குப்பையில் தூக்கி போடும் பூண்டு தோலுக்கு பின்னால் இத்தனை விஷயங்கள் இருக்கிறதா? இத்தனை நாளா இது தெரியாமலா தங்கத்துக்கு நிகரான இந்த பொருளை தூக்கி குப்பையில் போட்டோம்.

amman8
- Advertisement -

இந்த பிரபஞ்சத்தில் நேர்மறை ஆற்றல் எந்த அளவுக்கு பரவி நிரம்பி இருக்கிறதோ, அதே அளவுக்கு எதிர்மறை ஆற்றலும் நிரம்பி தான் இருக்கிறது. இதில் இந்த எதிர்மறை ஆற்றலில் இருந்து நாம் தப்பிக்க வேண்டும் என்றால் சில விஷயங்களை பின்பற்றி பார்க்கலாம். எதிர்மறை ஆற்றலை விரட்டியடிக்க ஆன்மீகத்தில் ஏராளமான பரிகாரம் உண்டு. அந்த வரிசையில் எதிர்மறை ஆற்றலை விரட்டி அடிக்க கூடிய சக்தி இந்த பூண்டு தோலுக்கு இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. எந்தெந்த வகையில் பூண்டு தோலை பயன்படுத்தினால் எதிர்மறை ஆற்றலில் இருந்து நாம் தப்பிக்கலாம் என்பதை பற்றிய ஆன்மீகம் சார்ந்த சில குறிப்புகள் இதோ உங்களுக்காக.

பூண்டு தோலின் மகத்துவம்:
சில பேருக்கு தூங்கும் போது கெட்ட கனவு வந்து தொல்லை கொடுக்கும். நிம்மதியான ஆழ்ந்த உறக்கமே இருக்காது. படுக்கையில் வந்து படுத்தால் போதும். கெட்ட ஞாபகங்கள் வரும். ஆவி பேய் பிசாசு என்று சொல்லப்படும் எதிர்மறையான விஷயங்கள் வந்து தொல்லை கொடுப்பது போலவே ஒரு உணர்வு. அப்படி என்றால் இவைகள் எல்லாம் நேரில் வராது. எதிர்மறை ஆற்றலுக்கு இப்படி ஒரு பெயரை நாம் வைத்திருக்கிறோம் அவ்வளவுதான். தூங்கும்போது யாரோ வந்து அழுத்துவது போல, யாரோ வந்து அடித்தது போல, யாரோ வந்து தட்டி எழுப்புவது போல, சில தொல்லைகள் சில பேருக்கு இருக்கும் அல்லவா. அதையெல்லாம் தவிர்ப்பதற்கு இந்த பூண்டு தோலை தலையணையில் அடியில் வைத்து தூங்கலாம்.

- Advertisement -

ஒரு சிறிய வெள்ளைத் துணியில் பூண்டு தோலை போட்டு முடிந்து வைத்துக் கொள்ளுங்கள். இதை தூங்கும்போது தலையணைக்கு அடியில் வைத்து தூங்கி பாருங்கள். நிம்மதியான தூக்கம் உங்களது கண்களை தழுவும். இது தவிர வீட்டில் ஏதோ ஒரு நெகட்டிவிட்டி இருப்பது போல உணர்வு உங்களுக்கு ஏற்பட்டால், வாரம் தோறும் இரண்டு நாள் வெள்ளி செவ்வாய் கிழமைகளில் சாம்பிராணி தூபம் போடும்போது அதில் இந்த பூண்டு தோலை போட்டு, அதில் வரும் புகையை வீடு முழுவதும் காண்பியுங்கள் வீட்டில் இருக்கும் நெகட்டிவிட்டி விரட்டி அடிக்கப்படும்.

நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டும். நடு இரவில் பயணம் செய்ய வேண்டும். குழந்தை குட்டியோடு வெளியூர் செல்கிறீர்கள். உங்களை எந்த காத்து கருப்பும் அண்ட கூடாது. நேரம் கெட்ட நேரத்தில் வெளியில் இருந்தால் சில பல பிரச்சனைகளை நாம் எதிர்கொள்ள வேண்டி இருக்கும். அதிலிருந்து தப்பிக்க உங்களோடு கொஞ்சம் பூண்டு தோலை வைத்துக் கொள்ளலாம். சிறிய வெள்ளைத் துணியில் பூண்டு தோலை முடிந்து நீங்கள் பயணம் செய்யும்போது உங்கள் ஹேண்ட் பேக்கில் வைத்துக் கொள்ளவும்.

