உருளைக்கிழங்கும், முட்டையும் இருந்தால் சட்டுன்னு இப்படி ஒரு கட்லெட் ரெசிபியை செய்து பாருங்க, சாப்பிடும் பொழுதே எச்சில் ஊற ஆரம்பிக்கும்! வித்தியாசமான சுவை நிரம்பிய இந்த கட்லெட் செய்வது எப்படி?

potato-egg-cutlet_tamil
- Advertisement -

கட்லெட் என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக் கூடிய ஒரு ஸ்நாக்ஸ் வகையாக இருக்கிறது. மாலை நேரங்களில் ஏதாவது சாப்பிட வேண்டும் என்று தோன்றும் பொழுது உடனே செய்து அசைத்தி விடக்கூடிய இந்த கட்லெட் முட்டை மற்றும் உருளைக்கிழங்கை வைத்து செய்ய இருக்கிறோம். வித்தியாசமான சுவை உள்ள இந்த முட்டை உருளைக்கிழங்கு கட்லெட் இதே மாதிரி நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க, எல்லோரும் உங்களை பாராட்டி தள்ளிடுவாங்க! ருசியான இந்த உருளைக்கிழங்கு முட்டை கட்லெட் எப்படி செய்வது? என்பதை இனி தொடர்ந்து இந்த பதிவை படித்து தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

உருளைக்கிழங்கு முட்டை கட்லெட் செய்ய தேவையான பொருட்கள்:
முட்டை – மூன்று, உருளைக்கிழங்கு – கால் கிலோ, மிளகாய் தூள் – ஒரு ஸ்பூன், கரம் மசாலா – முக்கால் ஸ்பூன், உப்பு – தேவையான அளவு, பெரிய வெங்காயம் – ஒன்று, நறுக்கிய கருவேப்பிலை – சிறிதளவு, மல்லித்தழை – சிறிதளவு.

- Advertisement -

உருளைக்கிழங்கு முட்டை கட்லட் செய்முறை விளக்கம்:
உருளைக்கிழங்கு முட்டை கட்லெட் செய்ய முதலில் தேவையான அளவிற்கு உருளைக்கிழங்கை வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் உருளைக்கிழங்கை சுத்தம் செய்து தோலுடன் அப்படியே போட்டுக் கொள்ளுங்கள். உருளைக் கிழங்குடன் சேர்த்து நீங்கள் முட்டைகளையும் வேக வைத்துக் கொள்ளலாம்.

பத்து நிமிடம் வேக வைத்தால் முட்டை மற்றும் உருளைக்கிழங்கு நன்கு வெந்து வந்து விடும். அதன் பிறகு இவற்றை நன்கு ஆற வைத்து தோலை உரித்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். காய்கறி நறுக்கும் பெரிய துளை உள்ள துருவலில் வைத்து உருளைக்கிழங்கு துருவி எடுத்துக் கொள்ள வேண்டும். அதே போல நீங்கள் முட்டையையும் மெதுவாக துருவி எடுத்துக் கொள்ள வேண்டும். துருவிய உருளைக்கிழங்கு மற்றும் முட்டையுடன் சேர்த்து பொடி பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போட்டுக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

பின்னர் இதனுடன் நன்கு சுத்தம் செய்து பொடியாக நறுக்கிய கருவேப்பிலை மற்றும் மல்லி தழைகளையும் சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் உங்களுடைய காரத்திற்கு ஏற்ப மிளகாய் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் இந்த கலவைக்கு தேவையான அளவிற்கு உப்பு போட்டு நன்கு கலந்து கொள்ளுங்கள். இதில் தண்ணீர் எதுவும் சேர்க்க வேண்டாம். நீங்கள் சேர்த்துள்ள பொருட்களில் இருக்கும் ஈரப்பதமே போதுமானது. இப்போது மாவு தயார்! இந்த மாவை கட்லெட்டுக்கு தட்டுவது போல தட்டையாக தட்டிக் கொள்ளுங்கள். உங்களிடம் பிரட் கிரம்ஸ் இருந்தால், அதாவது பிரட் தூள் இருந்தால் அதில் நன்கு பிரட்டி எடுத்து பின் இந்த கட்லெட்டை தயார் செய்யலாம்.

இப்போது அடுப்பில் ஒரு தோசை கல்லை வைத்து காய வைத்துக் கொள்ளுங்கள். அதில் ஒவ்வொரு கட்லட் ஆக வைத்து சுற்றிலும் எண்ணெயை விட்டு நன்கு சிவக்க இரண்டு புறமும் பொறுமையாக வறுத்து எடுக்க வேண்டும். அடுப்பை மீடியமாக வைத்துக் கொண்டு பொறித்து எடுங்கள். அவ்வளவுதாங்க, இதை நீங்கள் மாலையில் ஸ்நாக்ஸ் வகையாக சாப்பிட்டு பாருங்கள், அட்டகாசமாக இருக்கும். ரொம்பவே ருசியாக இருக்கக்கூடிய இந்த உருளைக்கிழங்கு முட்டை கட்லெட்டை இதே மாதிரி நீங்களும் ட்ரை பண்ணி அசத்திடுங்க.

- Advertisement -