உடலுக்கு பலம் தரும் சத்தான பொரி உருண்டை செய்யும் முறை இதோ

முழுமுதற் நாயகனாகிய விநாயகர் பெருமானை வழிபடும் விநாயகர் சதுர்த்தி விழா இன்னும் சில நாட்களில் வரவிருக்கிறது. விநாயகரை வழிபடும் போது அவருக்கு பிடித்தமான பொரி உருண்டை செய்து, படைத்து வழிபடுவது சிறப்பு. மேலும் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த மற்றும் மிகவும் சுவையான ஸ்னாக் இந்த பொறி உருண்டை . இதனை சுலபமாக வீட்டிலே தயார் செய்து விடலாம். அதுகுறித்து இந்த பதிவில் காண்போம் வாருங்கள்.

pori-urundai

பொரி உருண்டை செய்ய தேவையான பொருட்கள்:

பொரி – 3 கப்
வெல்லம் – 1 கப்
சுக்கு பவுடர் – 1 டீஸ்பூன்
ஏலக்காய் பொடி – 1 டீஸ்பூன்

பொரி உருண்டை செய்முறை:

முதலில் ஒரு கடாயில் வெல்லத்தினை போட்டு அதனுடன் தண்ணீர் சேர்த்து வெல்ல பாகினை தயார் செய்து கொள்ளவும். வெல்லம் நன்றாக பாகு நிலையினை அடைந்தவுடன் அதனை வேறொரு பாத்திரத்தில் மாற்றி அதனை வடிகட்ட வேண்டும்.

- Advertisement -

pori-urundai

வடிகட்டிய பாகினை மீண்டும் கடாயில் ஊற்றி அதனுடன் சுக்கு பொடி மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும் பிறகு அடுப்பினை மிதமான சூட்டில் வைத்து அதில் பொரியினை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

pori-urundai

இப்போது அடுப்பினை அனைத்து சூடு ஆறுவதற்குள் அதனை உருண்டை வடிவில் பிடித்து தட்டில் வைத்து ஆறவைக்கவும். இவ்வாறு அனைத்து பொரியினையும் உருண்டை பிடித்து ஆறவைத்து எடுத்தால் சுவையான பொரி உருண்டை தயார்.

சமைக்க ஆகும் நேரம் – 15 நிமிடம்
சாப்பிடும் நபர்களின் எண்ணிக்கை – 3

இதையும் படிக்கலாமே:
உடலுக்கு குளிர்ச்சி தரும் புதினா துவையல் செய்யும் முறை

இது போன்று மேலும் பல சமையல் குறிப்புகள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Pori urundai recipe in Tamil. It is also called as Pori urundai seivathu eppadi in Tamil or Pori urundai seimurai in Tamil or Pori urundai seimurai in Tamil or Pori urundai eppadi seivathu in Tamil.