நீங்கள் வீட்டில் விளக்கு ஏற்ற பயன்படுத்தும் எண்ணெய் இதுவாக இருந்தால் நிச்சயம் பிரச்சனைகள் வரும்! வீட்டில் விளக்கு ஏற்ற எந்த எண்ணையை பயன்படுத்தலாம்? எதை பயன்படுத்தக்கூடாது?

vilakku-oil

வீட்டில் விளக்கு ஏற்றுவதற்கு நாம் பயன்படுத்தும் எண்ணெய் எந்த எண்ணெயாக இருந்தால் நல்லது? ஏன் சில எண்ணெய்களை வீட்டில் பயன்படுத்தக்கூடாது? அப்படி பயன்படுத்தினால் என்ன நடக்கும்? நாம் பொதுவாக கோவில்களில் ஏற்றப்படும் எண்ணெய் எதுவாக இருந்தாலும் அதில் பிரச்சினையில்லை. அதாவது கோவில்களில் விளக்கேற்ற பயன்படுத்தும் எந்த எண்ணையும் தனித் தனியாகவும் அல்லது ஒன்று சேர்த்து கலந்து ஏற்றவும் செய்வார்கள். இது கோவிலில் மட்டுமே செய்யப்படும் ஒரு விஷயமாகும். இதை வீட்டிலும் நாம் செய்வது தேவையில்லாத பிரச்சனைகளை உண்டு பண்ணும் என்று சாஸ்திரங்கள் குறிப்பிடுகிறது. அதைப் பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

oil

பொதுவாக கோவில்களில் விளக்கு ஏற்ற நெய், நல்லெண்ணெய், இலுப்பை எண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் இந்த பஞ்ச தீப எண்ணெய்களை தனித்தனியாகவும், ஒன்று சேர்த்தும் கூட விளக்கு ஏற்றுவது வழக்கம். பஞ்ச தீப எண்ணெய் கொண்டு கோவிலில் விளக்கு ஏற்றினால் மந்திர சித்தி உண்டாகும் என்பது நம்பிக்கை. இதை இன்று வீட்டிலும் ஏற்ற துவங்கி விட்டோம். பஞ்ச தீப எண்ணை பயன்படுத்தி வீட்டில் விளக்கு ஏற்றக்கூடாது. இதனால் வீட்டில் தேவையில்லாத சண்டை, சச்சரவுகளும், மனக் கசப்புகளும் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.

வீட்டில் நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றலாம். அல்லது நெய் ஊற்றி தீபம் ஏற்றுவது சிறந்த பலன்களை கொடுக்கும். இதை தவிர பரிகாரம் செய்வதற்கு இலுப்பை எண்ணெய், தேங்காய் எண்ணெய் போன்றவற்றையும் பயன்படுத்துவது வழக்கம். ஆனால் இந்த ஐந்து எண்ணெய்களை எதையும் ஒன்றோடு ஒன்று கலந்து தீபமேற்றுவது வீட்டில் செய்யவே கூடாத செயலாகும். வாசனை தரும் என்பதற்காக இன்று எல்லா வீடுகளிலும் பயன்படுத்த ஆரம்பித்து விட்டனர். இதனால் வீட்டில் வீண் விரயங்களும், தம்பதிகளுக்குள் கருத்து வேறுபாடுகளும் ஏற்படுகிறது.

panjakavya-vilakku0

மனம் ஒருமித்த வாழ்வு வாழ வெள்ளிதோறும் சுத்தமான நெய் விளக்கு ஏற்றி வீட்டில் வழிபட நல்லது நடக்கும். செல்வ வளம் செழிக்க நல்லெண்ணெய் தீபம் ஏற்றுவது நன்மை தரும். கடலை எண்ணெய், பாமாயில், சூரியகாந்தி எண்ணெய், கடுகு எண்ணெய் ஆகிய எண்ணெய்களை ஒரு பொழுதும் வீட்டில் விளக்கு ஏற்ற பயன்படுத்தக் கூடாது. அப்படி பயன்படுத்தினால் பெரும் பாவமும், மனக் கவலையும் நிச்சயம் வந்து சேரும்.

- Advertisement -

கிரக தோஷம் நீங்க வீட்டில் சுத்தமான நல்லெண்ணெய் பயன்படுத்தி தீபம் ஏற்றலாம். கோவில்களில் குலதெய்வ ஆசீர்வாதம் பெற வேப்ப எண்ணெயில் தீபம் ஏற்றுவார்கள். மனதில் குழப்பங்கள் இருக்கும் பொழுது கோவிலில் தேங்காய் எண்ணெயில் தீபம் ஏற்றி வரலாம். நல்ல ஒரு தெளிவு பிறக்கும், முக்கிய முடிவுகளை சிறப்பாக எடுக்கும் வலிமையும் உண்டாகும்.

vilakku1

வீட்டில் விளக்கு ஏற்றும் பொழுது நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி அதில் தாமரை திரி போட்டு தீபம் ஏற்றினால் பாவங்கள் நீங்கும். வாழைத்தண்டு திரி போட்டு தீபம் ஏற்றி வர குழந்தை பேறு சீக்கிரம் உண்டாகும். நீண்ட ஆயுளும், செய்வினை கோளாறுகளும் நீங்க வெள்ளெருக்குப் பட்டைத் திரியில் தீபம் ஏற்றலாம். பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர மஞ்சள் நிற திரியை போட்டு தீபம் ஏற்றலாம். கடன் தொல்லை தீர சிகப்பு திரியைப் போட்டு தீபமேற்றி வரலாம்.

இதையும் படிக்கலாமே
இந்த 1 இலையை இப்படி செய்தால் எந்த ஒரு காரியமும் தடையின்றி வெற்றி அடையும்! வீட்டிலும் செல்வம் பெருக செய்யும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.