பல வருடங்களாக இழுபறியில் இருக்கும் சொத்து பிரச்சனையை கூட, ஒரு நொடியில் முடிவுக்கு கொண்டுவர முடியும். இந்த வழிபாட்டை 6 வாரங்கள் செய்தால்!

murugan-om

நிறைய பேருக்கு பரம்பரை பரம்பரையாக வழிவழியாக வரக்கூடிய சொத்துக்கள் வராமல் இழுபறியாக தடைகள் இருக்கும். அதாவது பூர்விக சொத்துக்களை பங்கு பிரித்துக் கொள்வதில் பிரச்சனைகள் வரும் பட்சத்தில், வழக்குகள் பதியப்பட்டு கோர்ட் கேஸ் பிரச்சினையின் மூலம் தலைமுறை தலைமுறையாக, கைக்கு வரக்கூடிய சொத்துக்கள் வராமல் இழுபறியாக இழுத்துக் கொண்டே செல்லும் சூழ்நிலை நிலவும். இப்படிப்பட்டவர்கள் ஆன்மீக ரீதியாக செய்ய வேண்டிய ஒரு வழிபாட்டு முறையை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

muruga

உங்களுடைய வீட்டில் சொத்துப் பிரச்சனைகள் கோர்ட் கேஸ் வழக்குகல் இருந்தாலும், சொந்தபந்தங்கள் கையெழுத்திட்டு பங்கு பாகம் பிரிக்க வேண்டிய பஞ்சாயத்து இருந்தாலும், அதற்கான உடனடி தீர்வை வெறும் 6 வாரங்களில் கொடுக்கக் கூடிய சக்தி இந்த பரிகாரத்திற்கு உண்டு என்று சொன்னால் அது மிகையாகாது. ஆன்மீக ரீதியாக அந்த முருகப் பெருமானை நினைத்து செய்ய வேண்டிய பரிகாரம் இது.

பொதுவாகவே ஏறுமுகத்தில் செல்வதற்கு, முருகவழிபாடு கைகொடுக்கும் என்று சொல்லுவார்கள். உங்களுடைய வீட்டில் வியாழக்கிழமை, செவ்வாய்க்கிழமை மாதம்தோறும் வரும் சஷ்டி திதி அன்று முருகப்பெருமானை வழிபாடு செய்ய வேண்டும். சிறிய அளவில் உங்களால் எந்த உலோகத்தில் வேல் வாங்கி வைக்க முடியுமோ, அந்த அளவில் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய சக்திக்கு தகுந்தவாறு பணத்தைக் கொடுத்து வாங்கினால் போதும். செம்பு, பித்தளை, எந்த உலகத்தில் வாங்கினாலும் சரிதான். பஞ்ச உலோகத்திலும் வாங்கிக் கொள்ளலாம்.

Lord Murugan Vel

உங்கள் வீட்டில் இருக்கும் முருகப்பெருமானின் படத்திற்கு அருகில் இந்த வேலை வைத்து வியாழக்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமை இந்த இரண்டு தினங்களிலும் முருகருக்கு வாசனை மிகுந்த பூக்களை சூட்டி உங்களுக்கு இருக்கக்கூடிய, உங்க சொந்த பந்தங்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சனைகள் தீர வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ளுங்கள். 6 வாரம் முடிந்ததும் பத்திலிருந்து பதினைந்து நாட்களுக்குள் கட்டாயம் திருச்செந்தூர் முருகப் பெருமானை சென்று தரிசனம் செய்ய வேண்டும். இந்த வேல் உங்கள் வீட்டில் இருக்கும் நாள் வரை, உங்களுடைய வீடு சுத்தபத்தமாக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. அசைவம் கூட சமைக்கக்கூடாது.

- Advertisement -

திருச்செந்தூர் முருகப்பெருமானை தரிசனம் செய்வதற்கு முன்பாக, அதிகாலை வேளையில் சூரிய உதயத்தின் போது, காலை 6 மணி அளவில் சூரிய பகவானே நமஸ்காரம் செய்துவிட்டு, வீட்டில் வழிபாடு செய்த வேலை, நீங்கள் பூஜை செய்த வேலை, திருச்செந்தூர் கடலில் விட்டு விட வேண்டும். இதை நீங்கள் எந்த கிழமையில், எந்த நாளில் வேண்டும் என்றாலும் செய்யலாம்.

thiruchendur

அதன்பின்பு திருச்செந்தூர் முருகனை சந்தித்து தரிசனம் செய்து சொத்து பிரச்சினை தீர வேண்டும் என்று வேண்டிக் கொண்டால், எப்பேர்பட்ட பூர்வீக சொத்து பிரச்சனையும் ஒரு முடிவுக்கு வரும் என்பது நம்பிக்கை. இதோடு சேர்த்து, சொந்த பந்தங்களுக்குள் இருக்கும் சண்டை சச்சரவுகளும் சுமூகமாக முடிந்து விடும். நம்பிக்கை உள்ளவர்கள் முயற்சி செய்து பார்த்து பலன் அடையலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

இதையும் படிக்கலாமே
நீங்கள் வீட்டில் விளக்கு ஏற்ற பயன்படுத்தும் எண்ணெய் இதுவாக இருந்தால் நிச்சயம் பிரச்சனைகள் வரும்! வீட்டில் விளக்கு ஏற்ற எந்த எண்ணையை பயன்படுத்தலாம்? எதை பயன்படுத்தக்கூடாது?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.