- Advertisement -

வீட்டிற்குள் கண் திருஷ்டியும் சில பேரின் பொறாமை குணங்களும் வந்து நிச்சயம் பிரச்சனை கொடுக்கும். இவை இரண்டும் நிலை வாசலின் வழியாகத்தான் உள்ளே நுழையும். ஒரு சிறிய வெள்ளைத் துணியில் கொஞ்சமாக பூண்டு தோல், இரண்டு வரமிளகாயை வைத்து கட்டி நிலை வாசலில் தொங்க விட்டால், வீட்டிற்குள் கெட்ட எண்ணம் கொண்டவர்கலால் நுழைய முடியாது. அதாவது வீட்டிற்குள் கெட்ட எண்ணம் பொறாமை குணம் கொண்டவர்கள் நுழைந்தால் அவர்களுடைய உச்சந் தலையிலிருந்து அந்த நெகட்டிவிட்டியை இந்த பூண்டு தோல் ஈர்துக்கொள்ளும். இதே போல தான் கண் திருஷ்டியையும் நம் வீட்டிற்குள் வரவிடாமல் தடுக்கும்.

சில பேருக்கு கண் திருஷ்டியால் உடம்பு அடித்துப் போட்டது போல வலிக்கும். அவர்களை கிழக்கு பார்த்து நிற்க வைத்துவிட்டு, கொஞ்சம் பூண்டு தோலை அவர்கள் உச்சந் தலையில் இருந்து உள்ளங் கால் வரை அப்படியே, உடம்பில் படும்படி உரசி எடுத்து விடுங்கள். இதன் மூலம் நம் உடம்பில் இருக்கும் நவ துவாரங்களில் வழியாக உடம்பைப் பிடித்து இருக்கும் எதிர்மறை ஆற்றல் அனைத்தும் தெறித்து வெளியே ஓடிவிடும். இப்படி செய்த அந்த பூண்டு தோலை கையோடு கொண்டு போய் நெருப்பில் போட்டு பொசுக்கி விடுங்கள்.

- Advertisement -

பூண்டில் இருக்கும் காரத்தன்மையில் கொஞ்சம் அந்த பூண்டு தோலுக்கும் உண்டு. பூண்டு தோலை குப்பை என்று நினைத்து யாரும் தூக்கிப்போட்டு விட வேண்டாம். பூண்டை உரித்து விட்டால், அந்த தோலை ஒரு துணி பையில் போட்டு சேகரித்து வாருங்கள். இப்படி பலவிதமான பயன்பாட்டுக்கு எடுத்து உபயோகித்துக் கொள்ளலாம். இத்தனை சிறப்பு அம்சங்களும் மகத்துவமும் பூண்டு தோலுக்கு உள்ளது.

இதையும் படிக்கலாமே: இனி வாழ்நாளில் கடனுக்கு வட்டி கட்ட வேண்டுமே என்ற பயமே இல்லாமல் நிம்மதியாக வாழ வேண்டுமென்றால், இந்த இரண்டு விஷயங்களை தவறாமல் செய்து விடுங்கள்.

இதில் ஒரு சில மருத்துவ குணமும் அடங்கி இருக்கிறது‌ பூண்டு தோலை புகை போடுவதன் மூலம் நமக்கு சைனஸ் போன்ற பிரச்சனைகள் வராமல் இருக்கும். அதேசமயம் தலையில் நீர் கோர்த்து தலைபாரம் வரும் அல்லவா, பூண்டு தோலையே தலையணையாக செய்து அதில் தலை வைத்து படுத்தால் நம்முடைய நீர் கோர்த்தல் பிரச்சனை தலைபாரம் பிரச்சனை படிப்படியாக குறையும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. பூண்டு தோலை மகத்துவமாக நீங்கள் நினைத்துக் கொண்டு பயன்படுத்தினாலும் சரி, மருத்துவமாக நீங்கள் நினைத்துக் கொண்டு பயன்படுத்தினாலும் சரி, உங்களுக்கு அது நன்மையை மட்டும் தான் செய்யும் என்ற தகவலோடு இன்றைய பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -