எல்லோரும் விரும்பி சாப்பிடும் பொரி உருண்டை இனி கடையில் வாங்க வேண்டாம் நொடியில் வீட்டிலேயே ஈசியாக தயார் செய்யலாமே!

pori-urundai_tamil
- Advertisement -

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு ஸ்நாக்ஸ் ரெசிபி என்றால் அது ‘பொரி உருண்டை’ என்று கூறலாம். இன்று பெரும்பாலான கடைகளில் கிடைக்க பெறாத பொரி உருண்டையை அந்த காலங்களில் விரும்பி சாப்பிட்டவர்கள் அதன் சுவையை எப்பொழுதும் மறப்பதில்லை. இந்த சுவையான பொரி உருண்டையை அருமையான முறையில் சுலபமாக எப்படி வீட்டில் தயார் செய்வது? என்பதை தான் இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் நாம் தொடர்ந்து அறிந்து கொள்ள இருக்கிறோம்.

தேவையான பொருட்கள்

  • வெல்லம் – ஒரு கப்
  • தண்ணீர் – அரை கப்
  • நெய் – ஒரு டேபிள் ஸ்பூன்
  • அரிசி பொரி – ஒரு படி.

செய்முறை

பொரி உருண்டை செய்வதற்கு ஒரு படி அளவிற்கு நல்ல மொறு மொறுன்னு பிரஷ்ஷாக இருக்கும் புத்தம் புதிய அரிசி பொரியை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். அப்பொழுது தான் பொரி உருண்டை நீண்ட நாட்களுக்கு நமத்துப் போகாமல் இருக்கும். சாப்பிடும் பொழுதும் மொறு மொறு என்று இருக்கும். வாங்கிய பொரியை ஒரு பாத்திரத்தில் கொட்டி வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு பாத்திரத்தை வையுங்கள். அரைக்கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள். தண்ணீர் சூடாவதற்குள் மண்டை வெல்லத்தை ஒரு கப் அளவிற்கு பொடித்து தண்ணீரில் சேர்த்து மூழ்கும் அளவிற்கு இருக்கிறதா? என்று பார்த்துக் கொள்ளுங்கள். பின்னர் நன்கு தண்ணீரில் வெல்லம் கரைந்து பொங்கி நுரை தள்ள வேண்டும். ஒரு கம்பி பதம் வரும் வரை கொதிக்க விட்டு அதில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு நெய் சேர்த்து கலந்து விடுங்கள்.

வெல்லப்பாகு சரியாக காய்ந்து இருக்கிறதா? என்று பார்ப்பதற்கு சிறிதளவு தண்ணீரில் வெல்லத்தை விட்டுப் பாருங்கள். வெல்லம் விட்டதும் கையில் எடுத்து உருட்டினால் உருண்டையாக வர வேண்டும். அதுதான் சரியான கம்பி பதம் ஆகும். பின்னர் அடுப்பை அணைத்து தயார் செய்துள்ள வெல்லப்பாகை நீங்கள் பாத்திரத்தில் எடுத்து வைத்துள்ள பொரியில் பாதி அளவிற்கு சேர்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது நன்கு பொரியை கிண்டி விடுங்கள். பின்பு மீதம் இருக்கும் வெல்லக் கரைசலையும் சேர்த்து ஒரு முறை நன்கு கலந்து விட வேண்டும். எல்லா இடங்களிலும் படும்படி கைப்படாமல் நன்கு கரண்டியிலேயே கலந்து விடுங்கள். பொரி உடைந்து விடக்கூடாது எனவே மென்மையாக பிரட்டி விடுங்கள்.

பின்னர் ரெண்டு கைகளிலும் கொஞ்சம் நெய்யை தடவிக் கொள்ளுங்கள். ஒரு கைப்பிடி அளவிற்கு பொரியை அப்படியே எடுத்து இரண்டு கைகளாலும் உருண்டை பிடிக்க வேண்டும். நன்கு அழுத்தம் கொடுத்து உருண்டையாக அழகாக வருமாறு அமுக்கி அமுக்கி ரவுண்டு ஷேப்புக்கு கொண்டு வாருங்கள். பிரிந்து விடாத படி நன்கு அழுத்தம் கொடுங்கள். பின்னர் எடுத்து ஒரு தட்டில் வைத்து விடுங்கள்.

இதையும் படிக்கலாமே:
சுவையான பன்னீர் பட்டர் மசாலா இனி கடைகளில் தான் வாங்கி சாப்பிட வேண்டும் என்று இல்லை! வீட்டிலேயே எப்படி மிக சுலபமாக செய்யலாம் தெரியுமா?

பின்னர் மீதம் இருக்கும் எல்லா பொரியையும் இதே போல உருண்டை பிடித்து வையுங்கள். அவ்வளவுதாங்க, எல்லோருக்கும் பிடித்த சூப்பரான பொரி உருண்டை சுவையான முறையில் வீட்டிலேயே எளிதாக இப்படித்தான் தயார் செய்ய வேண்டும். நீங்களும் ட்ரை பண்ணி அசத்துங்க.

- Advertisement -