- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalபொருளாதார பிரச்சினையை நீக்கும் வெண்கடுகு பரிகாரம்

பொருளாதார பிரச்சினையை நீக்கும் வெண்கடுகு பரிகாரம்

- Advertisement -

ஒருவருடைய வாழ்க்கையில் தீமை நடக்கிறது என்றால் அதற்கு அவர்களுடைய கர்ம வினைகளை காரணமாக திகழ்கின்றன. இந்த கர்மவினைகளின் பலனால் தான் பொருளாதார பிரச்சனை, கடன் பிரச்சனை, வேலையில் பிரச்சினை, வருமானத்தில் பிரச்சனை என்று பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கும். அந்த சூழ்நிலையை சமாளிப்பதற்கு நமக்கு தேவைப்படக்கூடிய ஒரு பரிகாரத்தைப் பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

வெண்கடுகு பரிகாரம்

ஒருவருக்கு அவருடைய பொருளாதாரத்தில் பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது என்னும் பட்சத்தில் அவர் அந்த பிரச்சினையை சரி செய்ய முயற்சி செய்வார். ஒரு சூழ்நிலையில் அந்த பிரச்சினையை சரி செய்ய முடியாத பட்சத்தில் தனக்கு தெரிந்தவரிடம் இருந்து கடன் வாங்கும் சூழ்நிலைக்கு ஆளாவார். இந்த கடன் வாங்கும் சூழ்நிலை உருவாகி விட்டாலே மறுபடியும் அதை சாதாரண நிலைக்கு கொண்டு வருவது என்பது மிகவும் கடினமான ஒன்றாகவே திகழ்கிறது. அந்த வகையில் இந்த அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணமாக திகழ்வது நம் வீட்டில் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்களே. அதனால் எதிர்மறை ஆற்றல்களை நாம் நீக்கினாலேயே பல பிரச்சினைகள் நமக்கு வராது. அந்த வகையில் எதிர்மறை ஆற்றல்களை நீக்கவும் பணப்பிரச்சினையை தீர்க்கவும் செய்யக்கூடிய ஒரு பரிகாரத்தை தான் பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

இந்த பரிகாரத்தை ஞாயிற்றுக்கிழமை அன்று தான் செய்ய வேண்டும். எந்த நேரத்தில் வேண்டுமானாலும் இந்த பரிகாரத்தை செய்யலாம். வேறு எந்த நிபந்தனையும் இந்த பரிகாரத்திற்கு கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு சிறிய அகல் விளக்கை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த அகல்விளக்கிற்கு உள்ளே ஒரு ரூபாய் நாணயத்தை வைத்துக் கொள்ளுங்கள். இதில் ஒரு ரூபாய் நாணயத்தை தான் பயன்படுத்த வேண்டும். வேறு எந்த நாணயத்தையும் பயன்படுத்தக் கூடாது. அதற்கு மேல் அந்த அகல் விளக்கை நிரம்பும் வரை வெண்கடுகை போட்டு சரிசமப்படுத்தி கொள்ளுங்கள்.

அடுத்ததாக 5 என்ற எண்ணிக்கையில் மிளகை வாங்கி அந்த வெண்கடுகுக்கு மேலே வட்ட வடிவில் இந்த ஐந்து மிளகுகளையும் வைக்க வேண்டும். பெரிய அகல் விளக்காக வைத்திருப்பவர்கள் ஏழு என்ற எண்ணிக்கையில் கூட மிளகை வைத்துக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இப்பொழுது இந்த அகல் விளக்கை நம்முடைய வீட்டு நிலை வாசல் கதவு இருக்கிறது அல்லவா அதை நாம் முழுமையாக திறக்கும் பொழுது ஒரு சுவற்றின் மீது தொடும். அப்படி இருக்கக்கூடிய சுவற்றிக்கும் நிலைவாசல் கதவிற்கும் நடுவில் இருக்கக்கூடிய பகுதியில்தான் நாம் தயார் செய்து வைத்திருக்கும் அந்த அகல் விளக்கை வைக்க வேண்டும்.

- Advertisement -

மூன்று மாதங்கள் ஆன பிறகு இதில் இருக்கக்கூடிய பொருட்கள் அனைத்தையும் கால்படாத இடத்தில் போட்டுவிட்டு புதிதாக பொருட்களை வாங்கி வைக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் இருக்கக்கூடிய ஒரு ரூபாய் நாணயத்தை சிவாலயத்தில் இருக்கக்கூடிய உண்டியலில் போட்டு விட வேண்டும். இப்படி செய்வதன் மூலம் நம் வீட்டில் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்கள் அனைத்தும் நீங்குவதோடு பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றமும் ஏற்படும்.

இதையும் படிக்கலாமே:சுபகாரிய தடை நீக்கும் குண்டு மஞ்சள்

இந்த எளிமையான பரிகாரத்தை நம்பிக்கை இருப்பவர்கள் முழு மனதுடன் செய்வதன் மூலம் அவர்கள் வீட்டில் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்கள் அனைத்தும் நீங்குவதோடு அவர்கள் வாழ்க்கையில் இருக்கக்கூடிய பொருளாதார பிரச்சனையும் நீங்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்