் மட்டும் வடித்து வைத்து விட்டீர்கள் என்றால் போதும். 10 நிமிடத்தில், இந்த பூண்டு சாதத்தை ருசியாக, காரசாரமாக தயார் செய்துவிடலாம். 10 நிமிடத்தில் இந்த லஞ்ச் பாக்ஸ் ரெசிபியை எப்படி செய்வது பார்த்து விடலாமா?

Garlic poondu

அடுப்பில் ஒரு கடாயை வைத்து கொள்ளுங்கள். 2 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி, அது காய்ந்தவுடன், கடுகு 1/2 ஸ்பூன், உளுந்து – 1 ஸ்பூன், கடலைப்பருப்பு – 1 ஸ்பூன், வேர்க்கடலை – 1 ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, பச்சை மிளகாய் – 1 எல்லாவற்றையும் சேர்த்து சிவக்கும் அளவிற்கு வறுக்க வேண்டும்.

இந்தப் பருப்பு வகைகள் எல்லாம் பொன்னிறமாக சிவந்தவுடன், ஒரு பெரிய வெங்காயத்தை, பிரியாணிக்கு வெட்டுவது போல், நீளநீளமாக, நைசாக வெட்டி எண்ணெயில் சேர்த்து விட வேண்டும். அடுத்ததாக 20 பல் பூண்டை தோலுரித்து பொடியாக நறுக்கி, வெங்காயதோடு சேர்த்து சிவக்க வறுக்க வேண்டும். இந்த சமயத்தில் உங்களுக்கு பூண்டின் வாசம் நன்றாக வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

onion-cutting

பூண்டின் வாசம் வந்தவுடன், மசாலாவுக்கு தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன், மிளகாய்தூள் – 1 ஸ்பூன், தனியா தூள் – 1 ஸ்பூன், கரம் மசாலா – 1/2 ஸ்பூன், சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும். இறுதியாக 2 கப் வடித்த சாதத்தை இந்த கலவையோடு சேர்த்து, சாதத்திற்கு தேவையான உப்பு சேர்த்து, ஐந்து நிமிடங்கள் மிதமான தீயில் வைத்து கிளறி, 2 சொட்டு நெய்விட்டு, கொத்தமல்லி தழை தூவி, அடுப்பை அணைத்து விடுங்கள்.

- Advertisement -

அந்த பர்னர் சூட்டில், இரண்டு நிமிடங்கள் கடாயிலேயே, இந்த கலவை சாதத்தை மூடி வைத்து விடுங்கள். அவ்வளவு தான். நன்றாக ஊறி, ஆறிய பின்பு, லஞ்ச் பாக்ஸில் பேக் செய்து விட்டீர்கள் என்றால், சூப்பரான கலவை சாதம் தயார்! உருளைக்கிழங்கு சிப்ஸ் இருந்தால்கூட போதும். இந்த சாதத்தை சூப்பராக சாப்பிட்டு விடலாம். உடல் ஆரோக்கியத்திற்கும் எந்த ஒரு கேடும் இருக்காது என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

poondu-sadam2

வீட்டிலேயே பூண்டு சாதத்தை சாப்பிடுவதாக இருந்தால், சூடாக பரிமாறிக் கொள்ளலாம். குழந்தைகளுக்கு தேவை என்றால், காரத்தின் அளவை குறைத்தும் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது. எந்த கலவை சாதத்திற்கு, சாப்பாடு வடிப்பதாக இருந்தாலும், அதை குழைய வைத்துவிடாதீர்கள். சாதம் உதிரி உதிரியாக இருக்க வேண்டியது அவசியம். பாஸ்மதி அரிசியை வடித்து கூட இந்த சாதத்தை அருமையாக செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே
ஒவ்வொரு தமிழ் மாத பிரதோஷ தினத்திலும் எதை நிவேதனமாக படைத்தால்! என்ன நன்மைகள் நடக்கும்? என்பதை நீங்களும் தெரிஞ்சுக்கணுமா?

இது போன்ற மேலும் பல சமையல் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.