பூர்வ ஜென்ம பாவம் நீங்க பரிகாரங்கள்

poorva-jenma

உயிர்களில் மனித பிறவி ஒரு மிக சிறந்த பிறவி ஆகும். இந்த மனித பிறவியினால் மட்டுமே நன்மை, தீமை எவை என அறிந்து, இறைவன் குறித்த தேடலும், அந்த இறைவனை அடைவதற்கான முயற்சியிலும் ஈடுபடமுடிகிறது. ஜனன – மரண சுழற்சியில் மனிதர்கள் அனைவருமே தங்களின் முன்வினை பயன்களை அனுபவிப்பதற்காக மீண்டும் மீண்டும் பிறக்கவும், இறக்கவும் செய்கிறார்கள் என மிகப்பெரும் மகான்களும், ஞானிகளும் கூறுகின்றனர். அப்படி பூர்வ ஜென்ம தோஷம் எனப்படும் முற்பிறவி பாபங்களை தீர்ப்பதற்கான பரிகாரங்கள் குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

பூர்வ ஜென்ம பாவ பரிகாரம்

நாம் இப்போது வாழும் வாழ்க்கை, அதில் ஏற்படும் பல வகையான இன்ப, துன்ப அனுபவங்கள் எல்லாமே முற்பிறவியுடன் தொடர்புடையது என இந்து மற்றும் புத்த, சமண மதங்களின் சாத்திரங்களும் கூறுகின்றன.
பூர்வ ஜென்மத்தில் செய்ததால் இப்பிறவியில் துன்பங்களை அனுபவிப்பதாக நம்பும், கருதும் நபர்கள் தங்கள் செய்த பூர்வ ஜென்ம வினைகளுக்கான பயனை அனுபவித்தே தான் தீர வேண்டும். ஆனால் இப்பிறவியில் நமக்கு ஏற்படவிருக்கிற பூர்வ ஜென்ப வினை பயன்கள் தீவிர தன்மையை சில பரிகாரங்கள் செய்வதன் மூலம் நாம் குறைக்க முடியும்.

பூர்வ ஜென்ம கர்ம வினைப்பயன்களின் கடுமைத்தன்மையை குறைக்க விரும்புபவர்கள் மாமிச உணவுகள், போதை வாஸ்து போன்றவற்றை உண்பதை அறவே நீக்கிவிடுவது உத்தமமான பரிகாரம் ஆகும். தினந்தோறும் உங்கள் இல்லங்கள் அல்லது வேறு எங்காவது பறவைகளுக்கும், விலங்குகளுக்கும் உணவளிப்பதை வாடிக்கையாக்கிக் கொள்ளவேண்டும். சிவபெருமானின் கோவில்களுக்கு மகாசிவராத்திரி, சனிப்பிரதோஷம் போன்ற தினங்களில் சென்று வழிபடுவதும் நன்மையை ஏற்படுத்தும்.

feeding birds

வெள்ளிக்கிழமைகளில் பசுக்களுக்கு வாழைப்பழம், அகத்திக்கீரை போன்றவற்றை கொடுத்து வரவேண்டும். எப்போதும் முதியவர்களுக்கு அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்து, அவர்களிடம் ஆசிகளை பெறுவது சிறந்தது. குரு, துறவிகள், ஞானிகள் போன்றோருக்கு அன்னதானம் மற்றும் வஸ்திர தானம் செய்வது உங்களின் பூர்வ ஜென்ம பாவங்கள், கர்மவினைகள் போன்றவற்றை போக்கும் சிறந்த பரிகாரங்கள் ஆகும்.

இதையும் படிக்கலாமே:
மாங்கல்ய தோஷம் நீங்க பரிகாரம்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Poorva janma papam pariharam in Tamil. It is also called as poorva janma dosha pariharam in Tamil or poorva janma papm remedies in Tamil. Karma vinai theera pariharam is here.