பண வசியம் ஏற்பட பௌர்ணமி வழிபாடு

sivan pournami
- Advertisement -

பௌர்ணமி தினத்தன்று வணங்கக் கூடிய தெய்வங்களில் சிவபெருமான் முக்கியமானவரும் முதன்மையானவரும் என்றே சொல்லலாம். ஏனெனில் தன்னுடைய சிரசினில் சந்திரனை எப்போதும் வைத்திருப்பவர் அவரே. சந்திர பகவானின் அதி தேவதையாக விளங்குபவரும் இந்த சிவபெருமான் தான்.

ஆகையால் தான் பெரும்பாலான பௌர்ணமி வழிபாடுகள் சிவபெருமானை கொண்டே செய்யப்படுகிறது. அப்படியான பௌர்ணமி தினத்தில் நம்முடைய செல்வ வளத்தை பெருக்கிக் கொள்ள சிவபெருமானை எப்படி வணங்க வேண்டும் என்ன செய்ய வேண்டும் என்பதை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

பண வரவை ஏற்படுத்தும் பௌர்ணமி தின சிவ வழிபாடு
பௌர்ணமி நாளில் சிவ வழிபாட்டை நாம் வீட்டில் செய்பவர்கள் மாலை நேரத்தில் செய்வது தான் உகந்தது. ஏனெனில் இந்த வழிபாடு செய்யும் பொழுது நாம் சந்திர தரிசனத்தையும் சேர்த்து செய்ய வேண்டும். ஆகையால் பௌர்ணமி தினத்தில் மாலை நேரத்தில் வீட்டில் பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்து விட்டு அதன் பிறகு சந்திர தரிசனத்தை காண்பது நல்லது.

அந்த நேரத்தில் “ஓம் சந்திரமௌலீஸ்வரர் நமஹ” என்ற சிவன், சந்திரன் இருவரையும் சேர்த்து சொல்லும் இந்த மந்திரத்தை சொல்வது நல்லது. அந்த நேரத்தில் நாம் என்ன வேண்டினாலும் அது நடக்கும் என்பது ஐதீகம். அதே போல் இப்படி வேண்டக் கூடிய நேரத்தில் நாம் கையில் ஒரு ரூபாயாவது வைத்திருக்க வேண்டும்.

- Advertisement -

தங்கம் வெள்ளி வைத்திருப்பவர்கள் அதை வைத்தும் வணங்கலாம். இதன் மூலம் நாம் எதை வைத்து வணங்குகிறோமோ அது பெருகும் என்பதும் சொல்லப்படுகிறது. இப்போது இன்றைய தினத்தில் நாம் ஆலயத்தில் செய்ய வேண்டியதை பற்றி பார்க்கலாம்.

அன்றைய தினத்தில் நாம் அருகில் உள்ள சிவாலயத்திற்கு சென்று சிவ தரிசனத்தை காண்பதை கட்டாயமாக செய்ய வேண்டும். அது மட்டும் இன்றி சிவன் அபிஷேக பிரியர் அவருக்கு எத்தனை அபிஷேகங்கள் செய்தாலும் அத்தனை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வர் என்பது அனைவரும் தெரிந்தது.

- Advertisement -

அன்றைய தினத்தில் சிவாலயத்திற்கு சுத்தமான பசுஞ்சான விபூதியும் வில்வ இலைகளையும் அபிஷேகத்திற்கு வாங்கித் தர வேண்டும். நம்முடைய பணத்தடைகளை நீக்கி பணவரவை தாராளமாக தர கூடிய சக்தி அன்றைய தினத்தில் செய்யும் இந்த தானத்திற்கு உண்டு. ஒவ்வொரு அபிஷேக பொருளுக்கும் ஒவ்வொரு வகையான பலன்கள் உண்டு.

இதையும் படிக்கலாமே: பங்குனி உத்திர வழிபாடு

அது போல இந்த தானத்தை செய்வதன் மூலம் நம்முடைய செல்வ வளம் அதிகரிக்கும். ஆகையால் பௌர்ணமி தினத்தில் பணத்தடை நீங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த பொருளை கோவிலுக்கு வாங்கிக் கொடுக்கலாம் என்ற இந்த தகவலுடன் நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -