விநாயகர் சதுர்த்திக்கு பூரண கொழுக்கட்டை செய்வது எப்படி? கொழுக்கட்டை ஆறிய பின்பும் மிருதுவாக இருக்க மாவு பிசையும்போது இந்த 1 பொருளை சேர்க்கணும்.

kozhukattai3
- Advertisement -

நாளை விநாயகர் சதுர்த்திக்கு விநாயகருக்கு மிகவும் பிடித்தமான கொழுக்கட்டையை சுலபமாக பக்குவமாக எப்படி செய்வது என்பதைப் பற்றித் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். சில பேர் வீடுகளில், கடையிலிருந்து வாங்கிய மாவில் கொழுக்கட்டை செய்தால், கொழுக்கட்டை சூடாக இருக்கும்போது மேல் மாவு சாஃப்டாக இருக்கும். அதுவே கொழுக்கட்டை ஆறி விட்டால், கொழுக்கட்டையின் மேல் மாவு ஹார்டாக மாறிவிடும். கொழுக்கட்டை ஆறினாலும் மேல் மாவு சாஃப்ட்டாக இருக்க என்ன செய்ய வேண்டும் என்ற டிப்ஸ் உங்களுக்காக.

kozhukattai5

முதலில் கொழுக்கட்டைக்கு சுலபமாக பூரணம் எப்படி தயாரிப்பது என்று பார்த்துவிடலாம். இதற்கு 1 கப் அளவு தேங்காய், 1 கப் அளவு வெல்லம், 1 ஸ்பூன் நெய் நமக்கு தேவைப்படும்.

- Advertisement -

அடி கனமான ஒரு கடாயை அடுப்பில் வைத்து கொள்ளுங்கள். அதில் 1 ஸ்பூன் நெய் ஊற்றி, முதலில் தயாராக எடுத்து வைத்திருக்கும் தேங்காயை போட்டு ஒரு நிமிடம் வதக்கி, அதன் பின்பு தயாராக எடுத்து வைத்திருக்கும் வெல்லத்தை சேர்த்து வதக்கவேண்டும். வெள்ளம் சூட்டில் உருகி கரைந்து தேங்காயோடு சேர்த்து கொஞ்சம் தளதளவென வரும். தேங்காயும் வெல்லமும் சேர்த்து கொஞ்சம் கெட்டி பதம் வரும் வரைக்கும் நன்றாக கலந்து விட்டு கொண்டே இருங்கள். அதன் பின்பு அடுப்பை அணைத்து விட்டால். இந்த பூரணம் கொஞ்சம் இலகியது போல் இருந்தாலும் பரவாயில்லை. ஆறிய பின்பு கெட்டியாக மாறி விடும். இந்த பூரணம் அப்படியே இருக்கட்டும். (உங்களுடைய வெள்ளத்தில் தூசு அதிகமாக இருந்தால், வெல்லத்தில் 1/4 கப் அளவு தண்ணீர் ஊற்றி வெல்லத்தைக் கரைத்து வடிகட்டி தேங்காயில் ஊற்றி கொள்ளலாம்.)

kozhukattai1

அடுத்தபடியாக பூரணத்திற்கு மேல் மாவு தயார் செய்யலாம். பச்சரிசி மாவு – 1 கப் அளவு, தண்ணீர் – 1 கப் நமக்கு தேவைப்படும். (கடையில் வாங்கிய பச்சரிசி மாவு, இடியாப்பம் மாவு எதில் வேண்டுமென்றாலும் இந்த கொழுக்கட்டையை செய்யலாம்.)

- Advertisement -

அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து 1 கப் அளவு தண்ணீரை ஊற்றி, அந்த தண்ணீரில் மாவுக்கு தேவையான அளவு உப்பு போட்டு, 1 ஸ்பூன் நெய்யை இந்த தண்ணீரில் ஊற்றி, நன்றாக கொதிக்க வையுங்கள். (நிறைய பேர் இந்த தண்ணீரில் எண்ணெய் ஊற்றி தான் கொதிக்க வைப்பார்கள். ஆனால் எண்ணெய்க்கு பதில் நெய் ஊற்றி பிசைந்து பாருங்கள். இந்த தண்ணீரை ஊற்றி கொழுக்கட்டை மேல் மாவு பிசைந்தால் கொழுக்கட்டை ஆறினாலும் மேல் மாவு மிருதுவாக வரும்.)

kozhukattai

ஒரு அகலமான பாத்திரத்தில் பச்சரிசி மாவை போட்டு கொதிக்கின்ற தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக இந்த மாவில் ஊற்றி ஒரு கரண்டியை வைத்து மாவை நன்றாக கலந்து விடுங்கள். (சில மாவு கொஞ்சம் தண்ணீர் அதிகமாக இழுக்கும். சில அரிசி மாவு தண்ணீரை குறைவாக உறிஞ்சும். தண்ணீரை மொத்தமாக மாவில் ஊற்றாமல் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி மாவை பிசைந்து கொள்ளுங்கள்.)

- Advertisement -

kozhukattai2

மாவு கை பொறுக்கும் சூடு வந்தவுடன் உங்கள் கையை வைத்து மாவை நன்றாக பிசைந்து, சிறு உருண்டையை எடுத்து உருட்டி உள்ளங்கையில் வைத்து தட்டினால், மாவின் ஓரங்களில் விரிசல் விழாமல் இருக்க வேண்டும். அந்த பதத்திற்கு மாவை பிசைந்து கொள்ளுங்கள். பிசைந்த மாவின் மேலே கொஞ்சமாக நெய்யை தடவி, ஒரு மூடி போட்டு 5 நிமிடங்கள் அப்படியே ஊறவைத்து விடுங்கள். ஏனென்றால் பச்சரிசி மாவில் நீங்கள் ஊற்றி இருக்கும் தண்ணீர் நன்றாக உறிஞ்ச வேண்டும். (அதேபோல் மாவு காற்றில் ஆறி விடக்கூடாது. மாவு வறண்டு போய்விடும். வறண்ட மாவில் கொழுக்கட்டை செய்தால் சரியாக வராது.)

kozhukattai6

இப்போது நமக்கு மாபெரும் தயாராகிவிட்டது. உள்ளே வைக்கும் பூரணமும் தயாராகிவிட்டது. தயாராக இருக்கும் மாவை சிறுசிறு உருண்டைகளாக பிடித்து வைத்துக்கொள்ளுங்கள். தயாராக இருக்கும் புராணங்களையும் சிறு சிறு உருண்டைகளாக பிடித்து வைத்துக்கொள்ளுங்கள். அதன்பின்பு மாவின் உள்ளே இந்த பூரணத்தை வைத்து உங்களுக்கு எந்த வடிவத்தில் வேண்டுமோ அந்த வடிவத்தில் கொழுக்கட்டையை செய்து இட்லிப் பானையில் வைத்து ஆவியில் 10 நிமிடங்கள் வரை வேக வைத்து எடுத்தால் போதும். சூப்பரான கொழுக்கட்டைகள் தயார் ஆகிவிடும்.

kozhukattai7

பின்குறிப்பு: நீங்கள் பச்சரிசி மாவில் சுடுதண்ணீரை ஊற்றி பிசையும் போது ரொம்பவும் கட்டியாக பிசைந்து விட்டால், கொழுக்கட்டை மிகவும் கல்லு போல வரும். அதே சமயம் நிறைய தண்ணீர் ஊற்றி மாவு பிசைந்து விட்டால் கொழுக்கட்டை பிசுபிசுவென வரும். அதை மட்டும் கவனமாக பார்த்து கொள்ளுங்கள்.

- Advertisement -