ஜாதகப்படி யாருக்கெல்லாம் பூர்வீக சொத்துக்கள் கிடைக்கும் தெரியுமா ?

property

உழைப்பு என்பது இல்லாமல் சுக வாழ்க்கை என்பது இல்லை. அயராது உழைப்பவர்களால் மட்டுமே அவர்களின் எதிர்கால வாழ்க்கை சிறப்பாக இருப்பதோடு, அவர்களின் அடுத்த தலைமுறை பொருளாதார நெருக்கடியின்றி வாழவும் வழிவகை செய்ய முடிகிறது. அப்படி வீடு, நிலம், தோட்டம் என பலவித சொத்துக்களை தங்களின் அடுத்த தலைமுறைக்கு சம்பாதித்து வைத்து செல்கின்றனர். ஆனால் அப்படி சம்பாதித்த சொத்துக்கள் அனைத்தையுமே அவர்களின் வாரிசுகளால் அனுபவிக்க முடிவதில்லை. இத்தகைய நிலைக்கு ஜோதிடம் மற்றும் ஜாதக ரீதியில் என்ன காரணம் என்பதை இங்கு அறியலாம்.

ஒருவருக்கு பூர்வீக சொத்துக்களை அனுபவிக்க ஜாதகத்தில் தந்தைக்கு காரணமான “சூரியன்”, பூமிகாரகனாகிய “செவ்வாய்”, தாய் மற்றும் தந்தை வழி பாட்டனார்களுக்கு காரகர்களாக இருக்கும் ராகு – கேது போன்ற கிரகங்கள் நல்ல நிலையில் அமைய பெற்றிருக்க வேண்டும். இந்த கிரகங்கள் ஒருவரின் ஜாதகத்தில் பாதகமான அமைப்பில் இருந்தாலும், சுப கிரகங்களின் பார்வை பெற்றிருந்தால் நற்பலன்கள் ஏற்படும்.

ஒருவரின் ஜாதகத்தில் சூரியன் கிரகம் பாதகமான நிலையில் இருந்தால் தங்களின் தந்தையின் சொத்துக்களை அனுபவிப்பதில் பல சிக்கல்கள் ஏற்படும். நிலத்திற்கு காரகனாக இருக்கும் செவ்வாய் கிரகம் ஒருவரின் ஜாதகத்தில் பகையோ அல்லது நீச்சமோ பெற்றிருந்தால் பூர்வீக நிலங்களை இந்த ஜாதகர் அனுபவிக்க முடியாத நிலை இருக்கும். மேலும் சொத்துக்கள் சம்பந்தமாக சகோதரர்கள், பங்காளிகளுடன் தகராறு ஏற்பட்டு, நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கும் அளவிற்கு நிலைமை உண்டாகலாம். ராகு – கேது கிரகங்கள் பாதகமான நிலையில் இருந்தால் தங்களின் தாய் மற்றும் தந்தை வழி பாட்டனார்களின் சொத்துக்களை அனுபவிக்க பலவிதமான தடைகள், தாமதங்கள், இழுபறி நிலைகளை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும்.

இன்றைக்கு பலரும் தங்கள் முன்னோர்களின் பூர்வீக சொத்துக்களின் மீதான உரிமைக்காக நீதிமன்றங்களில் வழக்கு தொடுத்து, வழக்கில் தங்களுக்கு நியாயமான தீர்ப்பு கிடைக்க காத்துக்கொண்டிருக்கின்றனர். தங்களின் பூர்வீக சொத்துக்கள் மீண்டும் தங்களுக்கு கிடைக்க பெறுவதற்கு பரிகாரங்களாக தினமும் காலையில் குளித்து முடித்து விட்டு, உங்கள் பூஜை அறையில் மற்ற தெய்வங்களை வணங்குவதற்கு முன்பு உங்கள் குலதெய்வத்தையும், மறைந்த உங்கள் முன்னோர்களையும் மனதில் நினைத்து வணங்க வேண்டும்.

- Advertisement -

வளர்பிறை ஞாயிற்று கிழமைகளில் கோவிலில் சூரிய பகவானுக்கு கோதுமையை சமர்ப்பித்து, செந்தாமரை பூவை வைத்து வணங்குவதால் சூரியனின் நல்லாசிகள் கிட்டும். செவ்வாய்க்கிழமைகளில் முருக பெருமானையும், அதே செவ்வாய் கிழமைகளில் ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழ தீபமேற்றி வழிபட பூர்வீக சொத்துக்களை அடைவதில் இருக்கும் பிரச்சனைகள் நீங்கும். சனிக்கிழமைகளில் ராகு – கேது பகவான்களுக்கு விளக்கெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவதும் நற்பலன்களை தரும்.

இதையும் படிக்கலாமே:
எந்த தேதியில் பிறந்தவர்கள் எந்த நவகிரகத்தை வழிபட்டால் முன்னேறலாம் தெரியுமா

இது போன்று மேலும் பல ஜோதிடம் சார்ந்த தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have details of Poorvika sothu jathagam in Tamil. It is also called as Ancestor property jathagam in Tamil or Ancestral property astrology in Tamil.