மாங்கல்ய தோஷம் நீங்க பரிகாரம்

mangalyam-pariharam
- Advertisement -

“இருமனம் கலப்பது தான் திருமணம்”. சரியான வயதில் ஒரு ஆணும்,பெண்ணும் இணைந்து திருமண வாழ்வு மேற்கொள்வதை நம் முன்னோர்கள் வலியுறுத்தியிருக்கின்றனர். திருமணம் ஆன தம்பதிகள் நீண்ட காலம் வாழ வேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பமும், ஆனால் சில சமயங்களில் திருமணமான சில பெண்களின் கணவர்கள் குறைந்த காலத்திலேயே உயிரிழப்பதை நாம் காண்கிறோம். இத்தகைய நிலை ஒரு பெண்ணின் ஜாதகத்தில் இருக்கும் “மாங்கல்ய தோஷம்” காரணமாக ஏற்படக்கூடும். இந்த “மாங்கல்ய தோஷம்’ என்ன என்பதையும் அதற்கான பரிகாரங்கள் என்ன என்பதையும் இங்கு காணலாம்.

hindu marriage

மாங்கல்ய தோஷம் நீங்க பரிகாரம்

“மாங்கல்யம்” என்பது திருமணத்தின் போது பெண்களின் கழுத்தில் கணவன்மார்கள் கட்டும் “மங்கள நாண்” ஆகும். பெண்களின் ஜாதகத்தில் லக்னத்திற்கு 8 ஆம் இடம் நன்கு பலம் பெற்று இருக்கும் போது அவளது கணவனுக்கு தீர்காயுசு உண்டு. அதுவே இந்த எட்டாம் இடத்தில் சூரியன், சனி, செவ்வாய், ராகு, கேது போன்ற பாப கிரகங்கள் ஏதேனும் ஒன்று இருந்தாலும், இரண்டு பாப கிரகங்கள் ஒன்று கூடியிருந்தாலும், அனைத்து பாபகிரகங்களும் அந்த 8 ஆம் இடத்தில் ஒன்று கூடியிருந்தாலும், அப்பெண்ணிற்கு மாங்கல்ய தோஷம் இருப்பதாக உறுதி செய்யப்படுகிறது. 8 ஆம் இடத்தில் பாப கிரகங்கள் இருந்தாலும், அந்த பாபகிரகங்களுக்கு அந்த 8 ஆம் இடம் நட்பு, ஆட்சி பெற்ற வீடுகளாக இருக்கும் போதும், அந்த 8 ஆம் இடத்தை சுபகிரங்கள் பார்த்தாலும் மாங்கல்ய தோஷம் இல்லாமல் போகிறது.

- Advertisement -

மாங்கல்ய தோஷம் நீங்குவதற்கு பரிகாரமாக உங்கள் பரம்பரை அல்லது நெருங்கிய உறவுகளில் சுமங்கலியாக இறந்த பெண்மணியை முன்னோர்கள் வழிபாட்டிற்குரிய தினங்களில் வழிபட்டு வருவது மிகவும் ஆற்றல் மிக்க ஒரு பரிகாரம் ஆகும். அஷ்டமி, நவமி போன்ற திதிகள் இல்லாத ஏதேனும் ஒரு வளர்பிறை வெள்ளிக்கிழமை அன்று வீட்டில் “மாங்கல்ய பூஜை” செய்ய வேண்டும். சனிக்கிழமைகளில் ஆயுள்காரகனாகிய சனிபகவானை வழிபட்டு வர வேண்டும். பெண்ணை பெற்றவர்கள் பெண்ணுக்கு திருமணம் செய்யும் முன்பு குலதெய்வ கோவிலுக்கு சென்று பூஜைகள் செய்து வழிபடுவது சிறந்தது.

homam

ஏதேனும் ஒரு வளர்பிறை வெள்ளிக்கிழமையில் வீட்டில் மகாலட்சுமி பூஜை செய்து ஐந்து சுமங்கலி பெண்களை அழைத்து அவர்களுக்கு விருந்து படைத்து, அவர்களுக்கு ரவிக்கை துணி, மஞ்சள், குங்குமம், முகம் பார்க்கும் கண்ணாடி, சீப்பு , பழம், பூக்கள், பாக்கு, சந்தனம் போன்றவற்றை தானமளித்து, அவர்களை கிழக்கு திசை நோக்கி நிற்கச்செய்து, அவர்களிடம் ஆசிகளை பெற மாங்கல்ய தோஷம் நீங்கும். வீட்டில் ஒருமுறை “மிருத்யுஞ்சய ஹோமம் மற்றும் ஜபமும்” செய்தால் மாங்கல்ய தோஷம் நீங்குவதோடு, பல நல்ல பலன்களையும் அளிக்கும்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:
குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்க பரிகாரம்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Mangalya dosham pariharam in Tamil or Mangalya thosam in Tamil. Mangalya dosham remedies in Tamil and Mangalya dosham effects in Tamil are listed above.

- Advertisement -