வெறும் ஒரு உருளைக்கிழங்கு இருந்தால் போதும். 20 நிமிடத்தில் சூப்பரான ஃபேசியல் முடிந்துவிடும். பெரிய பெரிய பார்ட்டிக்கு போவதற்கு கூட இனிமே பியூட்டி பார்லருக்கு போக வேண்டாம்.

face11
- Advertisement -

பெரிய பெரிய பார்ட்டி இருக்கு. ஒரு திருமணத்திற்கு செல்ல போகின்றோம். அல்லது வேறு ஏதாவது விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால் பார்ப்பதற்கு முகம் ரொம்பவும் அழகாக பொலிவோடு இருக்க வேண்டும் என்றால், உடனடியாக பியூட்டி பார்லருக்கு சென்று ஆயிரம் ரூபாய், இரண்டாயிரம் ரூபாய் என செலவு செய்து ஃபேசியல் செய்து கொள்வோம். ஆனால், அதற்கெல்லாம் இனி அவசியமே கிடையாது. உங்கள் வீட்டில் இருந்தபடியே முகத்தை பொலிவாக மாற்றுவதற்கு சூப்பரான ஒரு பேசியல் எப்படி செய்து கொள்வது என்பதை பற்றி தான் இந்த அழகு குறிப்பு. இதை செய்தாலே போதும். 20 நிமிடத்தில் அழகான முகம் தயாராகி விடும். வாங்க நேரத்தை கடத்தாமல் அந்த அழகு குறிப்பு என்ன என்று நாமும் தெரிந்து கொள்வோம்.

Step 1:
முதலில் முகத்தை கிளன்ஸிங் செய்ய வேண்டும். ஒரு சின்ன கிண்ணத்தில் கடலை மாவு, காய்ச்சாத பால், ஊற்றி கலந்து இதை முகம் முழுவதும் தடவி வட்ட வடிவில் மசாஜ் செய்ய வேண்டும். குறிப்பாக நெற்றி பகுதி, மூக்குப்பகுதி, தாடை பகுதிகளில் எல்லாம் பிளாக்கெட்ஸ் ஒயிட்எட்ஸ் இருக்கும் அல்லவா, அந்த இடத்தில் எல்லாம் கவனம் எடுத்து மசாஜ் செய்யுங்கள். ஐந்து நிமிடம் மசாஜ் செய்த பிறகு குளிர்ந்த நீரில் கழுவி முகத்தை துடைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

Step 2:
அதன் பிறகு உங்களுடைய முகத்தை உருளைக்கிழங்கு சாறால் மசாஜ் செய்ய வேண்டும். உருளைக்கிழங்கை துருவி அதை பிழிந்து எடுத்தால் கொஞ்சம் சாறு கிடைக்கும். அதை முகம் முழுவதும் தடவி மசாஜ் செய்யலாம். அப்படி இல்லை என்றால் உருளைக்கிழங்கை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்தும் அதை எடுத்து மசாஜ் செய்யலாம். ஆனால் உருளைக்கிழங்கு மொழுமொழுப்பாக அரைபடாது. கொஞ்சம் திப்பி திப்பியாகத்தான் இருக்கும். அதை கொஞ்சம் சிரமப்பட்டு முகத்தில் மசாஜ் செய்வது போல இருந்தால், உருளைக்கிழங்கு சாறு வைத்து நீங்கள் மசாஜ் செய்து கொள்ளுங்கள் தவறு கிடையாது. ஐந்து நிமிடம் முகத்தை மசாஜ் செய்து, பிறகு ஐந்து நிமிடம் கழித்து முகத்தை கழுவி விடுங்கள்.

Step 3:
அதன் பிறகு ஒரு ஃபேஸ் பேக் போட வேண்டும். சின்ன கிண்ணத்தில் தேவையான அளவு அரிசி மாவு, இந்த அரிசி மாவை கலப்பதற்கு தேவையான அளவு உருளைக்கிழங்கு சாறு ஊற்ற வேண்டும். ஒரு ஃபேஸ் பேக் உங்களுக்கு கிடைத்திருக்கும். இதை முகத்தில் அப்ளை செய்து 20 நிமிடங்கள் கழித்து கழுவி விட்டால் முகம் ரொம்ப ரொம்ப பொலிவா இன்ஸ்டன்டாக குலோ கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

பின்குறிப்பு: இதில் நாம் ஸ்டீமிங் செய்யவில்லை. அதாவது சுடச்சுட தண்ணீரில் முகத்தை ஆவி பிடித்து, முகத்தில் இருக்கும் பிளாக்கெட் ஒயிட்எட்ஸ் ரிமூவ் செய்ய வேண்டும். உங்களுடைய முகத்தில் ரொம்ப அதிகமாக பிளாக்கெட்ஸ், ஒயிட்எட்ஸ் இருந்தால் மட்டும் இந்த ஸ்டீமிங் மெத்தடை முயற்சி செய்யலாம். முகத்தை கிளன்ஸ் செய்த பிறகு, ஸ்டீமிங் செய்து பிளாக்கெட்ஸ் ரிமூவ் செய்யவும். அதிகமாக முகத்தில் பிளாக்கெட்ஸ் ஒயிட்எட்ஸ் இல்லை என்றால் ஸ்கிரப் செய்யும் போதே முகத்தில் இருந்து அதெல்லாம் நீங்கிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே: ஒருமுறை இந்த பொடியை தயார் செய்து உபயோகப்படுத்தினீர்கள் என்றால் மறுபடியும் ஷாம்பு, சீவக்காய் போன்ற எதற்கும் போகவே மாட்டீர்கள். அந்த அளவிற்கு முடியை பராமரிக்க கூடிய அற்புதமான பொடியாக திகழும்.

மேலே சொன்ன அழகு குறிப்பு பிடித்தவர்கள் பின்பற்றி பார்க்கவும். உங்களுக்கு ரொம்பவும் சென்சிடிவ் ஸ்கின் ஆக இருக்கும் பட்சத்தில் உருளைக்கிழங்கு சாறை முகத்தில் போடுவதற்கு முன்பு கொஞ்சம் பேட்ச் டெஸ்ட் எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -